Word |
English & Tamil Meaning |
---|---|
தூலசரீரம் | tūla-carīram, n. <>sthūla+. 1.Gross material body with which the subtle body is invested ; சூட்சம சரீரத்தைப் போர்த்திருக்கும் பஞ்சபூதபரிணாமத்தா லூண்டான சரீரம். (சைவவி.7.) 2. Stout body; |
தூலசருக்கரை | tūla-carukkarai, n. <>tūla+šarkarā. Cotton seed ; பருத்திவிதை. (மூ.அ.) |
தூலசித்து | tūla-cittu, n. <>sthūla + cit. Individual soul ; சீவான்மா. உயிர் தூலசித்தாதலின் (சி.சி.7,.3, சிவஞா.). |
தூலசிவதத்துவம் | tūla-civa-tattuvam, n. <>id.+. (šaiva.) A gross form of civa-tat-tuvam , as manifest to Yogi's mind ; தூலமாகிய சிவதத்துவம். (சி.சி.8, 30, ஞானப்.) |
தூலதேகம் | tūla-tēkam, n. <>id.+. See தூலசரீரம்.தூலதேகமே யன்றிவண் சூக்கும வுடலும் (திருவானைக். திருமால்.7) . . |
தூலபஞ்சகிருத்தியம் | tūla-paca-kiruttiyam, n. <>id+. The five acts of šiva performed through the agency of His five manifest forms, viz., ciruṭṭi, titi, caṇkāram, tirōpavam, aṉukkirakam ; இறைவன் சராசரங்களிடம் பஞ்சமுர்த்திகளைக்கொண்டு செய்விக்கும் சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகம் என்கிற ஜந்தொழில்கள். (சி.சி.1, 65, ஞானப்.) |
தூலபஞ்சாக்கரம் | tūla-pacākkaram, n. <>id.+. See தூலபஞ்சாட்சரம் சூக்கும பஞ்சாக்கரமே தூலபஞ்சாக்கரரூபமாக நிற்பன (சி.போ.பா.4, 1, பக்.258) . . |
தூலபஞ்சாட்சரம் | tūla-pacāṭcaram, n. <>id.+. (šaiva.) The sacred mantra of šiva ; See பஞ்சாட்சரம். |
தூலபிசு | tūla-picu, n. <>tūla-picu. Cotton ; பஞ்சு. (மூ.அ) |
தூலபூதம் | tūla-pūtam, n. <>sthūla + bhūta . The gross elements ; கண்ணுக்குப் புலனாகும் பஞ்சபூதங்கள்.தூலமான வைம்பூதமுந் தோற்றுவித்து (திருக்காளத். பு.உலகின்றோ. 8) . |
தூலபோதம் | tūla-pōtam, n. <>id.+perh. bōdha. The visible body ; கண்ணுக்குப் புலப்படும் வடிவு.தூலபோதம் வருந்து பரமந்திரமாம் (தத்துவப். பாயி.2) . |
தூலம் 1 | tūlam, n. <>tūla. 1.Indian cotton plant. See பருத்தி. (மலை.) 2.Red-flowered silk cotton. See இலவு. (மலை.) 3.Cotton ; 4. A sedge, cyperus; |
தூலம் 2 | tūlam, n.<> sthūla. 1.Grossness, tangibility ; பருமை.தூலமா முருவினுக்குச் சூக்குமமுதல். (சி.சி.2, 50); 2. Gross, tangible materials, palpable essence, opp. to cūṭcumam ; 3. Vague generality, outline ; 4.[T.dūlamu, k.dūla.] Beam of a house ; 5. Threshing instrument, flail; 6. Sky ; |
தூலம் 3 | tūlam, n. cf. sthūla-šara. White long-flowered nail dye. See நீர்முள்ளி. (மலை.) |
தூலம் 4 | tūlam, n. <>dhūlaka. Poison ; நஞ்சு. (யாழ்.அக.) |
தூலமெய் | tūla-mey, n. <>தூலம்2+. See தூலசரீரம். தகுந் தூலமெய் மித்தியாத்தியாசம் (வேதா. சூ.91). . |
தூலலிங்கம் | tūla-liṅkam, n. <>sthūla+. 1.Temple tower, as a huge form of lingam ; கோபுரம்.தூலலிங்கமாந் தூபி (சைவவ.பொது.127.) 2. Temple of šiva shrine; |
தூலாசம் | tūlācam, n. cf. tūla-cāpa. Bow ; வில். (யாழ்.அக.) |
தூலி - த்தல் | tūli-, 11 v. intr.<> id. 1. To grow stout, bulky or corpulent; பருத்தல். அவன் தேகம் தூலித்துவிட்டது. 2. To increase, abound; |
தூலி | tūli, n. <>tūli. See தூலிகை . . |
தூலிகை | tūlikai, n. <>tūlikā,. 1. Painting reed or pencil ; எழுதுகோல். (சூடா.) 2. Swan's feather ; 3. Cushion ; 4. Wick ; |
தூலாருந்ததிநியாயம் | tūlāruntati-niyāyam, n. <>sthūla+. Nyaya in illustration of indicating that which is obscure by reference to a plain fact closely allied to it, as the star Arundhati is pointed out by a reference to the bigger star near it ; நுண்மையான அருந்ததி நட்சத்திரத்தைக்காட்ட அதன் அருகிளுள்ள பெரிய நட்சத்திரத்தைக்கொண்டு குறிப்பிடுதல்போல நுண்பொருளை விளக்குதற்கு அதன் சம்பந்தமான பருப்பொருளைக்கொண்டு குறிப்பிட்டுணர்த்தும் நெறி சுபக்கத்தைச் சிறப்பு வகையான் அறியலுறுவார்க்குத் தூலாருந்தநியாயம்பற்றி அதனைச் சிறந்தெடு |