Word |
English & Tamil Meaning |
---|---|
தூர்(ரு) 1 - தல் | tūr-, 4 v. intr. 1. [M.tūruka.] To be filled up; நிரம்புதல். இருடுர்பு புலம்பூர (கலித்.120) . 2.To be closed , choked up; 3. To be extinguished ; to perish; 4. To disappear; 5.To come to close quarters; |
தூர் 2 - த்தல் | tūr-, 11 v. tr. Caus. of தூர்1- . 1. To fill up, close up, as a well; to choke up, as a pit; அடைத்தல். கடாறு£ர்த்தன் மலையகழ்தல் (சீவக. 2165). 2. To hide,cover; 3. [T.tūṟisu.] To insert; 4. To pour forth in showers, as arrows; |
தூர் 3 - த்தல் | tūr-, 11 v. tr. [ M. tūlkuka.]. To sweep; பெருக்கிச் சுத்தஞ்செய்தல். சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக்கிடுதல் (உபதேசகா. சிவ புண்ணிய. 50). |
தூர் 4 | tūr, n. 1. Root; வேர். (பிங்.) 2. Bottom ; 3. Stump of a tree ; 4. Root-like formation about the stump of palmyras ; 5. Tree, especially young palmyras and coconuts ; 6. Rubbish at the bottom of a well ; 7. Dregs, mud ; 8. Bottom of a vessel; |
தூர்க்கை | tūrkkai, n. <>durgā. The 11th nakṣatra; பூரநாள். (பிங்.) |
தூர்கட்டு - தல் | tūr-kaṭṭu-, v. intr. <>தூர்+.Cm. 1. To grow with a big stump, as a young tree; மரஞ்செடி முதலியன அடிபருத்தெழுதல். 2. To grow in clusters; |
தூர்ச்சடி | tūrccaṭi, n. <>Dhūrjaṭi. šiva, as wearing heavy matted locks; [பாரமான சடை தரித்தவன்] சிவன்.யூதிகாத்துவாரப் பதிவயிற் றூர்ச்சடியெனவும் (காஞ்சிப்பு.இருபத்.106). |
தூர்த்தம் 1 | tūrttam, n. <>dhūrta. 1. Debauchery, lasciviousness; துன்மார்க்கம். (யாழ்.அக.) 2. Trumpet-flower nightshade. |
தூர்த்தம் 2 | tūrttam, n. Prob. தூர்-. Iron filings; அரப்பொடி. (யாழ். அக.) |
தூர்த்தன் | tūrttaṉ, n. <> dhūrta. 1. Debauchee, libertine; காமுகன். (திவா.) 2. A dissolute man fond of prostitutes; 3. Wicked person; |
தூர்த்தை | tūrttai, n. Fem. of தூர்த்தன். Unchaste woman; கற்பில்லாதவன். (சூடா.) |
தூர்மம் | tūrmam, n. perh. dhūmra. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.) |
தூர்வகம் | tūrvakam, n. <>dhūr-vaha. 1. Pack bullock; பொதியெருது. (சூடா.) 2. Bearing, sustaining, carrying; |
தூர்வம் | tūrvam, n. Navel; நாபி (சங்.அக.) |
தூர்வாசம் | tūrvācam, n. See துருவாசம். (யாழ். அக.) . |
தூர்வாசன் | tūrvācan, n. <>Durvāsa. See துருவாசம். (யாழ். அக.) . |
தூர்வாரி | tūr-vāri, n. <>தூர்+. Cleaner of wells; கிணறுகளில் தூர் வாரியெடுப்போன். Colloq. |
தூர்வாரு - தல் | tūr-vāru-. v. intr. <>id.+. To clean out, as a well; கிணற்று வண்டல்களை வாரி எடுத்தல். |
தூர்வு | tūrvu, n. <>தூர்-. Filling up, closing up, as of a well with rubbish; கிணறு முதலியன சேற்றால் அடைபடுகை. |
தூர்வை 1 | tūrvai, n. <>தூர். 1. Accumulation of rubbish in a well; கிணற்றடை தூர். தானே வந்தாலுந் தூர்வை யெடுக்கவொண்ணாது (திவ். இயற். திருவிருத். 12, வ்யா. 85). 2. Loosened earth, from digging or ploughing; 3. Rubbish, such as dry stricks, straws, dry leaves, etc.; 4. Ground adjacent to a well; |
தூர்வை 2 | tūrvai, n. <>dūrvā. Quitch grass. See அறுகு. (திவா.) தூவெள்ளரிசியுந் தூர்வைக்காடும் (திருவிளை. உக்கிர.23). |
தூர்வைக்காரன் | tūrvai-k-kāraṉ, n. <>தூர்வை+. 1. Sole proprietor of the soil about a well; கிணறுசார்ந்த நிலத்துக்கு உரியவன். (J.) 2. See தூர்வாரி. Colloq. |