Word |
English & Tamil Meaning |
---|---|
ஆகம்பிதமுகம் | ākampita-mukam n. <>id.+. (Nāṭya.) Nod of approbation, one of 14 muka-v-apinayam, q.v.; சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை. |
ஆகமசாஸ்திரம் | ākama-cāstiram n. <>ā-gama+. A class of sacred works in Sanskrit, Saiva, Vaiṣṇava, Sākta or Jaina; சைவ வைணவ சாக்த சைன தந்திரங்கள். |
ஆகமம் | ākamam n. <>ā-gama. 1. Sāstras, scriptures, one of six piramāṇam, q.v.; வேதசாஸ்திரங்கள். (பிங்) 2. Scriptures believed to be revealed by God and peculiar to Saivism, Vaiṣṇavism, Sāktism or Jainism; 3. Augment, letter or syllable inserted in the combination of two words or two parts of a word; |
ஆகமமலைவு | ākama-malaivu n. <>id.+. Anything contrary to Scriptures; சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி.121.) |
ஆகமவளவை | ākama-v-aḷavai n. <> id.+. (Log.) Scriptures, one of three sources of knowledge; சததப்பிரமாணம். (குறள்.37, உரை.) |
ஆகமனம் | ākamaṉam n. <>ā-gamana. Coming, arrival; வருகை. |
ஆகயர் | ākayar n. <>U. ākhir. End, close; முடிவு. |
ஆகர்ஷகம் | ākarṣakam n. <>ā-karṣaka. That which is attractive; கவர்வது. மனசுக்கு ஆகர்ஷகமாயிருக்கிற சோலை. |
ஆகர்ஷணசக்தி | ākarṣaṇa-cakti n. <>ā-karṣaṇa+. Power of drawing to oneself, force of gravitation; கவருஞ் சக்தி. |
ஆகர்ஷணம் | ākarṣaṇam n. <>ā-karṣaṇa 1. Pulling, drawing near, attracting; இழுக்கை. 2. Magic art of summoning an absent person into one's presence, one of aṣṭa-karumam, q.v.; |
ஆகர்ஷி - த்தல் | ākarṣi- 11 v.tr <>ā-karṣa. 1. To draw towards oneself, attract, fascinate; இழுத்தல். 2. To invoke or adjure a demon, summon a spirit; |
ஆகரம் 1 | ākaram n. <>ā-kara. 1. Mine of precious stones; இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள்.736, உரை). 2. Source, seat, abode, storehouse; |
ஆகரம் 2 | ākaram n. A mineral poison; சாலாங்கபாஷாணம். (மூ.அ.) |
ஆகரி 1 - த்தல் | ākari- 11 v.tr. <>āhr. To send for, secure, get; தருவித்தல். ஐவகை வண்ணமுமாகரித் தூட்டி (பெருங். உஞ்சைக்.38. 149). |
ஆகரி 2 | ākari n. <>āhirī. (Mus.) A special melody-type, specially suitable for singing at midnight; ஓர் இராகம். (சிலப்.14, 166, உரை.) |
ஆகருடணம் | ākaruṭaṇam n. <>ā-karṣaṇa. 1. Attracting, pulling. See ஆகர்ஷணம். அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17). 2. Calling, invitation. summons; |
ஆகலாகல் | ākal-ākal part. See ஆகவாக. (தொல்.சொல்.280, சேனா.) |
ஆகவபூமி | ākava-pūmi n. <>ā-hava+. Battle-field; போர்க்களம். (பிங்.) |
ஆகவம் | ākavam n. <>ā-hava. War, battle; போர். (பாரத.பதின்மூன்.97). |
ஆகவனீயம் | ākavaṉīyam n. <>ā-havanīya. One of three sacred fires connected with Srauta ritual in which oblations are generally offered, q.v.; வேதாக்கினி வகை. (திருமுரு.181, உரை.) |
ஆகவாக | āka-v-āka part. <>ஆ-+. An expression which either repudiates or doubts a statement; உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை. (தொல்.சொல்.280. சேனா.) |
ஆகவியன் | ākaviyaṉ n. <>āhavya. Warrior; போர்வீரன். (நிகண்டு.) |
ஆகவும் | ākavum v.intr. <>ஆ-. May it be; ஆகுக. இத்தன்மம் முட்டில்... மன்றப்பெறுவதாகவும் (S.I.I.iii, 94). Colloq. |
ஆகவே | ākavē adv. and conj. <>id. Wherefore, therefore, consequently; ஆதலால். |
ஆகளரசம் | ākaḷa-racam n. Opium; அபின். (தைலவ.தைல.135.) |
ஆகன்மாறு | ākaṉ-māṟu adv. ஆ-. Since, because, considering that; ஆகையால். பிறர்க்கென வாழ்திநீ யாகன்மாறே (பதிற்றுப்.38, 16). |
ஆகஸ்மிகம் | ākasmikam n. <>ākasmika. Accidental, unforeseen, unexpected, sudden; எதிர்பாராமற் சம்பவிப்பது. |
ஆகா 1 | ākā int. 1. An exclamation expressive of wonder; வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு! 2. An exclamation expressive of assent; |
ஆகா 2 | ākā n. <>Hāhā. Hāhā. a Gandharva associated with Hūhū; ஒரு கந்தருவன். (நைடத. அன்னத்தைத்தூ.66.) |
ஆகாக்களங்கு | ākākkaḷaṅku n. A prepared arsenic; மிருதாரசிங்கி. (மூ.அ). |