Word |
English & Tamil Meaning |
---|---|
தெருக்கதவு | teru-k-katavu, n.<>தெரு+. Street door ; தெருப்பக்கத்தில் அமைந்த கதருவு . Colloq. |
தெருக்காட்சிகொடு - த்தல் | teru-k-kāṭci-koṭu-, v. tr. <>id.+. To publish what should be kept secret ; இரகசியமாய் வைத்திருக்கவேண்டியதை விளம்பரப்படுத்துதல். Nā. |
தெருக்கால் | teru-k-kāl, n.<>id.+. Post planted near a marriage-house in the first night of a wedding ceremony ; வீட்டருகில் பரவர்நடும் முகூர்த்தக்கால். Parav. |
தெருக்காவல் | teru-k-kāval, n.<>id.+. Patrol of streets ; தெருவிற்செய்யுங் காவல். |
தெருக்குத்து | teru-k-kuttu, n.<>id.+. Inauspicious position of a house being opposite to a street ; தீமைபயக்குமாறு தெருவுக்கு நேராக விடு அமைந்திருக்கும் நிலை அந்த வீடு தெருக்குத்தாக உள்ளது . Colloq. |
தெருக்குத்துவா | teru-k-kuttuvā, n. 1. A herring ; See கோடக்குத்துவா. 2. A herring, bluish, clupea kunzei ; |
தெருக்கூத்து | teru-k-kūttu, n.<>தெரு+. Colloq. 1. Dramatic performance or dance in a street; தெருவெளியில் நடக்கும் நாடகம். 2. That which is a public disgrace; |
தெருக்கோலம் | teru-k-kōlam, n.<>id.+. Decoration on the side of the walls facing a street ; தெருப்பக்கத்துள்ள கவரிலிடுங்கோலம் . Nā. |
தெருட்சி | teruṭci, n.<>தெருள்-. 1. Knowledge, wisdom, understanding; அறிவு. (பிங்). 2. Clearness; 3. Attaining puberty ; |
தெருட்டல் | teruṭṭal, n.<>தெருட்டு-. Rubbing the lute-string to test the tone ; யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை சீருடனுருட்ட றெருட்டல் (சிலப்.7, கட்டுரை) . |
தெருட்டிக்கலியாணம் | teruṭṭi-k-kaliyāṇam, n.<>தெருட்டு+. See தெருட்டுக்கலியாணம். . |
தெருட்டு - தல் | teruṭṭu-, 5 v. tr. Caus. of தெருள்-. 1. To inform, make known; அறிவுறுத்துதல். தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச் செவிலித்தாய் சொல்லியது (ஐங்குறு-380, உரை). 2. To convince, persuade, enlighten the mind ; 3. To pacify, make up a love-quarrel; 4. To confirm, assure; 5. To rub and test the tone of a lute string; |
தெருட்டு | teruṭṭu,. n.<>தெருட்டு-. (யாழ். அக.) 1. Infroming, convincing; அறிவிப்பு. 2. Consoling, pacifying; 3. Attaining puberty, as of a girl; |
தெருட்டுக்கலியாணம் | teruṭṭu-k-kaliyāṇam, n.<>தெருட்டு+. 1.Consummation after a child-wife attains puberty; இருதுசாந்தி. 2. Ceremony at the time of a girls' becoming marriageable; |
தெருண்டபெண் | teruṇta-peṇ, n.<>தெருள்-+. A girl who has attained puberty ; இருதுவான பெண். |
தெருணை | teruṇai, n. Potato plum of mysore, s.tr., scolopia crenata ; மரவகை.(L.) |
தெருத்திண்ணை | teru-t-tiṇṇai, n.<>தெரு+. Pial facing street ; வாயிற்புறத்துள்ள திண்ணை. Colloq. |
தெருப்பங்காளி | teru-p-paṅkāḷi, n.<>id.+. One who lives in the same street ; ஒரு தெருவில் வாழ்வவோன் . Loc. |
தெருப்பள்ளிக்கூடம் | teru-p-paḷḷi-k-kūṭam, n.<>id.+. Pial-school ; வாயிற்றிண்ணையில் அமைந்துள்ள பள்ளிக்கூடம். |
தெருப்பாய்ச்சல் | teru-p-pāyccal, n.<>id.+. See தெருக்குத்து. Loc. . |
தெருப்பிள்ளை | teru-p-piḷḷai, n. The most wealthy and influential man of a street ; தெருவிற் பெரியவராயுள்ளவர். Loc. |
தெருமரல் | terumaral, n. <>தெருமரு-. 1. Giddiness, confusion, perplexity, distress ; மனச்சுழற்சி. அலமர. றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி (தொல். சொல். 311). 2. Fear ; |
தெருமரு - தல் | terumaru-, 13 v. intr. To be unnerved; to sink under distress; to be confused in mind ;' மனஞ் சுழலுதல் வளைமுன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு (கலித்.51). |
தெருமறிச்சான் | teru-maṟiccāṉ, n.<>தெரு+. Tattis placed across a street preventing the untouchables from entering it during a festival ; திருவிழாக் காலங்களில் தீண்டாச்சாதியார் வாராதபடி தெருவையடைத்துவைக்குந் தட்டி. Nā. |