Word |
English & Tamil Meaning |
---|---|
தெய்தெய்யெனல் | tey-tey-y-eṉal, n. <>தெய் onom+. 1. Expr. of dancing in rage; கோபத்தால் ஆடுதற்குறிப்பு, தெய்தெய்யென்று குதிக்கிறான். Colloq. 2. Onom. expr. of driving bullocks; |
தெய்ய | teyya, part. See தெய்யோ. சொல்லினித் தெய்ய யாந்தெளியுமாறே (அகநா.220). |
தெய்யோ | teyyō, part. A poetic expletive; ஓர் அசைநிலை. வாரா யாயின் வாழேந் தெய்யோ (ஐங்குறு.239). |
தெய்வக்கண்ணோர் | teyva-k-kaṇṇōr, n. <>தெய்வம்+. Persons having perfect spiritual knowledge; கேவலஞானமுடையவர். ஒரணுத்தெய்வக் கண்ணோ ருணர்குவர் (மணி. 27, 146). |
தெய்வக்கம்மியன் | teyva-k-kammiyaṉ, n. <>id.+. Celestial architect; தேவத்தச்சன். முழுவதும் வல்ல தெய்வக்கம்மியர் தம்மால் (திருவாலவா. 26, 11). |
தெய்வக்கல் | teyva-k-kal, n. <>id.+. Stone used for making idols; தெய்வவுரு அமைத்தற்குரிய சிலை. இமையமால்வரைத் தெய்வக்கல்லும் (மணி 26, 89). |
தெய்வக்காப்பு | teyva-k-kāppu, n. <>id.+. A section in piḷḷai-t-tamiḻ in which gods are invoked to protect the hero of the poem; பாட்டுடைத்தலைவனைத் தெய்வங் காக்கவென்று கூறும் பிள்ளைத்தமிழ்ப்பகுதி. (திவா.) |
தெய்வக்கிளவி | teyva-k-kiḷavi, n. <>id.+. 1. Divine speech; தெய்வவார்த்தை. திப்பிய முரைக்குந் தெய்வக்கிளவியின் (மணி. 7, 97). 2. Sanskrit, as the language of the gods; |
தெய்வக்குற்றம் | teyva-k-kuṟṟam, n. <>id.+. Divine displeasure, as due to non-performance of enjoined rites; பூசைமுதலியன செய்யாமையால் தெய்வங்கட்கு உண்டாம் கோபம். Colloq. |
தெய்வக்குறை | teyva-k-kuṟai, n. <>id.+. See தெய்வக்குற்றம். (W.) . |
தெய்வகடாக்ஷம் | teyva-kaṭākṣam, n. <>id.+. Divine grace; தெய்வத்தின் அருள். |
தெய்வகணம் | teyva-kaṇam,. n. <>id.+. 1. Celestial host; தேவக்கூட்டம். மன்பெருந் தெய்வகணங்களி னுள்ளேன் (மணி. 21, 130). 2. See தேவகணம். |
தெய்வகளை | teyva-kaḷai, n. <>id.+. Divine radiance, aṣ of the countenances of saints; தெய்வத்தின் சோபை. |
தெய்வகற்பனை | teyva-kaṟpaṉai, n. <>id.+ kalpanā. 1. Divine order or injunction, especially as uttered by an oracle; தெய்வக்கட்டளை. 2. Fate; |
தெய்வகுஞ்சரி | teyva-kucari, n. <>id.+ kujarī. See தெய்வயானை. (பிங்.) . |
தெய்வங்கொண்டாடி | teyvaṅ-koṇṭāṭi, n. <>id.+. A person possessed by a deity, evil spirit, etc.; தெய்வம் பேய் முதலியவற்றால் ஆவேசிக்கப்பட்டு ஆடுபவன். Nā. |
தெய்வங்கொள்கை | teyvaṅ-koḷkai, n. <>id.+. Theistic belief; கடவுள் உண்டென்னுங்கொள்கை. குலனரு டெய்வங்கொள்கை (நன். பாயி. 26). |
தெய்வச்சாயல் | teyva-c-cāyal, n. <>id.+. See தெய்வகளை. (W.) . |
தெய்வச்சிலையார் | teyva-c-cilaiyār, n. A commentator on collatikāram of Tolkāppiyam; தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரையிட்டவர்களுள் ஒருவர் |
தெய்வச்சிலையான் | teyva-c-cilaiyāṉ, n. <>தெய்வம்+. Viṣṇu, as worshipped at Tiruppulāṇi; திருப்புல்லாணியிற் கோயில்கொண்டுள்ள திருமால். தெய்வச்சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே (திவ். பெரியதி. 9, 4, 3). |
தெய்வச்செயல் | teyva-c-ceyal, n. <>id.+. 1. Providential occurrence, act of God, vis major; தெய்வத்தின் செய்கை. துரந்தான் றெய்வச்செயலன்ன கணையை (கம்பரா. அதிகாய.194). 2. Chance; |
தெய்வசகாயம் | teyva-cakāyam, n. <>id.+. God's help; கடவுள் துணை |
தெய்வசங்கற்பம் | teyva-caṅkaṟpam, n. <>id.+. God's will; தெய்வத்தின் தீர்மானம். |
தெய்வசாட்சி | teyva-cāṭci, n. <>id.+. God as witness; கடவுள் சாட்சி |
தெய்வசாட்சியாய் | teyva-cāṭci-y-āy, adv. <>id.+. A term of swearing, meaning 'before God, with God to witness'; சத்தியஞ்செய்யும் போது வழங்குவதும் கடவுள்சாட்சியாக என்று பொருள் படுவதுமாகிய தொடர். |
தெய்வசித்தம் | teyva-cittam, n. <>id.+. See தெய்வசங்கற்பம். . |
தெய்வசிந்தனை | teyva-cintaṉai, n. <>id.+. Divine meditation, contemplation of the deity; தெய்வத்தியானம். |
தெய்வசுரபி | teyva-curapi, n. <>id.+. Celestial cow; காமதேனு. (சங்.அக) |
தெய்வசோதனை | teyva -cōtaṉai, n. <>id.+. Trial of a person by God, subjecting him to suffering or hard treatment; கடவுளின் சோதிப்பு. |