Word |
English & Tamil Meaning |
---|---|
தொட்டாசாஸ்திரி | toṭṭā-cāstiri, n.<>T. dodda+. A Brahmin priest who observes vēdic rites strictly; வேதத்தில் சொல்லியபடி நடக்கும் பிராமணன். 2. A stout, corpulent person; |
தொட்டாட்டுமணியம் | toṭṭāṭṭu-maniyam, n.<>தொடு1-+ஆட்டு-+. Minor domestic duties, as of menials ; குற்றேவல். (J.) |
தொட்டாட்டுவேலை | toṭṭāṭṭu-vēlai, n. <>id.+id.+. See தொட்டாட்டுமணியம். (J.) . |
தொட்டாப்பு | toṭṭāppu, n. cf. துட்டாப்பு. Yoke for carrying a load ; See சிட்டைமரம். (J.) |
தொட்டாய்ச்சி | toṭṭāycci, n. <>தொட்ட+. See தொட்டாச்சி. (J.) . |
தொட்டால்வாடி | toṭṭāl-vāṭi, n. <>தொடு-+. 1. Sensitive plant, s. sh., Mimosa pudica ; தொட்டற்சுருங்குஞ் செடிவகை. 2. A species of sensitive plant, l. sh., Mimosa leguminosae ; |
தொட்டாற்சிணுங்கி | toṭṭāṟ-ciṇuṅki, n. <>id.+. See தொட்டால்வாடி . Loc. . |
தொட்டாற்சுருங்கி | toṭṭāṟ-curuṅki, n. <>id.+. See தொட்டால்வடி. Loc. . |
தொட்டி 1 | toṭṭi, n. perh. தொடு1-. [T. K. M. Tu. toṭṭi.]. 1. Water-trough, tub, cistern, reservoir; நீர்த்தொட்டி. (W.) துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி (பரிபா, 20, 51). 2. Manger, crib; 3. Refuse bin; 4. See தொட்டிக்கட்டு. 5. Howdah; 6. Toddy; 7. A prepared arsenic; |
தொட்டி 2 | toṭṭi, n. cf. குறுந்தொட்டி. 1. Small climbing nettle; See சிறுகாஞ்சொறி. (தைலவ. தைல). 2. Climbing nettle; 3. Sticky mallow. |
தொட்டி 3 | toṭṭi, n. [T. K. doddi, M. doṭṭi.]. 1. Fence, yard, pound; வேலியடைப்பு. (W.) 2. Enclosure for selling timber, fire-wood; 3. Enclosure for selling oysters at the pearl-fishery; 4. Small village; |
தொட்டி 4 | toṭṭi, n. cf. துட்டி4. Fine, punishment ; அபராதம். தொட்டிப்பணம் . (W.) |
தொட்டிக்கட்டு | toṭṭi-k-kaṭṭu, n.<>தொட்டி1+. Open quadrangular section in the centre of a house ; வீட்டமைப்பில் நடுவில் திறந்தவெளியுடைய சதுரக்கட்டு. ஒரு விட்டில் அடுக்கடுக்காய் மூன்று தொட்டிக்கட்டுக்கள் அமைக்கப்படாது (சர்வா. சிற். 47) . |
தொட்டிக்கலவடை | toṭṭi-k-kalavaṭai, n. <>id.+. Foot of a laver ; நீர்த்தொட்டியின் கால். (W.) |
தொட்டிக்கால் | toṭṭi-k-kāl, n. <>id.+. [T. doddikāllu.] Bowleg ; கவட்டுக்கால். Loc. |
தொட்டிச்சி | toṭṭicci, n. Fem. of தொட்டியன் . A woman of Toṭṭiyar caste; தொட்டியச்சாதிப்பெண் . |
தொட்டிப்பணம் | toṭṭi-p-paṇam, n.<>தொட்டி4+. Fine for default of workmen ; வேலைக்காரர்க்கு இடும் அபராதம் . (W.) |
தொட்டிப்பாலம் | toṭṭi-p-pālam, n. <>தொட்டி+. A kind of aqueduct, as troughlike ; மேட்டுநிலத்துள் நீர் பாயுமாரு கட்டப்படும் ஒரு வகைப்பாலம். Nā. |
தொட்டிப்பாஷாணம் | toṭṭi-p-pāṣāṇam, n. <>id.+. A mineral poison ; பிறவிப்பாஷாணவகை. (பதார்த்த.1163.) |
தொட்டிப்பூட்டு | toṭṭi-p-pūṭṭu, n. <>தொட்டி3+. A kind of padlock; தைக்கும் பூட்டுவகை. Tj. |
தொட்டிமுற்றம் | toṭṭi-muṟṟam, n. <>தொட்டி1+. Inner yard of a house ; விட்டினுள்ளாகக் தொட்டிபோல் அமைந்துள்ள முற்றம். Loc. |
தொட்டிமை | toṭṭimai, n. <>தொடு2-. 1. Uniformity, unison; ஒற்றுமை. (சூடா.) தொட்டிமையுடைய வீணை (சீவக. 2047). 2. Beauty ; |
தொட்டியக்கரு | toṭṭiya-k-karu, n. <>தொட்டியம்+. Articles used in witchcraft; பில்லிசூனியத்தில் உபயோகிக்கும் கரு (யாழ். அக.) |
தொட்டியச்சி | toṭṭiyacci, n. See தொட்டிச்சி. (W.) . |
தொட்டியம் | toṭṭiyam,. n. <>தொட்டியன் . 1. A country identified with the western portion of Madura District; மதுரை ஜில்லாவின் மேற்குப்பகுதி. (Nels.) 2. A language; 3. Witchcraft and legerdemain; |
தொட்டியன் | toṭṭiyaṉ, n. [M. toṭṭiyan.]. Person of a Telugu caste of cultivators, settled in the western portion of the Madura District, who assume the title Nāykkar ; தெலுங்கு தேசத்தில் உழவுத்தொழில் செய்துவந்து மதுரை நாட்டில் நாய்க்கன் என்ற பெயர்கொண்டு வாழும் ஒரு சாதியான். (E. T.) |