Word |
English & Tamil Meaning |
---|---|
ஆகு 3 | āku n. <>ā-khu. 1. Rat; எலி. (பிங்.) 2. Bandicoot; |
ஆகுஞ்சனம் | ākucaṉam n. <>A-kucana. Contraction; சுருக்குகை. (பிரபோத. 44, 23.) |
ஆகுதி | ākuti n. <>ā-huti. Oblation offered in the consecrated fire; அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214). |
ஆகுபாஷாணம் | āku-pāṣāṇam n. A mineral poison; வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.) |
ஆகுபெயர் | āku-peyar n. <>ஆகு-+. (Gram.) A name or word, which by long usage is secondarily applied to denote something connected with the thing originally denoted by it; ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றென்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.) |
ஆகுலம் | ākulam n. <>ā-kula. 1. Confusion, agitation, flurry; மனக்கலக்கம். சிந்தாகுல முற்று (திருக்கோ. 12). 2. Pomb, idle sound; 3. Grief, sorrow, distraction of mind; |
ஆகுலி 1 - த்தல் | ākuli- 11 v.intr. <>id. To be distressed, suffer grief; துன்புறுதல். (கம்பரா. பிரமாத். 193.) |
ஆகுலி 2 | ākuli n. prob. nākulī. Lesser galangal. See சிற்றரத்தை. (தைலவ. தைல. 119.) |
ஆகுவாகனன் | āku-vākaṉaṉ n. <>ākhu+. Ganesha, whose vechicle is said to be a bandicoot; விநாயகன். (திவா.) |
ஆகுவானஹஸ்தம் | ākuvāṉa-hastam n. <>ahuvāna+hasta. One of the hands of an idol uplifted and slightly bent as if beckoning worshippers; அழைத்தல் குறிக்கும் கை. |
ஆகுளி | ākuḷi n. cf. ā-kula. Kind of small drum; ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக். 606). |
ஆகேறு | ākēṟu n. Indian laburnum. See சரக்கொன்றை. (மூ. அ.) |
ஆகைச்சுட்டி | ākai-c-cuṭṭi conj. <>ஆ-+சுட்டு-. Therefore; ஆகையால் (ஈடு, 7, 10, 8.) |
ஆகையர் | ākaiyar n. <>U. ākhir. End, close; முடிவு. |
ஆகையால் | ākaiyāl n. <>ஆ-. Therefore; ஆதலால். (கந்தபு. மேறு. 26.) |
ஆகோள் | ākōḷ n. <>ஆ8+. (Puṟap.) Theme of seizing the foe's cattle, as a declaration of war; போறிற் பகைவர்பசுக்களைக் கவர்ந்து கொள்ளுகை. ஊர்கொலை யாகோள் (தொல். பொ. 58). |
ஆங்க | āṅka adv. <>அ., 1. An expression used in poetry in the sense of 'in that way'; 2. A word of comparison when used with verbs; அங்ங்கனேயெனப் பொருள்படும் உரையசை. ஆங்கக் குயிலுமயிலுங்காட்டி (தொல். சொல். 279, உரை.).; வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று. (தொல். பொ. 287.) |
ஆங்கண் | āṅkaṇ adv. <>id.+. In that place; அவ்விடத்து. (தொல். எழுத். 114, உரை.) |
ஆங்கனம் | āṅkaṉam adv. <>id.+ ஙனம். Thus, so; அவ்விதம். ஆங்கன மாகிய வாதிரை கையால் (மணி. 16, 128). |
ஆங்காங்கு | āṅkāṅku adv. <>ஆங்கு+ஆங்கு. There and there severally; அங்கங்கு. |
ஆங்காரம் | āṅkāram n. <>aham-kāra. 1. Kindness, love, affection; அபிமானம். தேனாங்காரப்பொழில் (திவ். திருவாய்.10, 7, 11). 2. Conception of individuality. See அகங்காரம். 3.Arrogance, haughtiness; |
ஆங்காரி 1 - த்தல் | āṅkāri- 11 v.intr. <>id. To be arrogant, insolent. See அகங்கரி. ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18. 1). |
ஆங்காரி 2 | āṅkāri n. <>aham-kārin. Proud, haughty person; அகங்காரமுள்ளவன். |
ஆங்காலம் | āṅ-kālam n. <>ஆ-+. Season when fortune favours and all things prove successful, time when things take a favourable turn, opp. to போங்காலம்; நற்காலம். ஆங்கால மாகுமவர்க்கு (நல்வழி, 4) |
ஆங்கிரசம் | āṅkiracam n. <>āṅgirasa. A text-book of Hindu law in Sanskrit, ascribed to Angiras, one of 18 taruma-nūl, q.v.; தருமநூல் பதினெட்டிலொன்று. |
ஆங்கிரசன் | āṅkiracaṉ n. <>aṅgiras. Angiras, a sage; ஓர் இருடி. |
ஆங்கிரம் | āṅkiram n. <>āṅgirasa. A secondary Purāṇa. See அங்கிரம். (திவா.) |
ஆங்கிரன் | āṅkiraṉ n. <>aṅgiras. Angiras, a sage; ஓர் இருடி. (உரி. நி) |
ஆங்கிலம் | āṅkilam n. <>E.Angles. English language; இங்கில¦ஷ் பாஷை. |
ஆங்கீரச | āṅkīraca n. <>āṅgirasa. Name of the sixth year of the Jupiter cycle; ஒரு வருஷம். |
ஆங்கு 1 | āṅku adv. <>அ. 1. There; அவ்விடம். (கந்தபு. அயனைச்சிறைநீ. 42.) 2. Then; 3. So, thus; 1. A Word of comparison; 2. A loc. ending; 3. An expletive, usually poetic; |