Word |
English & Tamil Meaning |
---|---|
தூதாடு - தல் | tūtāṭu-, v. intr. <> தூது2+ ஆடு-, To act as a messenger ; தூதாகப்போதல். நாடிநின் றூதாடித் துறைச்செல்லாள் (கலித்.72) . |
தூதாயி | tūtāyi, n. A plant ; பூண்டுவகை (சங்.அக.) |
தூதாள் | tūtāḷ, n. <>தூது2+ ஆள். See தூதன். வன்றொண்டர் நடத்தவொரு தூதாளாகி (சிவப். பிரபந் சிவஞா. பிள். வாரானை.3) . . |
தூதி | tūtī, n. <>dūtī. 1. A female messenger ; தூது செல்பவள். யான்விட வந்தவென் றூதியோடெ (திவ். பெருமாள். 6, 4). 2. One of the four poisonous fangs of a cobra ; |
தூதிகை | tūtikai, n. See தூதி, 1. (சங்.அக.) . |
தூதிடையாடல் | tūtiṭai-y-āṭal, n. <>தூது2 + இடை+. (puṟap.) Theme describing a confidante's love-embassy on behalf of her mistress; மாலைக்காலத்துத் தலைவியுற்ற துன்பநோக்கித் தோழி தலைவனிடம் தூதாகநடத்தலைக் கூறும் புறத்துறை. (பு.வெ.12, இருபாற்.3.) |
தூதிற்பிரிவு | tūtiṟ-pirivu, n.<>id.+. (Akap.) Separation of a hero from his beloved when he goes on a mission for his king; தன்னரசன் தூதாகத் தலைவன் பிரியும் பிரிவு. ஒதற்பிரிவுந் தூதிற்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன (தொல். பொ.26, உரை) |
தூது 1 | tūtu, n. perh. து-. Small pebble; கூழாங்கல். தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம் (கலித்.56, 16). |
தூது 2 | tūtu, n. <>dūta. 1.Embassy; இராசதூதர் தன்மை. (குறள், 69, அதி.) 2. Purport of an embassy; 3. Ambassador, envoy; 4. Negotiation in love-intrigues; 5. Message, Communication, news, errand; 6. A Kind of poem in kali-veṇpā which purports to be a message of love sent through a companion, a bird, etc., to effect a reconciliation; |
தூது 3 | tūtu, n. See தூதுவளை. தூதென விளங்குஞ். செவ்வாய்த் தோகையர் (இரகு. யாகப். 14) . |
தூதுணம் | tūtuṇam, n. <>தூது+உண்-. 1. A dove that eats pebbles; கூழாங்கல்லை உண்ணும் புறாவகை. (திவா.) 2. Weaver bird; |
தூதுணம்புறவு | tūtunam-puṟavu, n. <> தூதுணம்+. See தூதுணம். தூதுணம்புறவொடு துச்சிற் சேக்கும் (பட்டினப். 58.). . |
தூதுணி | tūtuṇi, n. <>தூது+உண்- See தூதுணம். (சங்.அக) . |
தூதுணை | tūtuṇai, n. prob. தூது+துணை. See தூதுவளை. Loc. . |
தூதுவளை | tūtu-vaḷai, n. prob. id.+வளை-. [M. tūduvaḷam.] Climbing brinjal, m. cl., Solanum trilobatum; கொடிவகை. (மலை.) |
தூதுவன் | tūtuvaṉ, n. <>id. 1. Messenger, ambassador; தூதன். தூதுவனொருவன்றன்னை யிவ்வழி விரைவிற் றூண்டி (கம்பரா. அங்கதன். 2). 2. Messenger in love-intrigues; 3. The Planet Mercury; |
தூதுவென்றி | tūtu-veṉṟi, n. <>id.+. (Puṟap.) A theme describing the success of an embassy; தூதுவன் தான் சென்ற காரியத்தில் அடைந்த வெற்றியைக் குறித்துக் கூறும் புறத்துறை (மாறனலங். 84, உரை, பக். 96.) |
தூதுளம் | tūtuḷam, n. <>தூதுளை. See தூதுவளை. (பிங்.) . |
தூதுளை | tūtuḷai, n. See தூதுவளை. (பிங்.) . |
தூதூவெனல் | tū-tū-v-eṉal, n. onom. expr. of the sound of spitting; ஊமிழ்தற்குறிப்பு. |
தூதை 1 | tūtai, n. [T. dutta, M. tūta.] 1. Small vessel made of earth, etc.; மண்முதலியவற்றால் இயன்ற சிறுகலம். முற்றிலும் தூதையும் (திவ்.நாய்ச்.2, 8). 2. Toy utensils of wood; 3. A small measure of capacity; |
தூதை 2 | tūtai, n. A small hammer; சிறு சம்மட்டி. (யாழ்.அக.) |
தூதைகூலம் | tūtai-kūlam, n. Cotton-Pricker பஞ்சுபன்னும் வில் . (M. M. 594.) |
தூந்துதுருப்பிடி - த்தல் | tūntu-turu-piṭi-, v. tr. <>தூர்-+. To make a close search into. See தூண்டித்துருப்பிடி-. (W.) |