Word |
English & Tamil Meaning |
---|---|
தூமம் | tūmam, n. <>dhūma. 1. Smoke ; புகை.தூமவே லரக்கர் (கம்பரா வேள்வி. 49). 2. Perfume ; 3. Censer ; 4.See தூமபுடம். வெங்கதிர்மே னான்கிராசி பன்மூன்று விளங்குபாகந் தங்கிடத் தூமம் (விதான. குணாகுண.54.) 5. Potter's kiln ; 6. See தூமகேது. தூமந் தோன்றினும் (புறநா. 117). 7. A deity first met with on the way to the world of the manes ; 8. Entire leaved tree of heaven ; 9. Bristly trifoliate vine. |
தூமம்போக்கி | tūmam-pōkki, n. <>தூமம்+. Chimney ; புகைப்போக்கி. (தைலவ.தைல.) |
தூமமணி | tūma-maṇi, n. <>id.+. See தூபமணி.தூமமணி யார்ப்ப (பு.வெ.10, பொது.8). . |
தூமமுட்டி | tūma-muṭṭi, n. <>id.+ muṣṭi Censer ; See தூபகலசம். (சீவக. 2592, உரை.) |
தூமரதம் | tūma-ratam, n. <>id.+. Steam engine, railway carriage ; புகைவண்டி . Mod. |
தூமலம் | tūmalam, n. <>dhūmala. (யாழ்.அக.) 1.Purple, dark red ; கருஞ்சிவப்பு. 2. Sin ; |
தூமாசீரணரோகம் | tūmācīraṇa-rōkam, n. <>dhūma + ajīrna +. A disease caused by indigestion ; அசீரணத்தாலுண்டாகும் நோய்வகை. (சீவரட்.90.) |
தூமாதிமார்க்கம் | tūmāti-mārkkam, n. <>id.+. Way to the world of the manes on which one has to pass by tūmam and other deities, dist. fr. arccirāti-mārkkam; பிதிர்லோகத்துக்குப்போகும் வழி. |
தூமான் 1 | tūmāṉ, n. cf. துமானம். Casket for jewels ; ஆபரணச்செப்பு. (சது.) |
தூமான் 2 | tūmāṉ, n. perh. dvi + மான். Throne ; சிம்மாசனம் .(W.) |
தூமியம் | tūmiyam, n. <>dhūmya. Smoke ; புகை. (யாழ்.அக.) |
தூமிரக்கல் | tūmira-k-kal, n. <>dhūmra +. Porphyry, an igneous rock ; உருக்குப்பாறை .Loc. |
தூமிரகம் | tūmirakam, n. <>dhūmraka. Camel ; ஒட்டகம். (யாழ்.அக.) |
தூமிரம் | tūmiram, n. <>dhūmra. Purple , dark red; கருஞ்சிவப்பு. |
தூமிராக்கன் | tūmirākkaṉ, n. <>Dhūmrākṣa. A Rākṣasa slain by Hanūmān ; அனுமானாற் கொல்லப்பட்ட ஒரரக்கன். (கம்பரா.) |
தூமை 1 | tūmai, n. prob. தூய்தன்மை. Catamenia ; மகளிர் சூதகம். பாவர்தூமையர்கள் கோளர் (திருப்பு. 363). |
தூமை 2 | tūmai, n. <>தூய்மை. (யாழ்.அக.) 1. See தூய்மை; . 2.Whiteness ; |
தூமைச்சீலை | tūmai-c-cīlai, n. <>தூமை1+. A term of abuse meaning cloth worn during menses ; ஓர் வசைச்சொல்.(W.) |
தூய்தன்மை | tūytaṉmai, n. தூய்து + அன்மை. 1. Impurity, uncleanness, as of body ; பரிசுத்தமின்மை. (திவா.) (நாலடி, அதி.5.) 2. Pollution ; |
தூய்து | tūytu, n. <>தூய் -மை. That which is pure, clean, immaculate, holy ; சுத்தமானது. (சூடா.) |
தூய்நெறி | tūy-neṟi, n. <>id.+. Spiritual path; path of virtue ; நன்னெறி. தூய்நெறியே சேரும்வண்ணம் (திருவாச.51, 4). |
தூய்மை | tūymai, n. 1.[M. tuma.] Purity, cleanness, immaculateness, holiness ; பரிசுத்தம். புறந்தூய்மை நீரான்மையும் (குறள். 298). 2 Truth ; 3. Salvation ; 4. Good ; |
தூய்வெள்ளை | tūy-veḷḷai, n. <>தூய்-மை+. Pure white ; சுத்த வெள்ளை. (யாழ்.அக.) |
தூய | tūya, adj. <>id. Clean, pure, holy ; பரிசுத்தமான.தூயமேனி (திருவாச.2, 112). |
தூயம் | tūyam, n. <>id. See தூய்மை. தற்கண்ட தூயமும் (திருமந்.2451). . |
தூயவன் | tūyavaṉ, n. <>id. 1. Pure and holy man, sage, ascetic; பரிசுத்தன். தீயவர்ச்சேர்தல் செய்தார் தூயவரல்லர் (கம்பரா. சடாயுவுயிர்.54). 2.Viṣṇu ; |
தூயவுடம்பினனாதல் | tūya-v-uṭampiṉaṉātal, n. <>id.+. Being immaculate in body, one of civaṉ- eṇ-kuṇam, q.v.; சிவனெண்குணத்துள் பரிசுத்தத் திருமேனியனாந் தன்மை. (குறள், 9, உரை.) |
தூயன் | tūyaṉ, n. <>id. See தூயவன்.தூயன்றுயக்கன் மயக்கன் (திவ். திருவாய்.1, 9, 6). . |
தூயாள். | tūyāḷ, n. <>id. 1.Pure, spotless woman ; பரிசுத்தமானவள், வரைபயந்த தூயாடன்றிருப்பாகன்(பெரியபு.தடுத்தாட்.199). 2. Sarasvati¢ ; |