Word |
English & Tamil Meaning |
---|---|
தெய்வஞ்செப்பு - தல் | teyva-ceppu-, v. intr. <>id.+. To invoke the aid of God; கடவுளைத் துணைவேண்டி வழிபடுதல். பகைபெருமையிற் றெய்வஞ் செப்ப (பதிற்றுப். 82, 1). |
தெய்வஞானம் | teyva-āṉam, n. <>id.+. Spiritual knowledge; தெய்வத்தைப்பற்றிய அறிவு. தெய்வஞானந் திறப்படக் காட்டி (பெருங். இலாவாண. 11, 134). |
தெய்வத்தச்சன் | teyva-taccaṉ, n. <>id.+. Višvakarma, as the celestial architect; விசுவகன்மா. தெய்வத்தச்சனைப் புகழ்துமோ (கம்பரா. ஊர்தேடு. 18). |
தெய்வத்தரு | teyva-t-taru, n. <>id.+. 1. Celestial tree கற்பக விருட்சம். தெய்வத்தரு வளரும் பொழிற் புறவம் (தேவா. 145, 2). 2. See தேவதாரு. (தைலவ. தைல. 14.) |
தெய்வத்தன்மை | teyva-t-taṉmai, n. <>di.+. Divine nature, godliness; கடவுளின் இயல்பு. |
தெய்வத்தானம் | teyva-t-tāṉam, n. <>id.+. Temple; தேவாலயம். தெய்வத்தானமோ டவ்வழி யொழிய (பெருங். உஞ்சைக். 43, 177). |
தெய்வத்தீர்வை | teyva-t-tīrvai, n. <>id.+. Divine judgment; தெய்வத்தின் தீர்ப்பு. (யாழ். அக.) |
தெய்வத்துரோகம் | teyva-t-turōkam, n. <>id.+. Sin against God, blasphemy, sacrilege; கடவுட்குச்செய்யும் பாதகம். Colloq. |
தெய்வத்துவம் | teyvattuvam, n. <>dēvatva. Godhood, godliness; கடவுட்டன்மை. (யாழ்.அக.) |
தெய்வத்துவனி | teyva-t-tuvaṉi, n. <>daiva +. (Jaina.) Shouts of praise to Arhat by the celestials; தேவர் அருகற்குச்செய்யுஞ் சிறப்புக்களுள் ஒன்று. சுடர்மண்டலஞ் சுரதுந்துபி தெய்வத்துவனி (திருநூற். 80). |
தெய்வதம் | teyvatam, n. <>daivata. 1. Deity, divinity; தெய்வம். ஆங்கத் தெய்வதம் வாரா தோவென (மணி. 9, 70). 2. year; |
தெய்வதயானை | teyvata-yāṉai, n. See தெய்வயானை. தெய்வதயானைகேள் (கந்தபு. தெய்வயா. 171). |
தெய்வதலம் | teyva-talam, n. <>daiva +. Temple; கோயில். Loc. |
தெய்வதுந்துமி | teyva-tuntumi, n. <>id.+. Celestial drum; தேவலோகமுரசு. சங்குந் தெய்வதுந்துமியுந் தழங்க (பிரபுலிங். விமலை. 32). |
தெய்வதூஷணம் | teyva--tūṣaṇam, n. <>id.+. Offence or insult offered to a, deity; blasphemy; கடவுள் நிந்தனை. Colloq. |
தெய்வதை | teyvatai, n. <>dēvatā. Deity. See தேவதை. திருவாக்குந் தெய்வதையும் . . . தேற்ற வழிபாடு செய்வதே (சிறுபஞ். 43). |
தெய்வநதி | teyva-nati, n. <>daiva+. The Ganges, as a sacred river; கங்கை. (பிங்) |
தெய்வநானம் | teyva-nāṉam, n.<>id.+. (šaiva.) Walking seven steps in an easterly direction in the rain while the sun shines; வெயிலெறிக்கும்போது பெய்யும் மழையில் கிழக்கு நோக்கி ஏழடி சென்றுமீளுகை. (தத்துவப். 47, உரை.) |
தெய்வநாஸ்திகன் | teyva-nāstikaṉ, n.<>id.+. Atheist; கடவுளில்லையென்னுங் கொள்கையோன். (W.) |
தெய்வநியமம் | teyva-niyamam, n.<>id.+. 1. Divine decree; judgment of heaven; கடவுளாணை. 2. Providential occurrence; |
தெய்வப்பகை | teyva-p-pakai, n.<>id.+. The evil planets believed to affect babies; பாலாரிஷ்டத்தை உண்டாக்குங் கிரகங்கள். செல்லும் மன்னோ சீவகன் றெய்வப்பகை வென்றே (சீவக. 364). |
தெய்வப்பசு | teyva-p-pacu, n.<>id.+. Celestial cow; காமதேனு. (பிங்.) |
தெய்வப்படை | teyva-p-paṭai,. n.<>id. Divine weapon; திவ்விய அஸ்திரம். தெய்வப்படையும் சினமுந் திறனும் (கம்பரா அதிகாயன். 50). |
தெய்வப்பலகை | teyva-p-palakai, n. <>id.+. The miraculous seat of Sangam poets; சங்கப்பலகை. வாங்கருந் தெய்வப்பலகையைச் சங்க மண்டபத்திடை நடுவிட்டு (திருவாலவா. 15, 4). |
தெய்வப்பாடல் | teyva-p-pāṭal, n.<>id.+. 1. Songs of the gods; தேவர் பாடும் கீதம். 2. Songs in praise of the gods, as at the opening of a dance; 3. Inspired song or hymn; |
தெய்வப்பாத்திரம் | teyva-p-pāttiram, n.<>id.+. Divine vessel or bowl, believed to become full with food whenever needed; தெய்வத்தன்மையுள்ள அட்சயபாத்திரம். தெய்வப்பாத்திரஞ் செவ்விதின் வாங்கி (மணி. 21, 151). |
தெய்வப்பாவை | teyva-p-pāvai, n.<>id.+. A woman-shaped statue in the kolli mount, believed to have been made by demons; கொல்லிப்பாவை. சிலைத்தொழிற் சிறுநுத, றெய்வப்பாவைபோல் (சீவக. 657). |
தெய்வப்பிரமம் | teyva-p-piramam, n.<>id. +. The divine lute of Brahmā; தெய்வத்தன்மையுடைய பிரமவீணை. தெய்வப்பிரமஞ் செய்குவோரும் (பரிபா. 19, 40). |
தெய்வப்பிறப்பு | teyva-p-piṟappu, n.<>id.+. See தெய்வப்பிறவி. . |