Word |
English & Tamil Meaning |
---|---|
தெங்கம்பழம் | teṅkam-paḻam, n. <>id.+. Mature coconut; தென்னைநெற்று. நாய்பெற்ற தெங்கம்பழம் (பழ.) |
தெங்கு | teṅku, n. prob. தென். 1. [K. teṅgu, M. teṅṅu.] Coconut-palm, l.tr., Cocos nucifera; தென்னை. தெங்கி னிளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு (புறநா.29); 2. Sweetness; 3. Quality of a fighting cock, a slang term; 4. An annular continent; |
தெச்சி | tecci, n. [M. tecci.] Scarlet jungle geranium. See வெட்சி. Loc. |
தெச | teca, n. <>dašan . Ten; பத்து. தெசவிதம தாய்நின்ற நாதங்க ளோவிட (தாயு சித்தர்.6). |
தெசகண்டன் | teca-kaṇṭaṉ n. <> Dasakaṇṭha. Rāvaṇa, king of Laṇkā, as ten-necked; [பத்துக்கழுத்தை யுடையவன்] இராவணன். தெச கண்டனையே தெறுந்தெவ்வருள் (இரகு. இந்து.6). |
தெசலம் | tecalam n. cf. rasāla. Sweet mango; See தேமா. (மலை.) |
தெசவம் | tecavam, n. cf. தெசலம். Mango See மாமரம். (மலை.) |
தெசனி | tecaṉi, n. perh. rajanī. 1. Country turmeric; மஞ்சள் 2. Bowstring hemp. |
தெசாகம் | tecākam, . Ceremony on the tenth day after death. See தசாகம். (சங்க்.அக.) |
தெசை | tecai, n. <>dašā. State, condition. See தசை4, 1.Colloq. |
தெட்சகன் 1 | teṭcakan, n. prob. rakṣaka. Supporter, saviour; இரட்சகன். (யாழ்.அக.) |
தெட்சகன் 2 | teṭcakan, n. <>Takṣaka. A divine serpent. See தட்சகன்1. (W.) |
தெட்சணதேசம் | teṭcaṇa-tēcam, n. <>தெட்சணம்+. Country south of theVindhya mountains; விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள தேசம். (W.) |
தெட்சணம் | teṭcaṇam, n. See தெட்சிணம். (யாழ். அக) . |
தெட்சணாதி | teṭcaṇāti, n. <>தெட்சணம். The southerner, South Indian; தென்னாட்டான். Loc. |
தெட்சணாமூர்த்தி | teṭcaṇā-mūrtti, n. <>id.+. 1. See தட்சிணாமுர்த்தி. . 2. Sage Agastya, as having his residence in the south; |
தெட்சணாவிருத்தம் | teṭcaṇā-viruttam, n. <>dakṣiṇāvartta. A conch in which the spiral turns to the right; வலம்புரிச்சங்கு. (W.) |
தெட்சணை | teṭcaṇai, n. See தெட்சிணை. (யாழ். அக.) . |
தெட்சிணகைலாயம் | teṭciṇa-kailāyam, n. <>dakṣiṇa+. šiva shrines of the south, as Chidambaram, Kāḷatti, Tiruvariyāṟu, etc., dist. fr. uttara-kailāyam; கைலாசத்தை ஒத்ததும் தெட்சண தேசத்திலுள்ளதுமான சிதம்பரம், காளத்தி, திருவையாறு போன்ற சிவதலம். |
தெட்சிணம் | teṭciṇam, n. <>dakṣiṇa+. 1. See தட்சிணம், 1, 2, 3. . 2. The southern country; |
தெட்சிணை | teṭciṇai, n. <>dakṣiṇā. See தட்சிணை. . |
தெட்ட | teṭṭa, adj. <>தெள்-. 1. Ripe, mellow; முற்றிய. தெட்டபழஞ் சிதைந்து (திவ். பெரியதி. 3,4,8). 2. Clear, plain; |
தெட்டத்தெளிய | teṭṭa-t-teḷiya, adv. <>id.+. Plainly, obviously; மிகத்தெளிய. (J.) |
தெட்டத்தெறி - த்தல் | teṭṭa-t-teṟi, v. intr. Redupl. of தெறி-. To break asunder snap in twain; இரண்டாய் முறிதல். (J.) |
தெட்டத்தெறிப்பான் | teṭṭa-t-teṟippāṉ n. <>தெட்டத்தெறி-. A term of abuse; ஒரு வசைச்சொல் . |
தெட்டரசர் | teṭṭaracar, n. <>தெட்டு-+. Vanquished kings; வென்றடிப்படுத்தப்பட்ட அரசர் பூம்புயத்துத் தெட்டரசர் கூட்டந் திறைகொணர விற்றிருந்தான் (பாரதவெண். 209). |
தெட்டல் | teṭṭal, n. <>id. 1. Misappropriation; அபகரிக்கை. (யாழ். அக.) 2.Trick, fraud, deception; |
தெட்டவர் | teṭṭavar, n. <>தெள்-. Clearsighted persons, men of unclouded vision ; தெளிந்தவர் பரமஞானம்போய்த் தெட்டவரல்லரேல் (கம்பரா. மந்திர.20). |
தெட்டி 1 | teṭṭi, n. <>தெட்டு-. 1.Deceitful person ; வஞ்சிப்பவ-ன்-ள். அணைமீதிற்றுயில் பொழுதேதெட்டிக ளவரேவற்செய்து (திருப்பு.777). 2.Elephant ; |
தெட்டி 2 | teṭṭi, n. <>செட்டி. Merchant ; வியாபாரி. (அக.நி.) |
தெட்டு 1 - தல் | teṭṭu, 5v.tr. 1.To deceive, cheat, defraud, swindle ; வஞ்சித்தல். தெட்டிப் பொருள் பறித்த பாவம் (பணவிடு.340). 2.To snatch ; |