Word |
English & Tamil Meaning |
---|---|
தூறுவாதி | tūṟuvāti, n. A tree; தீம்பாலையென்னும் மரம். (சங். அக.) |
தூறுவாயன் | tūṟu-vāyaṉ, n. <>தூறு-+. Slanderer; பழிகூறுவோன். |
தூனம்1 | tūṉam, n. <>dūna. Pain, affliction வருத்தம். |
தூனம் | tūṉam, n. <>dhūna. Motion; அசைவு. (W.) |
தூஷணம் | tūṣaṇam, n. <>dūṣaṇa. 1. Abuse, calumny, contumely, insult; நிந்தை; 2. Abusive language; 3. Obscenity, ribaldry, vulgarity; 4. Blasphemy; 5. Criticism, blame; |
தூஷணன் | tūṣaṇaṉ, n. <>Dūṣaṇa. A Rākṣasa, a cousin of Rāvaṇa; இராவணன் தம்பி முறையானான அரக்கன். |
தூஷணி - த்தல் | tūṣaṇi-, v. tr. <>tūṣaṇa. See தூஷி-. (W.) . |
தூஷி - த்தல் | tūṣi-, 11 v. tr <>dūṣ. 1. To revile, calumniate, slander; பழித்தல். 2. To blaspheme, vilify sacred things; |
தெ | te. . The compound of த் and எ. . |
தெக்கணம் | tekkaṇam, n. <>dakṣiṇa. South; தெற்கு. தெக்கண மலையகச் செழுஞ்சே றாடி (சிலப். 14, 81). Right side; |
தெக்கணாம்பட்டி | tekkaṇām-paṭṭi, n. See தெக்கணாமுட்டி. Loc. . |
தெக்கணாமுட்டி | tekkaṇā-muṭṭi, n. perh. dakṣiṇā+மட்டி. Loc. 1. Simpleton, fool முடன். 2. Lazy fellow; |
தெக்கணை | tekkaṇai, n. dakṣiṇā. Offering or present, as to guru; தட்சிணை. சீலுறு தெக்கணை கேளா நூலுறு மார்ப னுவன்றான் (உபதேசகா. சிவநாம.123). |
தெக்கித்திநோய் | tekkitti-nōy n. See தெற்கத்திநோய். Loc. . |
தெக்கு - தல் | tekku-, 5 v. tr. [K. tege, Tu. teguni.] To receive, take; கொள்ளுதல். தெக்கு நீர்த் திரைகள் மோதும் (தேவா. 839, 2). |
தெக்கு | tekku-, n. <>தெற்கு. [K. teṅka, M.tekku.] South; தெற்கு. (பிங்) சலவரைத் தெக்கா நெறியே போக்குவிக்குஞ் செல்வன் (திவ். பெரியாழ். 4, 2, 3). |
தெகிட்டு | tekiṭṭu, n. <>தெவிட்டு-. 1. Surfeit; தெவிட்டுகை. 2. [M. tekiṭṭu.] Vomiting sensation; |
தெகிடி | tekiṭi, n. cf. U. dhagar. (W.) 1. A game in gambling சூதுவிளையாட்டுவகை. 2. Fraud, deception; |
தெகிழ் - தல் | tekiḻ-, v. intr. <>திகழ்-. 1. To be manifest; to shine; விளங்குதல் தெகிழ்ந்த மாதவத் தேசினான் (விநாயகபு. 59, 29). 2. To blossom, open, as the mouth 3. To be full, |
தெகிள் | tekiḷ-, n. perh. தெகிழ்-. Hog creeper. See கொடிப்புன்கு. (L.) |
தெகுட்டி | tekuṭṭi, n. Turnsole. See தேட்கொடுக்கி, 1. (மலை.) |
தெகுட்டிகை | tekuṭṭikai, n. See தேட் கொடுக்கி, 1. (மலை.) . |
தெகுட்டு - தல் | tekuṭṭu-, 5 v. intr.<>தெவிட்டு-. To cloy, glut; தெவிட்டுதல் மாளாமையாலுந் தெகுட்டாமையாலும் (ஈடு, 6, 7, 1, ஜி.) . |
தெகுடாடு - தல் | tekuṭāṭu-, v. intr. prob. தெகிடு+. To struggle or strive hard; திண்டாடுதல். ப்ரத்யுபகாரந் தேடித் தெகுடாடா நிற்கிற என்னாலே (திவ், திருவாய், 7, 9, 10, இருபத்துநாலாயிரப்படி). |
தெகுள் - தல் [தெகுடல்] | tekuḷ-, 2 v. intr. cf. தெகிழ்-. 1. To be full, நிறைதல். (பிங்.) 2. To increase, overflow; |
தெகுளம் | tekuḷam, n. <>தெகுள்-. (யாழ். அக.) 1. Fulness; நிறைவு 2. Abundance; |
தெங்கங்காய் | teṅkaṅ-kāy, n. <>தெங்கு+. Cocount; தேங்காய். தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் (யாப்.வி.95, பக். 372). |
தெங்கணம் | teṅkaṇam, n. prob. ṭaṅkaṇa. A country; ஒரு தேசம். (W.) |
தெங்கநாடு | teṅka-nāṭu, n. <>தெங்கு+. An ancient province in the Tamil land, said to have been submerged by the sea; கடால்கொண்ட தமிழ் நிலப்பகுதி. ஏழ்தெங்க நாடும் (சிலப்.8, 2, உரை). |
தெங்கம் | teṅkam, n. <>id. . See தெங்கு, 1. தெங்கங்களு நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற்படப்பை (தேவா.846, 3). |