Word |
English & Tamil Meaning |
---|---|
தொட்டில் 1 | toṭṭil, n. [T. toṭṭila, K.M.Tu. toṭṭil.]. Cradle, swinging cot for an infant ; குழந்தைகளைப் படுக்கவைத்து ஆட்டற்குரிய மஞ்சம் அல்லது தூளி. கிடக்கிற் றொட்டில் கிழியவுதைத்திடும் (திவ். பெரியாழ். 1, 1, 9) . |
தொட்டில் 2 | toṭṭil, n. See தொட்டி, 1. (J.) . |
தொட்டில்முண்டு | toṭṭil-muṇṭu, n.<>தொட்டில்+. See தொட்டிற்சிலை . . |
தொட்டில்ராட்டு | toṭṭil-rāṭṭu, n. <>id.+. A kind of merry-go-round ; மேல்கீழாகச் சுற்றும் விளையாட்டு ராட்டினவகை . |
தொட்டிலிடு - தல் | toṭṭil-iṭu-, v. tr. <>id.+. To cradle for the first time, as a child; முதன் முறை குழந்தையைத் தொட்டிலில் ஏற்றுவித்தல் . |
தொட்டிவயிறு | toṭṭi-vayiṟu, n. <>தொட்டி1+. Paunch belly ; பெருவயிறு. (W.) |
தொட்டிவீடு | toṭṭi-vītu, n. <>id.+. A house with toṭṭi-k-kaṭṭu; தொட்டிக்கட்டுள்ள வீடு . Nā. |
தொட்டிற்சீலை | toṭṭiṟ-cīlai, n. <>தொட்டில்1+. A kind of cloth used for cradle ; குழந்தைத் தொட்டிலுக்கு உபயோகப்படுத்தும் துணிவகை. Loc. |
தொட்டு | toṭṭu, part. <>தொடு1-. 1. Touching, concerning, in reference to; குறித்து. அவனைத் தொட்டு எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. 2. Beginning with, from, since, thenceforward; |
தொட்டுக்காட்டு - தல் | toṭṭu-k-kāṭṭu-, v. tr. <>id.+. To lead the way, show practically how a thing must be done ; ஒன்றைச்செய்து காட்டுதல். தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வாராது. |
தொட்டுக்கூட்டுகறி | toṭṭu-k-kūṭṭu-kaṟi, n. <>id.+. A kind of liquid relish, dist. fr. eṭuttu-k-kūṭṭu-kaṟi; பச்சடி முதலிய திரவ உணவு. Nā. |
தொட்டுக்கொண்டுபோ - தல் | toṭṭu-k-koṇṭu-pō-, v. tr. <>id.+. 1. To pretend to carry a load with others, by just touching it; ஒன்றைச் சுமப்பதாகத் தோன்றப்பண்ணுதல். Loc. 2. To walk touching the bier, as near relations in a funeral procession; 3. To bear a pall at a funeral ; |
தொட்டுக்கொள்(ளு) - தல் | toṭṭu-k-koḻ-, v. tr.<>id.+. 1. To touch; to catch; எட்டிப்பிடித்தல். தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்ன வேண்டும்படி (ஈடு, 1, 1, 1). 2. To take small bites, as at pickles; |
தொட்டுச்சாப்பிடுமுறவு | toṭṭu-c-cāp-piṭum-uṟavu, n. <>id.+. Close relationship of women making it permissible for them to take food at one another's house ; ஒருவர் தொட்ட உணவை மற்றொருவர் உண்ணும்படி மகளிர்க்குள் அமைந்த நெருங்கிய சம்பந்தம். Vaiṣṇ. |
தொட்டுத்தின்(னு) - தல் | toṭṭu-t-tiṉ-, v. intr. <>id.+. To take food at the house of a low caste person ; கீழ்ச்சாதியார் சமைத்த உணவை உடனிருந்து உண்ணுதல். தொட்டுத்தின்றும் பட்டினியா? . |
தொட்டுத்தெளி - த்தல் | toṭṭu-t-teḷi-, v. tr. <>id.+. See தொட்டுத்தெறி . . |
தொட்டுத்தெறி - த்தல் | toṭṭu-t-teṟi-, v. tr. <>id.+. 1. To sprinkle a coloured liquid, as on a newly married couple ; ஆலாத்திநீரை மணமக்கள்மேல் தெளித்தல். 2. To give sparingly; |
தொட்டுத்தொட்டு | toṭṭu-t-toṭṭu, adv. <>id.+. Little by little; சிறுகச்சிறுக. Loc. தொட்டுத்தொட்டு நூறுரூபாய் செலவாயிற்று . |
தொட்டுப்பிடி - த்தல் | toṭṭu-p-piṭi-, v. tr. <>id. +. To act as midwife in childbirth; மகப்பெறுங்காலத்தில் பக்கத்திருந்து உதவி செய்தல். Nā. |
தொட்பம் | toṭpam,. n. Corr. of ஒட்பம் Cleverness, skill ; சாமர்த்தியம். (அக.நி.) |
தொடக்கம் | toṭakkam, n. <>தொடங்கு-. 1. Origin; ஆரம்பம். 2. Beginning, commencement; 3. (Vaiṣṇ.) Beginning the recitation of Tiruvāymoḻi after capiṇṭīkaraṇam ; 4. Means for an end; attempt; 5. Wealth; 6. Class; |
தொடக்கறை | toṭakkaṟai, n. <>தொடக்கு+அறை. Lit., unclean room. Human body ; [அழுக்குநிரம்பியஅறை.] மானிட சரீரம். மும்மல பாண்டத் தொடக்கறையை (தாயு. பாயப்புலி. 18) . |
தொடக்கு 1 - தல் | toṭakku-, 5 v. cf. துடக்கு-. tr. 1. To tie; கட்டுதல். நினைத்துன்பத்தாற் றொடக்கினேன் (சீ¤வக. 579). 2. [K. todaku.] To catch hold of, ensnare; 3. [T. todagu.] To wear, put on; 4. To make to agree; To get entangled, obstructed ; |