Word |
English & Tamil Meaning |
---|---|
தூண்டு 2 | tūṇṭu, n. <>துண்டு-. Exciting, rousing; கிளப்பிவிடுகை. இந்தத் துண்டு எதற்கு? Loc. |
தூண்டுகுச்சி | tūṇṭu-kucci, n. <>id.+. See தூண்டுகோல். . |
தூண்டுகோல் | tūṇṭu-kōl, n. <>id.+. 1. Stick for trimming a lamp or wick; விளக்குத்திரி தூண்டும் ஈர்க்கு. மதிவிளக்கினை யயர்வறத் தூண்டுகோல் (பிரபுலிங். துதி.16). 2. Prime mover in an affair, directing agent ; |
தூண்மரம் | tūṇ-maram, n. <>தூண்+. See தூணாமரம்.(L.) . |
தூண்மாலை | tūṇ-mālai, n. <>id.+. Garlands arranged column-like in decorating a temple, etc. ; தூண்போல அலங்கரிக்கப்படும் மாலை. (J.) |
தூணம் 1 | tūṇam, n. <>தூக்கணம், Cord with a loop or rings to carry a pot ; பாத்திரந்தூக்க இடும் கயிற்றுச்சுருக்கு. கரகத்துக்குத் தூணம் போட்டான். (யாழ்.அக.) |
தூணம் 2 | tūṇam, n. <>sthūṇā. 1.Pillar, post, column ; தூண். பசும்பொற் றூணத்து (மணி.1,48). 2. Prop, support ; |
தூணம் 3 | tūṇam, n. cf. dūna. Antipathy, hatred ; பகை. (அக.நி.) |
தூணம் 4 | tūṇam, n. <>tūṇa. Quiver ; அம்புக்கூடு. (யாழ்.அக.) |
தூணம் 5 | tūṇam, n.(Astrol.) An inauspicious nakṣatra; அசுபநாள்வகை. (விதான குணா குண.37.) |
தூணாநிகனனநியாயம் | tūṇā-nikaṉaṉaniyāyam, n. <>sthūṇā + nikhanana +. Nyāya of firmly setting a pillar, illustrating the principle of establishing a matter once for all by examining it critically from all points of view ; தூணை நடும்போது ஆட்டியாட்டி உறுதிப்படுத்து வதுபோல் ஒருவிஷயத்தைப் பலபடியாக அசைத்து நிலைநாட்டும் நெறி. தூணாநிகனனநியாயத்தினால் நன்கு வலியுறுத்தப்பட்டதாயிற்று (சி.போ.தீ.வ.25) . |
தூணாமரம் | tūṇā-maram, n. <>sthūṇā +. Indian mahogany, l.tr., cedrela toona; நீண்ட மரவகை. |
தூணி 1 | tūṇi, n. <>tūṇi. Quiver ; அம்புப்புட்டில்.தூணி...ஒடுங்கிய வம்பின் (பதிற்றுப்.45, 1/2). |
தூணி 2 | tūṇi, n. <>drōṇa. [M.tūṇi.] A measure of capacity=4 marakkāl; நான்கு மரக்காலளவு, கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணி பதக்கென்று (நாலடி, 387) . |
தூணி - த்தல் | tūṇi-, 11.v. intr.<> தூண். To grow stout, big; பருத்தல். (யாழ்.அக.) |
தூணிகர் | tūṇikar, n. <>draviṇaka. Vaišya caste, the caste of merchants ; தனவைசியர். (நிகண்டு.) |
தூணியங்கம் | tūṇiyaṅkam, n. [M. tūṇiyāṅgam.]. Gum of the cluster fig ; அத்திப்பிசின். (மூ.அ.) |
தூணீரம் | tūṇīram, n. <>tūṇīra. Quiver ; அம்புக்கூடு. (யாழ்.அக.) |
தூத்தியம் | tūttiyam, n. <>dūtya An ambassador's mission ; தூதன் செயல் அல்லது மொழி. (சங்.அக.) |
தூத்திரக்கூர்ச்சம் | tūttira-k-kūrccam, n. Male quitch grass, Eragrostis cynosuroides; ஆண்தருப்பை. (தைலவ. தைல.) |
தூதகம் | tūtakam, n. <>tuttha. Copper sulphate ; துரிசு. (சங்.அக.) |
தூதம் | tūtam, n. <>dhūta. 1.Motion ; அசைவு. (யாழ்.அக.) 2. Abuse ; |
தூதர் | tūtar, n. A caste ; ஒரு சாதியார். Nā. |
தூதளை | tūtaḷai, n. See தூதுளை. (மூ.அ.) . |
தூதன் | tūtaṉ, n. <>dūta. 1. Messenger, news-carrier ; செய்தியறிவிப்பவன். வாலிதன்மகனவன்றன்றூதன் வந்தனென் (கம்பரா. பிணிவீட்டு.82). 2. Ambassador, envoy ; 3. Agent, servant ; 4.Spy, emissary, secret agent ; 5. Negotiator, one who treats for another in love-intrigues ; 6. Angel ; 7. Mercury ; 8. One who reports to the magician the details of poisonous bites ; |
தூதனம் | tūtaṉam, n. <>tējana. Bamboo ; முங்கில். (மலை.) |
தூதனிலட்சணம் | tūtaṉ-ilaṭcaṇam, n. <>தூதன் +. Posture and gestures of a messenger who carries news of a snake-bite to a magician ; பாம்புகடித்த செய்தியறிவிப்போன் நிற்கும்நிலை.(W.) |
தூத்தம் | tūttam, n. Corr. of தீர்த்தம்.Nurs. null null |