Word |
English & Tamil Meaning |
---|---|
தொடை 3 | toṭai, n.<>தொடு1-. The produce of a single diving, in pearl-fishery; முத்து எடுக்கும்போது ஒரு குளிப்பில் கவர்ந்துவரும் சரக்கு . (W.G.) |
தொடை 4 | toṭai,. n.[T. toda.]. Thigh; துடையென்னும் உறுப்பு . |
தொடைக்கயிறு | toṭai-k-kayiṟu, n.<>தொடை+. Small rope used in tying the plough-ox to the yoke ; எருதைக் கலப்பை நுகத்தோடு இணக்கும் சிறுகயிறு . Loc. |
தொடைகிள்ளு - தல் | toṭai-kiḷḷu-, n. tr. <>தொடை4+. See தொடைநிமிண்டு . . |
தொடைகொள்(ளு) - தல் | toṭai-koḷ-, n. v. tr. <>தொடை2+. To learn, understand ; கண்டறிதல். வடிவிலே தொடைகொண்டே னென்கிறார் (ஈடு.2, 5, 5, .) |
தொடைச்சந்து | toṭai-c-cantu, n.<>தொடை4 +. Groin, inguinal region ; தொடையிடுக்கு . |
தொடைதட்டிவேளாளர் | toṭai-taṭṭi-vēḷāḷar, n.<>தொடைத்தட்டு-+. Barbers, as honing their razors on the thigh, used in contempt ; (தொடையில் சவரக்கத்தியைத்தட்டித் தீட்டு பவர்) நாவிதர் . |
தொடைதட்டு - தல் | toṭai-taṭṭu-, v. intr. <>தொடை4+. 1. To show one's bravery or defiance by striking the thigh; தொடையில் அடித்துகொண்டு வீரவாதஞ்செய்தல் குண்டோதரன் கண்டு கொண்டாற் றொடைதட்டிக் கொள்ளுவனே (தனிப்பா.1, 403, 23) 2. To make challenge to battle; |
தொடைதட்டுதல் | toṭai-taṭṭutal, n.<>id.+. Ceremony of tapping one's thigh and going round a corpse in funeral ceremonies ; பிணத்தினருகில் நீர்க்குடத்தை உடைத்தபின் தொடையைத் தட்டிக்கொண்டு சுற்றிவரும் சடங்கு . Brāh |
தொடைநாளம் | toṭai-nāḷam, n.<>id.+. Femoral vein ; தொடையின் இரத்த நரம்பு. (இங்.வை.) |
தொடைநிமிண்டு - தல் | toṭai-niminṭu-, v. tr. <>id.+. 1. To pinch the thigh, as a punishment; தொடையைக்கிள்ளுதல். 2. To stimulate, incite; 3. To call one's attention, remind, as by pinching ; |
தொடைப்பற்று | toṭai-p-paṟṟu-, n.<>id.+. Thigh ; துடையென்னும் உறுப்பு. Colloq. |
தொடைமுரண் | toṭai-muraṇ, n.<>தொடை2+. Antithesis in the first foot of a verse ; முரண்டொடை. செம்மை பசுமை தொடை முரண் (சீவக..2, உரை.) |
தொடையகராதி | toṭai-y-akarāti, n.<>id.+. A section of catur-akarāti , being a dictionary of rhyming words ; சதுரகராதிப் பிரிவினுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும் அகராதி . |
தொடையடிகூழை | toṭai-y-aṭi-kūḻai, n.<>தொடை4 +. A defect of cattle which consists in having a short hairless tail ; தொடைமுட்டுக்குக் கிழ்வாராமல் மயிரின்றியிருக்கும் வாலையுடைமையாகிய மாட்டுக்குற்றவகை. (மாட்டுவா.18.) |
தொடையல் 1 | toṭaiyal, n.<>தொடை2. 1. Succession, continuation; தொடர்ச்சி. நீள்விசித் தொடையல் (பொருந.18). 2. Fastening, tying, weaving; 3. Flower-garland worn over shoulders; 4. A kind of garland; See 5. Honeycomb; |
தொடையல் 2 | toṭaiyal, n.<>தொடை-. Ruin, destruction ; நாசம். பையன் தொட்டது தொடையல்தான் . |
தொடையானந்தம் | toṭai-y-āṉantam, n.<>தொடை2+. (Pros.) Use of aḷapeṭai before or after the name of a hero in a poem, considered as a defect ; அளபெடைஇத் தொடைப்பாட்டினுள் பாட்டுடைத்தலைவனதுபெயர்சார்த்தி அலபெடுப்பத் தொடுக்கும் ஆனந்தக்குற்றம். (யாப.வி.522) . |
தொடையெலும்பு | toṭai-y-elumpu, n.<>தொடை4+. Thigh bone, femur ; தொடையிலுள்ள எலும்பு . |
தொடைவாழை | toṭai-vāḻai, n.<>id.+. [K. todevāḻe.]. 1. Abscess in the thigh or near the groin; அடித்தொடையிற் புறப்படும் மேகக்கட்டி வகை. 2. Milk leg, white leg, swelled leg, phlegmasia dolens ,; 3. A plant, used in curing tumour; |
தொடைவில்லை | toṭai-villai, n.<>id.+. Small round cushion ; சிறிய வட்டத்தலையாணை . |
தொண்டகம் | toṇṭakam, n. prob. தொண்டு onom. 1. A small drum used in kuṟinci tracts; தொட்டு 1. குறிஞ்சிலப்பறை (திவா) தொண்டகச் சிறுபறைப்பாணி (நற்.104). 2. Drum beaten while capturing the enemy's cows; |