Word |
English & Tamil Meaning |
---|---|
தெத்து - தல் | tettu-, 5 v.intr.<>தெற்று-. See தெற்று-. தடிகொடு தெத்தி (திருப்பு.602). . |
தெத்து 1 | tettu, n. 1. Hedge of bamboo of thorns ; See தெற்று2, 3. (W.) 2. Corner ; |
தெத்து 2 | tettu, n.<>datta. Adopted son ; சுவீகாரப்பிள்ளை. இனிதுறு தெத்துமைந்தன் (காசிக. சிவ.அக்.15). |
தெத்து 3 | tettu, n. <>perh.தெட்டு. cf.துத்து. Deception ; ஏமாற்று. Loc. |
தெத்துமாற்று | tettu-māṟṟu, n. <>தெத்து4 +. cf. துத்துமாற்று. Tricks; lies; chicanery ; வஞ்சகம்.(J.) |
தெத்தேயெனல் | tettē-y-eṉal, n. Onom. expr. Of singing ; ஓர் ஒலிக்குறிப்பு. தெத்தேயென முரன்று (தேவா.747, 1). |
தெந்தன | tentaṉa, n. See தெந்தனா. . |
தெந்தனம் | tentaṉam, n. <>தெந்தனவெனல். Carelessness ; கவலையற்ற தன்மை. தெந்தனவென்றே திரிந்ததுண்டேயோ (அருட்பா,vi, பிள்ளைப்பெரு. 98). |
தெந்தனமடி - த்தல் | tentaṉam-aṭi-, v.intr. <>தெந்தனம்+. 1. To loaf, loiter about ; வீணேரீதிரிதல். Colloq. 2.To shirk work ; |
தெந்தனா | tentaṉā, n. Set syllables used in marking time in music ; தாளச்சொற்கட்டு. (சங்.அக.) |
தெந்தி | tenti, n. <>தந்திபீசம். Croton ; See நேர்வாளம் . (மூ.அ.) |
தெப்பக்கட்டை | teppa-k-kaṭṭai, n. <>தெப்பம்+. 1. Raft, logs of a raft ; மிதவை. 2. Wooden shaft over the axle of a cart ; 3 .Protecting wooden frame at the bottom of a well ; 4. Wooden piece for attaching a bucket to a picotah; |
தெப்பக்குளம் | teppa-k-kuḷam, n. <>id.+. Tank attached to a temple in which the deity is floated on rafts during festival; தெப்பத்திருவிழா நடைபெறும் தடாகம் .தெப்பக்குளங் கட்டித்தேர்மண்டபங் கட்டி (குற்றா.குற.91, 4). |
தெப்பத்திருநாள் | teppa-t-tiru-nāḷ, n. <>id.+. See தெப்பத்திருவிழா. . |
தெப்பத்திருவிழா | teppa-t-tiru-viḻā, n. <>id.+. Floating festival in which a deity of a temple is taken on rafts in a tank ; தடாகத்திற் கோயின்முர்த்தியைத் தெப்பத்தின்மீது எழுந்தருளப் பண்ணிக்கொண்டாடும் திருவிழா. |
தெப்பம் | teppam, n. [T.K. teppa.]. Raft, float ; மிதவை. (திவா.) |
தெப்பல் 1 | teppal, n. See தெப்பம். Vul. . |
தெப்பல் 2 | teppal, n. <>T. debba. Beating drubbing ; அறை.Madr. |
தெப்பலங்கெட்டவன் | teppalaṅ-keṭṭavaṉ, n. <>dēha-bala+. Weak-bodied person ; பலவீனன்.Loc. |
தெப்பை | teppai, n. See தெப்பம். (மேருமந்1201, உரை.) . |
தெம்பல் | tempal, n. Hardening of ploughed land after heavy rain ; See தம்பல் . (J.) |
தெம்பாங்கு | tem-pāṅku, n. prob. தேன்+பாங்கு. 1.A kind of sandal paste ; ஒருவகைச் சந்தனம். (சங்.அக.) 2. See தெம்மாங்கு .Loc. |
தெம்பு | tempu, n. <>T. tempu. Colloq. 1.Physical strength ; தேகபலம் தேகத்தில் தெம்புள்ளவன். 2. Daring, bravery ; 3. Arrogance, pride ; 4. Energy, enthusiasm ; |
தெம்புரம் | tempuram, n. Indian lotus croton. See கண்டுபாரங்கி.(L.) |
தெம்மாங்கு | temmāṅku, n. perh. தென்+¢பாங்கு. A kind of ditty peculiar to the rustics of Southern India ; தென்னாட்டில் நாட்டுப்புறத்தார் பாடும் இசைப்பாட்டுவகை. Colloq. |
தெம்மாடி | temmāṭi, n. [ T. timmau, M. temmāṭi.]. Senseless person, fool, incompetent person ; ஒன்றுக்குழுதவாத அறிவீனன் . Colloq. |
தெம்மாண்டி | temmāṇṭi, n. See தெம்மாடி.Loc. . |
தெம்முனை | tem-muṉai, n. <>தெவ்1+. The front line of battle; battlefield ; போர்க்களம். தொலையாக் கற்பநின் றெம்முனையானே (பதிற்றுப்..80,17) . |
தெய் 1 | tey, n. perh. தேய்2-. Killing ; கொலை. (பிங்.) |
தெய் 2 | tey, n. <>daiva. The deity ; தெய்வம். (பிங்.) |
தெய்தி | teyti, n. <>tithi. Date, day of the month ; தேதி.Colloq. |
தெய்தெய் | tey-tey, n. Set syllables used for marking time in singing and dancing ; தாளக்குறிப்பு. (W.) |