Word |
English & Tamil Meaning |
---|---|
நம்பு - தல் | nampu-, 5 v. tr. [M. nampuka.] 1. To long for, desire intensely; விரும்புதல். நின்னிசை நம்பி (புறாநா.136); 2. [ T. nammu, K. Tu. nambu.] To trust, confide in, rely on, believe, have faith in; 3. To hope, expect; 4. To accept; |
நம்பு 1 | nampu, n. <>நம்பு-. Desire, hope; நசை. நம்பு மேவு நசையா கும்மே (தொல். சொல். 329). |
நம்பு 2 | nampu, n. <>நம்பி. Office of temple priest அருச்சகம். இவ்வூர்ப் பிள்ளையார் கோயிலும் நம்பும் (Insc.). நம்பு செந்தாமரைக்கண்ணாற்கு (T.A.X. i, 263). |
நம்பு 3 | nampu, n. perh. jambū Jamoon plum; நாவல் (மலை.) |
நம்புசெய்வார் | nampu-ceyvār, n. <>நம்பு +. Temple priest; அருச்சகர். (Insc.) |
நம்புண்டல் | nampuṇṭal, n. <>நம்பு.+. Making one to believe; நம்பும்படி செய்கை. அன்னான்சொ னம்புண்டல் (கலித்.47, 10). |
நம்பூதிரி | nampūtiri, n. [M. nambūdiri.] A class of Brahmins in Malabar; மலையாளப் பிராமணர் வகையினன். (E.T. v, 152.) |
நம்பூரி | nampūri, n. [K. nambūri.] See நம்பூதிரி. Colloq . |
நம்பெருமாள் | nam-perumāḷ n. <>நம் +. Viṣṇu worshipped at šrīraṅgam; திருவரங்கத்துத் திருமால். நம்பெருமாள் நம்மாழ்வார் (உபதேசரத். 50). |
நம்மனோர் | nam-m-aṉōr, n. <>id.+. See எம்மனோர். ஆங்கனமற்றே நம்மனோர்க்கே (மலைபடு. 402). |
நம்மாழ்வார் | nam-m-āḻvār, n. <>id.+. A Vaiṣṇava saint, author of Tiruvāymoḻi and other works, foremost of ten āḻvāi, q.v.; ஆழ்வார்கள் பதின்மருள் தலைமையானவரும் திருவாய்மொழி முதலிய பிரபந்தங்களின் ஆசிரியருமான திருமாலடியார். (உபதேசரத்.50.) |
நம்முள்ளவன் | nam-m-uḷḷavān, n. <>id.+. One of our men; நம்முடையவன். Loc. |
நம - த்தல் | nama-, 11. v. intr. cf. நய-.[T. nemmu.] See நழ-. அப்பளாம் நமத்துப் போயிற்று |
நம | nama, n. <>namas. Bowing salutation, obeisance, reverence; வணக்கம். வேங்கடத்துரைவார்க்கு நமவென்னலாம் (திவ்.திருவாய்.3, 3, 6) |
நமக்கரி - த்தல் | namakkari-, 11 v. tr. See நமஸ்கரி-. நமக்கரிக்கவரும் வடிவையுடைய பெண்கள் (தக்கயாகப்.80, உரை). |
நமக்காரச்சாப்பாடு | namakkāra-c-cāppāṭu, n. <>நமக்காரம் +. An institution in a temple by which a certain number of brahmins are required to be fed at the time of the morning worship; கோயிலிற் காலைப்பூசையில் நைவேத்தியம் படைக்கும்பொழுது சில பிராமணர்களுக்கு உணவளிக்கும் முறை. Nā. |
நமக்காரம் | namakkāram, n. 1. See நமஸ்காரம் Colloq. . 2. See நமக்காரச்சாப்பாடு. |
நமக்காரமுத்திரை | namakkāra-muttirai, n. <>namaskāra+. A pose in prayer in which the hands are joined with the thumbs one over the other; கட்டைவிரல்களிரண்டையும் பிணைத்து மற்றை விரல்களைச் சேர்த்து நேரே நிமிர்த்தும் முத்திரை வகை. (செந். x, 425.) |
நமக்காரி | namakkāri, n. <>namaskāri. (மலை.) 1. Sensitive plant . See தொட்டாற்சுருங்கி. 2. Worm-killer. |
நமகம் | namakam, n. <>namaka. A hymn in the Vēda, addressed to Rudra; உருத்திரனைக் குறித்த ஒரு வேத மந்திரம். நமகமார் சமகந் தன்னை (சேதுபு. இராமநா. 47). |
நமச்சாரம் | namaccāram, n. See நவச்சாரம். Colloq. . |
நமச்சிவாய | namac-civāya, n. <>namaššivāya. The sacred five-lettered mantra of the šaivaites; பஞ்சாட்சர மந்திரம். நற்றுணையாவது நமச்சிவாயவே (தேவா.1182, 1) |
நமச்சிவாயத்தம்பிரான் | namaccivāya-t-tampirāṉ, n. <>நமச்சிவாய +. An ascetic who was the head of Tiruvāvaṭuturai mutt and who wrote commentaries on certain šaiva šiddhānta works, about 1678 A. D.; உத்தேசம் கி.பி.1678-ல் இருந்த வரும் சைவசித்தாந்த சாஸ்திரங்கள் சிலவற்றுக்கு உரை யெழுதியவருமான திருவாவடுதுறைமடத்துத் தம்பிரான் |
நமச்சிவாயதேவர் | namaccivāya-tēvar, n. <>id.+. See நமச்சிவாயமூர்த்தி. (காஞ்சிப்பு. கடவு. 17.) . |
நமச்சிவாயமாலை | namaccivāya-mā lai, n. <>id.+. A šaiva siddhanta treatise by Ampalavāṇatēcikar, one of 14 paṇṭāra-cāttiram, q.v.; பண்டாரசாத்திரத்துளொன்றும் அம்பலவாண தேசிகராலியற்றப்பட்டதுமான ஒரு சைவசித்தாந்த நூல். |