Word |
English & Tamil Meaning |
---|---|
தூப்பா | tūppā, n. <>தூம்பு. See தூப்பாக்குழி. Loc. . |
தூப்பாக்குழி | tūppā-k-kuḻi, n. <>தூப்பா+ Gutter; சலதாரை. Rd. |
தூப்பிரதண்டி | tūppirataṇṭi, n. <>T. dūbaradiṇdi. 1. Spendthrift, extravagant person; கண்டபடி செலவழிப்பவ-ன்-ள். Madr. 2. Unruly person; |
தூபக்கால் | tūpa-k-kāl, n. <>dhūpa+. Censer-stand; தூபங்காட்டுங் கருவி. பெருந்தகைய தூபக்கா றீபக்கால் (திருவிளை. மூர்த்திவி. 28). |
தூபக்கிண்ணி | tūpa-k-kiṇṇi, n. <>id.+. See தூபமுட்டி. Loc. . |
தூபக்குடம் | tūpa-k-kuṭam, n. <>id.+. See தூபமுட்டி. Loc. . |
தூபகலசம் | tūpa-kalacam; n. <>id.+. See தூபமுட்டி. Colloq. . |
தூபங்காட்டு - தல் | tūpaṅ-kāṭṭu-, v. intr. <>id.+. 1. To offer incense, as before an idol கடவுள் முதலியோர்க்கு நறும்புகை சமர்ப்பித்தல். 2. To Make an offering; |
தூபங்கொடு - த்தல் | tūpaṅ-koṭu-,. v. intr. <>id.+. See தூபங்காட்டு-. . |
தூபபீடம் | tūpa-pīṭam, n. <>id.+. Altar where incense is offered; தூபங்காட்டும் பீடம். Chr. |
தூபம் | tūpam, n. <>dhūpa. 1. Incense, fragrant smoke, aromatic vapour; நறும்புகை. சலம்பூவோடு தூபமறந்தறியேன் (தேவா.946,6). 2. Smoke, fume; 3. Fire; 4. (Nāṭya.) A gesture with one hand in which the fore-finger and the middle finger are united and half bent; 5. Common cadamba. 6. Piny Varnish. 7. White piny varnish, l. tr., Vatica roxburghiana; 8. Black dammar. |
தூபம்போடு - தல் | tūpam-pōṭu-, v. <>தூபம் +. intr. 1. To burn incense invoking a spirit ot possess a person or reveal its presense in him; ஆவேசம் வருவித்தற்குத் தூபமிடுதல். Colloq. 2. To talk in flattering terms; To incite, Stir up; |
தூபமணி | tūpa-maṇi, n. <>id.+. Hand bell used while offering incense; கடவுட்குத் தூபம் முதலியன காட்டும்போது ஆட்டியொலிக்குங் கைம்மணி. (திவா.) |
தூபமுட்டி | tūpa-muṭṭi, n. <>id.+. Censer, thurible; நறும்புகைப்பண்டம் எரிக்கும் கலசம். மெல்லிய தூபமுட்டி. (சீவக.558). |
தூபயோகம் | tūpa-yōkam, n. <>id.+. 1. (Astrol.) An auspicious Yōga, in which the house occupied by Venus is the fifth house from that occupied by the lord of Mars'Navāmša, and ninth from that occupied by exaltation in the tenth house from the ascendent; செவ்வாயினமிசாதிபதிக்கும் சந்திரலக்கினாதிபதிக்கும் ஐந்து ஒன்பதிற் சுக்கிரனிருக்கப் பத்தாமிடத்தில் சனி உச்சமாயிருத்தலால் உண்டாம் சுபயோகம்.( சங். அக. : சோதிடக்கடல்.) 2. (Astrol.) An auspicious yōga in which the lord of the Navāmša occupied by the lord of the ascendant stands in the fifth house from the ascendant , with venus aspecting it; |
தூபரதண்டி | tūparataṇṭi, n. See தூப்பிரதண்டி.(W.) . |
தூபரம் | tūparam, n. tūbara Hornless beast ; கொம்பில்லா விலங்கு. (W.) |
தூபவருக்கம் | tūpavarukkam, n. <>dhūpa+. Articles of incense ; நறும்புகையுண்டாக்குதற்கு உரிய பண்டத்தொகுதி .(W.) |
தூபனம் | tūpaṉam, n. <>dhūpana. (யாழ்.அக.) 1. Incense ; தூபம். 2. Resin ; |
தூபாயிதம் | tūpayitam, n. <>dhūpāyita. Death by fire ; அக்கினியால் நேரும் மரணம் (யாழ்.அக.) |
தூபாரத்தி | tūpāratti, n. <>dhūpa + ārātrikā Colloq. 1.Offering of incense ; தூபங்காட்டுகை. 2. See தூபக்கால். |
தூபி | tūpi, n. <>stūpa. [T. tūpi.]. 1.Pinnacle, as of a tower, temple, palace, etc.; finial; விமானசிகரம். 2.Tower ; 3. Mountain peak ; 4. Top; roof, as of a house ; |
தூபிகை | tūpikai, n. <>stūpikā. See தூபி. தூபிகைச் சூளிகை பல பல தொட்டு வீசினான் (கந்தபு. நகரழி.22). |