Word |
English & Tamil Meaning |
---|---|
ஆகாத்தியம் | ākāttiyam n. [T. agātyamu, K. āgātya.] Pretence, simulating agony or injury, outrageous behaviour such as threatening to commit suicide; பாசாங்கு. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி. |
ஆகாதவன் | ākātavaṉ n. <>ஆ-. 1. One who is not friendly, enemy; பகைவன். 2. Use less person; 3. A wicked man; |
ஆகாதே | ākātē int. <>id. Is it not so?, shall it not be? அல்லவா? அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே (திருவாச. 49, 1). |
ஆகாமி | ākāmi n. <>ā-gāmin. Prospective right and privilege which possession of an estate may bring in its wake one of aṣṭapōkam, q.v.; அஷ்டபோகத்தொன்றாகிய பிற்காலத்து அனுபவிக்கப்போகுஞ் சுதந்திரம். |
ஆகாமியம் | ākāmiyam n. <>ā-gāmya. Karma which is yet to come, actions good and bad of the present life which are expected to bring their rewards in future births, one of three karumam, q.v.; இறப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள். மேல்வரு மாகாமியமு நாடாமல் (திருக்காளத். பு. 12, 28) . |
ஆகாயக்கக்கரி | ākāya-k-kakkari n. <>ā-kāša+. Variety of kakri-melon; கக்கரிவகை. (பதார்த்த. 705.) |
ஆகாயகங்கை | ākāya-kaṅkai n. <>id.+. The celestial Ganges; மந்தாகினி. (மணி. பதி. 17.) Also ஆகாச கங்கை. |
ஆகாயகணம் | ākāya-kaṇam n. <>id.+. Metrical foot of two nirai (====) and one nēr (-), as கருவிளங்காய் considered inapt and so boding evil when used at the commencement of a poem; செய்யுட்கணத்தொன்று. (இலக். வி. 800, உரை.) |
ஆகாயகமனம் | ākāya-kamaṉam n. <>id.+. Art of walking in the air, one of aṟupattunālu- kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.) |
ஆகாயச்சொல் | ākāya-c-col n. <>id.+. (Dram.) Literally, a speech in the air, used in dramas as a stage direction, when a character on the stage puts questions to some one who is not actually present and listens also to an imaginary speech, supposed to be reply from the person so addressed; இல்லாதானெருவனை முன்னிலைப்படுத்தித் தானேகூறும் பேச்சு. (சிலப். 3, 13, உரை.) |
ஆகாயசூலை | ākāya-cūlai n. <>id.+. A disease of horses; குதிரைநோய்வகை. (அசுவ. 50.) |
ஆகாயப்பிரவேசம் | ākāya-p-piravēcam n. <>id.+. Art of entering into the air and becoming invisible, disappearing into air, one of aṟupattunālukalai, q.v.; அறுபத்து நாலுகலையுள் ஆகாசத்திற் புகுந்து மறையும் வித்தை. (W.) |
ஆகாயம் | ākāyam n. <>ā-kāša. See ஆகாசம். . |
ஆகாயமாஞ்சி | ākāya-māci n. <>id.+ māmsi. Spikenard. See சிறு சடாமாஞ்சி. (மலை.) |
ஆகாயவல்லி | ākāya-valli n. <>id.+. Gulancha. See சீந்தில். (மலை.) |
ஆகாயவாசிகள் | ākāya-vācikaḷ n. <>id.+vāsin. A class of demi-gods, sky-dwellers, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்துளொரு சாரார். (திருமுரு. 168, உரை.) |
ஆகாரசமிதை | ākāra-camitai n. <>aghāra+samidh. Two pipal twigs dipped in ghee and placed one at the north-east and the other at the south-east corner of the grhya sacred fire; ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.) |
ஆகாரம் 1 | ākāram n. <>ā-kāra. 1. Shape, form, figure, outline, structure; உருவம். ஆகாரமழகெறிப்ப (பாரத. வசந்தகா. 19). 2. Body; |
ஆகாரம் 2 | ākāram n. <>ā-ghāra. Clarified butter, ghee; நெய். (பிங்.) |
ஆகாரம் 3 | ākāram n. <>ā-hāra. Food; உணவு. (பிங்.) |
ஆகிடந்து | ākiṭantu part. (Gram.) A sign of the present tense; நிகழ்கால இடைநிலைகளுள் ஒன்று. (நன். 145, இராமா.) |
ஆகிய | ākiya rel. pple. <>ஆ-. Participle connecting a noun with an attributive or two nouns in apposition; பண்புருபு. |
ஆகிரந்தம் | ākirantam n. Indian beech. See புன்கு. (மலை.) |
ஆகிரி | ākiri n. <>āhirī. (Mus.) A specific melody-type. See ஆகரி. (பரத. இராக. 75.) |
ஆகிருதி | ākiruti n. <>ā-krti. 1. Form, shape; உருவம். 2. Metre of four lines with 22 vowel sounds each; |
ஆகு 1 - தல் | āku- 5 v. intr. <>ஆ6-. See ஆ6-. (இலக். கொத். 86, உரை.) |
ஆகு 2 | āku n. 1. cf. Tip. gyāk. The tail of the yak, used as a fan for idols; கவரி. (பிங்.) 2. Navel; |