Word |
English & Tamil Meaning |
---|---|
ஆங்கு 2 - தல் | āṅku- 5 v.intr. <>ā-. To suffice, be sufficient; போதியதாதல். குழந்தைக்குப் பால் ஆங்க வில்லை. Madr. |
ஆங்ஙனம் | āṅṅaṉam adv. <>அ+. In that manner, in the same way; அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363). |
ஆச்சரியம் | āccariyam n. <>ā-š-carya. Surprise, wonder; வியப்பு. |
ஆச்சல் | āccal n. prob. பாய்-. Sudden violent rush, gust, impulse; பாய்ச்சல். (W.) |
ஆச்சனை | āccaṉai n. <>ஆச்சு+எனல். Spending the whole amount; முழுதுஞ் செலவழிக்கை. Tj. |
ஆச்சா | āccā n. cf. ஆ9. Sal, l.tr., Shorea robusta; சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை.) |
ஆச்சாட்டுப்பயிர் | āccāṭṭu-p-payir n. Crop grown on land that is but slightly humid; சிற்றீரமுள்ள நிலத்துப் பயிர். (W.) |
ஆச்சாட்டுவிதைப்பு | āccāṭṭu-vitaippu n. Sowing on land whose humidity is poor; சீற்றீரமுள்ள நிலத்து விதைப்பு. (W.) |
ஆச்சாதனபலம் | āccātaṉa-palam n. <>ā-chādana+. Cotton seed; பருத்திக்கொட்டை. (தைலவ. தைல. 33.) |
ஆச்சாதனம் | āccātaṉam n. <>ā-chādana. 1. Cloth, clothes, mantle; ஆடை. 2. Covering, concealing, hiding; |
ஆச்சாள் | āccāḷ n. <>ஆத்தாள் Mother; தாய். எங்களுடை யாச்சாளுக் கூறுகா யாகாமல். (தனிப்பா.i, 42, 83). |
ஆச்சான் | āccāṉ n. <>ā-cārya. Spiritual preceptor; ஆசாரியன். நாலூராச்சான். |
ஆச்சி | ācci n. <>ஆய்ச்சி. 1. Mother; தாய். (ஈடு, 4, 3, ப்ர.) 2. Grandmother; 3. Eldest sister; 4. A term of respect used in addressing women of higher caste or position; |
ஆச்சிபூச்சி | ācci-pūcci n. A play among children; விளையட்டுவகை. (W.) |
ஆச்சியம் 1 | ācciyam n. <>ā-jya. Ghee, clarified butter; நெய். (கைவல்ய. தத்துவ. 66.) |
ஆச்சியம் 2 | ācciyam n. <>hāsya. That which is fit to be ridiculed, or derided; பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்களோடு (தேவா. 1094, 10). |
ஆச்சியஸ்தாலி | ācciyastāli n. <>ājya+sthālī. Vessel in which clarified butter is kept during oblations; ஓமதத்துக்குரிய நெய்ப்பாத்திரம். (சீவக. 2463, உரை.) |
ஆச்சியாடு | ācci-yāṭu n. prob. yācaka+. Sheep acquired by a shepherd by begging from other flocks; இரந்துசேர்க்கும் ஆடு. Loc. |
ஆச்சிரமதருமம் | āccirama-tarumam n. <>ā-šrama+dharma. Duites pertaining to the four stages of life, esp. among the twice-born; அந்தந்த ஆச்சிரமத்தோர் செய்யவேண்டிய கடமை. |
ஆச்சிரமம் | ācciramam n. <>ā-šrama. 1. Hermitage, abode of an ascetic; முனிவ ருறைவிடம். (சேதுபு. நைமிசா. 15.) 2. Order or stage in life, esp. of the twice-born, of which four are mentioned, viz.,; |
ஆச்சிரமி | āccirami n. <>ā-šramin. One who is in any one of the four stages of life or ācciramam; நால்வகை யாச்சிரமங்களுள் ஒன்றிலிருப்பவன். |
ஆச்சிரயம் | āccirayam n. <>ā-šraya. 1. Asylum, place of refuge; புகலிடம். 2. Seeking by a king the help of a mightier king to conquer an enemy, one of aracar-aṟu-kuṇam, q.v.; |
ஆச்சிரயாசித்தம் | āccirayācittam n. <>ā-šraya+a-siddha. (Log) Fallacy consisting in the minor term being non-existent; பட்சத்தில் இல்லாத ஏதுவைக்கூறும் ஏதுப்போலி. (மணி. 29. 194.) |
ஆச்சிராமம் | āccirāmam n. <>ā-šrama. See ஆச்சிரமம். வதரியாச்சிராமம். (திவ். பெரியதி. 1, 4, 1). |
ஆச்சிலை | ā-c-cilai n. <>ஆ8+ Cinnamon stone; கோமேதகம். (சங். அக.) |
ஆச்சு | āccu v. intr. <>ஆயிற்று. [M. āccu.] 1. Finished, done; முடிந்தது. 2. An expletive; |
ஆச்சுவரி | āccuvari n. Pipal. See அரசு. (மூ. அ.) |
ஆசங்கி - த்தல் | ācaṅki- 11 v. tr. <>ā-šaṅk. 1. To suspect. doubt; கத்தேகித்தல். 2. To object to state a possible objection to; |