Word |
English & Tamil Meaning |
---|---|
தெய்வப்பிறவி | teyva-p-piṟavi, n.<>id.+. 1. Birth as celestials; தெய்வயோனியிற்சனனம். 2. Godly being; |
தெய்வப்புணர்ச்சி | teyva-p-puṇarcci , n.<>id.+. (Akap.) Union of lovers brought about by destiny; See இயற்கைப்புணர்ச்சி. தெய்வப்புணர்ச்சி செம்ம றுணிந்தது (திருக்கோ. 7, கொளு). |
தெய்வப்புலமை | teyva-p-pulamai, n.<>id.+. Poetic gift, as divinely inspired; தெய்வத்தன்மைவாய்ந்த புலமை. தெய்வப்புலமை யருந்திறல் வள்ளுவன் (குறள், சிறப்புப்பாயிரம்). |
தெய்வப்புள் | teyva-p-puḻ, n.<>id.+. Garuda, as the celestial bird ; (தெய்வத் தன்மையுள்ள பறவை) கருடன் தெய்வப்புள்ளேறி வருவான் சித்திரகூடத்துள்ளானே (திவ். பெரியதி.3, 3, 6). |
தெய்வப்பெண் | teyva-p-peṇ, n.<>id.+. Celestial nymph ; தேவலோகத்துமகள். (திவா.) தெய்வப் பெண் ணேத்திசைப்ப (திருவாச. 19, 6). |
தெய்வபத்தி | teyva-patti, n.<>id.+ bhakti. Devotion, piety, religious zeal ; கடவுளிடத்திற் செய்யும் அன்பு. |
தெய்வபயம் | teyva-payam, n.<>id.+. Fear of God ; கடவுளாணைக்கு அஞ்சுகை. |
தெய்வம் | teyvam, n.<>daiva. 1. God, deity; கடவுள். (சூடா) தெய்வ முணாவே (தொல் பொ.18). 2. Divine nature; 3. That which is divine; 4. Fate, destiny karma; 5. One of aṣṭavivākam , q.v.; 6. See தெய்வா தனம். 7. Year; 8. Fragrance; 9. Newness; |
தெய்வமணம் | teyva-maṇam, n.<>தெய்வம்+. 1. Divine fragrance; திவ்வியகந்தம். 2. See தெய்வப்புணர்ச்சி. 3. A form of marriage in which the sacrificer gives away his daughter to an officiating priest before the sacrificial fire, as the latter's fee ; |
தெய்வமணி | teyva-maṇi, n.<>id.+. 1. Celestial wishing-gem; சிந்தாமணி. (பிங). 2. Philosopher's stone; 3. Auspicious curl on a horse's neck; 4. Horse with a lucky curl; |
தெய்வமந்திரி | teyva-mantiri, n.<>id.+. Jupiter, as counsellor of the gods ; (தேவர்களுக்கு அமைச்சன்) வியாழன். (சுடா). |
தெய்வமயக்கம் | teyva-mayakkam, n.<>id.+. 1. Inspiration or obession by a spirit; தெய்வஆவேசம். தெய்வமயக்கத்தாற் கூறினாள் (சிலப் 12, 51, உரை). 2. See தெய்வமயக்கு, 1 . |
தெய்வமயக்கு | teyva-mayakku, n.<>id.+. 1. Trance induced by a deity ; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம். ஆங்குநிற் கொணர்ந்த வருந்தெய்வமயக்கும் (மணி, 21, 109.) 2. See தெய்வமயக்கம், 1. |
தெய்வமரம் | teyva-maram, n.<>id.+. See தெய்வத்தரு. (பிங்.) . |
தெய்வமாடம் | tayva-māṭam, n.<>id.+. See தெய்வத்தானம் தெய்வமாடமுந் தேர்நிலைக்கொட்டிலும் (பெருங். இலாவாண.7, 143) . |
தெய்வமாடு - தல் | teyvam-āṭu-, v. intr. <>id.+. To be possessed or inspired by a spirit ; தெய்வம் ஆவேசிக்கப்பெறுதல். Colloq. |
தெய்வமானுடம் | teyva-māṉuṭam, n.<>id.+. Semi-divine nature ; தெய்வத்தன்மை யோதுகூடிய மானிடத்தன்மை யான் அவளைத் தெய்வமானுட மென்றறிந்து (திருக்கோ. 251, உரை) . |
தெய்வமுறு - தல் | teyvam-uṟu-, v. intr. <>id.+. 1.To become possessed by a spirit ; ஆவேசமுறுதல். சாலினி தெய்வமுற்று (சிலப். 12, 8). 2. To attain godhood ; |
தெய்வமுனி | teyva-muṉi, n.<>id.+. Celestial sage, as Nāratar ; நாரதர் போன்ற தேவவிருடி. |
தெய்வமேயென்று | teyvam-ē-y-eṉṟu, adv.<>id.+. 1. Alone, without assistance, as with only God to help; (கடவுளே கதியாக) நீர்க்கதியாக. 2. Without interfering with others; 3. Without doing any work; |
தெய்வமேறு - தல் | teyvam-ēṟu-, v. intr. <>id.+. To be possessed by a spirit ; ஆவேசங்ககொள்ளுதல். |
தெய்வயாகம் | teyva-yākam, n.<>id.+. Sacrifice to deities ; See கடவுள்வேள்வி . . |
தெய்வயானை | teyva-yāṉai, n.<>di.+. 1. Indra's elephant ; ஐராவதம். 2. A wife of skanda ; |