Word |
English & Tamil Meaning |
---|---|
ஆசங்கை | ācaṅkai n. <>ā-šāṅkā. 1. Doubt, suspicion; சந்தேகம். மழையென் றாசங்கை கொண்டகொடை (கமப்ரா. நாகபாச. 263). 2. Objection; |
ஆசடை | ācaṭai n. Beam placed lengthwise in a roof; நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம். Loc. |
ஆசத்தி | ācatti n. <>ā-sakti. Attachment, desire; பற்று. |
ஆசந்தி | ācanti n. <>ā-sandī. 1. Bier; சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமைய வழுது. (திருமந். 150) 2. Procession of the image of Christ on the Cross on Good Friday; |
ஆசந்திரதாரம் | ā-cantira-tāram adv. <>ā+candra+tāra. As long as the moon and stars endure, in perpetuity, a term used in deeds; சந்திரனும் நட்சத்திரங்களு முள்ளவரை. இப்பரிசு ஆசந்திரதாரம் ஊட்டுவதாக (S. I. I. iii, 3). |
ஆசந்திரார்க்கம் | ā-cantirārkkam adv. <>id.+id.+arka. As long as the sun and moon edure, in perpetutiy, a term used in deeds; சந்திரசூரியர்க ளுள்ளவரை. |
ஆசம் | ācam n. <>hāsa. Laughter mirth; சிரிப்பு. (பிங்.) |
ஆசமனம் | ācamaṉam n. <>ā-camana. Sipping while uttering certain mantras a little water three times from the palm of the right hand; வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுகை. (கூர்மபு. நித்திய. 11.) |
ஆசமனீயம் | ācamaṉīyam n. <>ā-camaniya. Water used for ācamaṉam; ஆசமனநீர். |
ஆசமி - த்தல் | ācami- 11 v. tr. <>ā-cam. To sip while uttering certain mantras a little water three times from the palm of the right hand; வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட் கொள்ளுதல். அணிநீர் கரந்தொட்டசமித்தான் (சேதுபு. சேதுவந். 26). |
ஆசயம் | ācayam n. <>ā-šaya. 1. Resting place, abode, retreat; உறைவிடம். 2. Vessel of the body; 3. Intention, meaning; |
ஆசர் | ācar adj. <>U. hāzir. Present in attendance. See ஆஜர். . |
ஆசர்ப்பட்டி | ācar-p-paṭṭi n. <>id.+. Attendance register; வருகைப்பதிவுப் புஸ்தகம். |
ஆசரணம் | ācaraṇam n. <>ā-carana. Observance, usage practice; அனுஷ்டானம். |
ஆசரணை | ācaraṇai n. <>id. See ஆசரணம். (வேதா. சூ. 8.) |
ஆசரி 1 - த்தல் | ācari- 11 v. tr. <>ā-car. 1. To practise, follow habitually; அனுஷ்டித்தல். ஆசரித்த ஆசாரம் (உபதேசரத். 67). 2. To observe, keep holy, solemnise, practise as a rite; |
ஆசரி 2 - த்தல் | ācari- 11 v. tr. <>ā-šraya. To worship; வழிபடுதல். தானாசரித்துவரு தெய்வமிது (குமரே. சத. 60). |
ஆசரிப்புக்கூடாரம் | ācarippu-k-kūṭāram n. <>id.+. Tabernacle, a movable sanctuary; யூதர் வழிபட்ட சஞ்சார ஆலயம். Chr. |
ஆசலை | ācalai n. Malabar-nut. See ஆடாதோடை. (இராசவைத்.) |
ஆசவம் | ācavam n. <>ā-sava. Spirituous liquor which is distilled from molasses, toddy; கள். (பிங்.) |
ஆசவுசம் | ācavucam n. <>ā-šauca. Pollution caused either by the birth or death of a relative; தீட்டு. (சைவச. பொது. 252.) |
ஆசற | ācaṟa adv. <>ஆசு1+அறு 1- Entirely, fully; குறையற. சொல்லப்புகுந்த பொருளை ஆசறக்கூறாது (தொல். பொ. 664, உரை.) |
ஆசறு - தல் | ācaṟu- v. intr. <>id.+. To end, terminate, to be finished; முடிதல். ஊழி சென் றாசறுங் காலத் தந்நிலையதாக (கம்பரா. சரபங். 30). |
ஆசறுதி | ācaṟuti n. <>id.+. End, extremity, termination; கடைசி. கொற்றமங்கலத்துக்கு எல்லையாசறுதியி னட்ட திருவாழிக்கல் (S. I. I. i, 87). |
ஆசறுதிப்பல் | ācaṟuti-p-pal n. <>id.+. Wisdom tooth. the last in coming; கடைவாய்ப்பல். |
ஆசன்னம் | ācaṉṉam n. <>ā-sanna. That which is near or draws near in time, place or number; சமீபமானது. |
ஆசனகிருமி | ācaṉa-kirumi n. <>A-sana+. Thread-worm, Oxyuris vermiculars; மலப்புழுவகை. |
ஆசனகுளிகை | ācaṉa-kuḷikai n. <>id.+. Suppository; ஆசனவழியாய்ச் செலுத்தும் மாத்திரை. |
ஆசனந்திருத்து - தல் | ācaṉan-tiruttu- v. intr. <>id.+. To provide seats esp for elders; பேரியோர்க்கு இருக்கையமைத்தல். |
ஆசனபவுத்திரம் | ācaṉa-pavuttiram n. <>id.+ Fisinla in ano; பகந்தரம். |
ஆசனம் | ācaṉam n. <>ā-sana. 1. Seat, anything to sit on, raised seat, throne, mat of sacrificial grass, skin of deer or tiger; பீட முதலிய தவிசு. 2. Yōgic posture, of which nine are considered to be important, viz., சுவத்திகாசனம், கோசமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம், 3. Halting, encamping, biding one's time, awaiting |