Word |
English & Tamil Meaning |
---|---|
தூவையர் | tūvaiyar, n. <>தூவு. Flesh eaters ; இறைச்சியுண்போர். தூவையர்கள் சோகை முகநீலர் (திருப்பு.363) . |
தூள் | tūḷ, n. <>dhūli. 1.Dust, powder, particle ; துகள். (பிங்.) 2 .Medicinal powder ; 3. Curry powder ; 4. Snuff ; 5. Pollen ; 6 .The sacred ashes ; 7. Anything small collectively, as fish, stones, roots, etc.; 8. Lowest class of pearls, as very small; |
தூள்படு - தல் | tūḷ-paṭu, v.intr. <>தூள்+. To be expedited with great eclat ; தீவிரமாக காரியம் நடத்தல். காரியம் தூள்படுகிறது . |
தூள்படுத்து - தல் | tūḷ-paṭuttu-, v. <>id.+. tr. 1. To pulverise, reduce to powder ; ¢தூளாக்குதல். 2 To destroy utterly; To make a show of great strength or ability; |
தூள்மீன் | tūḷ-mīṉ, n. <>id.+. Small fish ; பொடிமீன்.(J.) |
தூள்விறகு | tūḷ -viṟaku, n. <>id.+. Firewood of small size ; பொடிவிறகு.(J.) |
தூளம் | tūḷam, n. <>dhūla See தூளனம்,1.(W.) . |
தூளனம் | tūḷaṉam, n. <>dhūlana. Besmearing one's body with the dry sacred ashes ; விபூதியை நீரிற்குழையாது பூசுகை. நீறுதூளனஞ் செய்திடின்(சிவரக.சிவதன்மா.23). 2.Dust ; |
தூளி 1 - த்தல் | tūḷi-, 11 v.intr. <>sthūla. To grow stout, bulky; பருத்தல். (W.) |
தூளி 2 - த்தல் | tūḷi-, 11 v.tr.<>dhūli. To besmear one's body with the dry sacred ashes; விபூதியால் உத்தூளனஞ் செய்தல். (சங்.அக.) |
தூளி 1 | tūḷi, n.<>dhūli. 1.Dust புழுதி. ஏத்துவார்க ளுழக்கிய பாததூளி படுதலாலிவ் வுலகம் பாக்கியஞ் செய்ததே (திவ். பெரியாழ்.4,4, 6). 2.Pollen ; |
தூளி 2 | tūḷi, n. <>sthūrin. Horse ; குதிரை. (அக.நி.) |
தூளி 3 | tūḷi, n. cf.dhvani. Noise, tumult ; ஆர்ப்பு. |
தூளி 4 | tūḷi, n. <>dōlā.Loc. 1.Dhooly swinging litter consisting of a frame suspended by its four corners from a pole டோலி. 2. Cradle-cloth ; |
தூளிகுச்சம் | tūḷi-kuccam, n. <>dhūliguccha. Fragrant powder ; கதம்பப்பொடி. (சங்க.அக.) |
தூளிகேதாரம் | tūḷi-kētāram, n. <>dhūli+kēdāra. Part of a rampart, bastion; கொத்தளம். (யாழ்.அக.) |
தூளிசாலம் | tūḷi-tālam, n. prob. dhūli + jāla. (Jaina.) The first compound-wall of a temple of Arhat; அருகக்கடவுளது கோயிலின் முதல்மதில் (மேருமந்.60, உரை.) |
தூளித்துவசன் | tūḷi-t-tuvacaṉ, n. <>dhūlidhvaja. Wind; காற்று. (யாழ்.அக.) |
தூளிதம் | tūḷitam, n. <>dhūlita. 1.Dust, that which is reduced to powder; பொடியானது. 2. The sacred ashes; |
தூளிமட்டம் | tūḷi-maṭṭam, n. <>தூளி3+. Ground-level; தரைமட்டம். (யாழ்.அக.) |
தூற்றல் | tūṟṟal, n. <> தூற்று-. [M. tūṟṟal.] See தூறல். . |
தூற்றலுந்தும்பலுமாய் | tūṟṟalun -tumpalum-āy, adv. See தூறலுந்தும்பலுமாய். Nā. . |
தூற்றாப்பொலி | tūṟṟā-p-poli, n. <>தூற்று+ ஆ neg. +. Grain-heap which has not been winnowed; துற்றாத நெற்குவியல். தூற்றாப்பொலி ஆலையிற் பாகுகாய்கின்ற புகையாற் பரக்கப்பட்டு (சிலப்.10, 151, உரை). |
தூற்றாரி | tūṟṟāri, n. <>id.+ ஆளி.. Prodigal, squanderer ஊதாரி. (w.) |
தூற்றி | tūṟṟi, n. <>id. Talebearer; புறங்கூறுவோன். Colloq. Sweeper; |
தூற்றிக்கொள்(ளு) - தல் | tūṟṟi,k-koḷ-, v. tr. <>id.+. To sift and select; தெரிந்துகொளுதல். தூற்றிக்கொளப்பட்டார் (சீவக. 2164) |
தூற்று 1 - தல் | tūṟṟu-, v. tr. [M. tūṟṟuka.] 1. To scatter, disperse, spread or strew; ¢சிதறுதல். தென்ற றூற்றுங் குறுந்திவலை (கம்பரா கடல்காண். 5). 2. [K. tūṟu.] To winnow 3. To throw up, as dust in the air; 4. To spread; 5. To publish abroad evil reports; to defame, slander; 6. To make known; 7. To squander, lavish, waste; |