Word |
English & Tamil Meaning |
---|---|
தூராகி | tūrāki, n. A Plant; எலிக்காது என்னுஞ் செடி. (தைலவ.தைல.125.) |
தூராடிகத்தலை | tūrāṭi-kattalai, n. <>trōṭika+. Sea-fish, dark grey, Sciaena belangeri; கடல்மீன்வகை. |
தூராதிதூரம் | tūrātitūram, n. <>dūra+ati-dūra. Very great distance; மிக்க தூரம். தூராதி தூரஞ் சொல்லத்தொலையாது (ஔவை.கு.ஞானம்பிரி.7). |
தூராதூரம் | tūrātūram, n. <>dūra+dūra. 1. Various distances; வெவ்வேறு தூரம். (W.) 2. Very great distance; |
தூரி 1 | tūri, n. perh. தூர்-. 1. Small shell, cowry; பலகறை. (W.). 2. Small outlet for irrigation; 3. See தூரிவலை. |
தூரி 2 | tūri, n. prob. dhurya. Ox; எருது. (W.) |
தூரி 3 | tūri, n. cf. dōlā Swing; ஊசல். (பிங்.) |
தூரி 4 | tūri n. See தூரிகை. (யாழ். அக.) . |
தூரி 5 | tūri, n. See தூரியம், 3. போர்ப்பணவந் தூரி (கம்பரா.பிரமாத்திர.5). . |
தூரிகை | tūrikai, n. <>tūlikā Painting reed or pencil, painter's brush; எழதுகோல். கையா லெடுத்தது துரிகை யேயன்று காரிகையே (வெங்கைக்கோ. 108). |
தூரிது | tūritu, n. <>தூரம். That which is far off or distant; சேய்மையானது. மிக்க தூரிதன்று பாண்டியனது செல்வமிக்க ஊர் (சிலப்.13, 133, உரை). |
தூரிய | tūriya, adj. <>id. Far off, distant, inaccessible; தூரமான. இல்லிடத்தினின்றுந் தூரிய இடத்தில் (கலித். 110, உரை). |
தூரியகண்டம் | tūriya-kaṇṭam, n. <>தூரியம்+. A musical instrument; ஓர் இசைக்கருவி. (யாழ். அக.) |
தூரியம் 1 | tūriyam, n. <>tūrya. 1. Musical instruments; வாச்சியப்பொது. அந்தி விழவிற் றூரியங் கறங்க (மதுரைக்.460). 2. Drum beaten on festive of joyful occasions; 3. A large drum; |
தூரியம் 2 | tūriyam, n. <>tūlikā. See தூரிகை. (சூடா.) . |
தூரியம் 3 | tūriyam, n. dūṣya. A kind of fine cloth; ஒருவகைத் துகில். (பிங்.) (சிலப்.14, 108, உரை.) |
தூரியம் 4 | tūriyam, n. <> dhurya. Pack bullock; பொதியெருது. (பிங்.) |
தூரியம் 5 | tūriyam, n. cf. tur. 1. Javelin, dart; கைவேல். (W.) 2. Missile; |
தூரியம் 6 | tūriyam, n. (அக. நி.) 1. Lead ஈயம். 2. Poison; |
தூரியன் | tūriyaṉ, n. <>தூரம். One who is far off or at a distance; தூரத்துள்ளவன். தூரியனாஞ் சிவன்தோன்றும் (சி.சி.8, 28). |
தூரிவலை | tūri-valai, n. <>தூரி+. A big fishing net; குப்பா எனும் பையுள்ள மீன்கள் வந்து விழும் வீசுவலை. Loc. |
தூரு - தல் | tūru-, 5 v. intr. [M. tūruka.] To go to stool; மலங்கழித்தல். Nā |
தூரு | tūru, n. See தூர். தூருகனத்தோடே . . . பாசன ஞ்செய் (தைலவ. பாயி. 15). . |
தூருவாசம் | tūruvācam, n. <>durvāsa. One of eighteen secondary purāṇās. See துருவாசம். (திவா.) |
தூரேத்தி | tūrētti, n. cf. trāyantī. A kind of wild chickweed. See கம்பந்திராய். (மலை.) |
தூரோணம் | tūrōṇam, n. <>drōṇa. Small purslane ; See கவிழ்தும்பை. (மலை.) |
தூலக்கட்டை | tūla-k-kaṭṭai, n. cf. தூலாக்கட்டை. Mainbeam of a house ; வீட்டின் உத்திரம் பத்துத் தூலக்கட்டை வீடு. |
தூலக்கடை | tūla-k-kaṭai, n. See தூலக்கட்டை. . |
தூலக்கடைவீடு | tūla-k-kaṭai-vīṭu, n. <>தூலக்கடை+. A house with cross-beams under the roof ; குறுக்கு உத்திரமுள்ள வீடு.(W.) |
தூலகம் | tūlakam, n. <>tūlaka. Common cotton ; See பருத்தி. (மலை.) |
தூலகன்மம் | tūla-kāṉmam, n. <>sthūla+. Acts performed through the mind, speech and body ; மனோவாக்காயங்களாற் செய்யப்படுங் கன்மம். (சி.சி.2, 13, மறைஞா.) |
தூலகாயம் | tūla-kāyam, n. <>id.+ See தூலதேகம். (யாழ்.அக.) . |
தூலகாலம் | tūla-kālam, n.<>id.+. Life time ; சீவியகாலம். (சங்க.அக.) |
தூலசகளத்துவம் | tūla-cakaḷattuvam, n. <>id.+.(šaiva.) A category ; See வித்தியாதத்துவம். (சி.சி, 1, 65, ஞானப்.) |
தூலசர்க்கரை 1 | tūla-carkkarai, n.<>id.+. Salt ; உப்பு. (சங்.அக.) |
தூலசர்க்கரை 2 | tūla-carkkarai, n. See தூலசருக்கரை. (சங்.அக.) . |