Word |
English & Tamil Meaning |
---|---|
நவசூதிகை | nava-cūtikai, n. <>nava + sūtikā. 1. A woman recently delivered of a child; ஈன்றணிமையுள்ளவள். 2. A cow that has recently calved; |
நவஞ்சம் | navacam, n. Bishop's weed; See ஓமம். (மலை.) |
நவட்சாரம் | navaṭcāram, n. See நவச்சாரம். (மூ. அ.) . |
நவட்டு - தல் | navaṭṭu-, 5 v. tr. To pinch. See நகட்டு-. Loc. |
நவத்தம் | navattam, n. <>நலத்தம். Spikenard herb; சடாமாஞ்சி. (W.) |
நவத்துவாரம் | nava-t-tuvāram, n. <>nava-dvāra. The nine apertures of the body, viz., two eyes, two nostrils, two ears, mouth, anus and meatus urinarius; கண்கள், நாசித்துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம் என்னும் ஒன்பது உடல்வாயில்கள் (W.) |
நவதளம் | nava-taḷam, n. <>nava-dala. Tender lotus-leaf; தாமரைத்தளிர். (சங். அக.) |
நவதா | navatā, n. <>navata. Howdah on an elephant; யானைமேலிடுந் தவிசு. (யாழ். அக.) |
நவதாரணை | nava-dhāraṇai, n. <>nava-nāraṇā. 1. The nine modes in the art of concentrated meditation, viz., nāma-tāraṇai, akkara-tāraṇai, ceyyuṭ-ṭāraṇai, caturaṅkatāraṇai, cittira-t-tāraṇai, vayira-t-tāraṅkavaṇai, vāyu-t-tāraṇai; niṟivu-kuṟaivākiya-v-eṇporuṭṭāraṇai, vattau-t-tāraṇai; நாமதாரணை. அக்கரதாரணை, செய்யுட்டாரணை, சதுரங்கதாரணை, சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தாரணை, நிறைவுகுறைவாகியவெண்பொருட்டாரணை, வத்துத்தாரணை யென்னும் ஒன்பது அவதானவகைகள். (யாப் .வி. 96, பக். 516.) (திவா.) 2. The nine kinds of meditation practised by yōgins; |
நவதாளம் | nava-tāḷam, n. <>nava-tāla. Nine kinds of time-measure, viz., aritāḷam, arumatāḷam, camatāḷam, cayatāḷam, cittiratāḷam, turuvatāḷam, nivirttatāḷam, paṭimattāḷam, viṭatāḷam; அரிதாளம், அருமதானம், சமதானம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவிர்த்ததாளம், படிமதாளம், விடதாளம் என்ற ஒன்பது வகைத் தாளம். (பரத. தாள. 6.) |
நவதானியம் | nava-tāṉiyam, n. <>id.+. The nine kinds of grain, viz., kōtumai, nel, tuvarai, payaṟu, kaṭalai, avarai, eḷ, uḻuntu, koḷ; கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உழுந்து, கொள் ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள். (w.) |
நவதி 1 | navati, n. A creeping vervain. See பொடுதலை. (மலை.) |
நவதி 2 | navati, n. <>navati. Ninety; தொண்ணூறு. (யாழ். அக.) |
நவதிகை | navatikai, n. <>navatikā. Brush; தூரியக்கோல். (யாழ். அக.) |
நவதீர்த்தம் | nava-tīrttam, n. <>nava-tīrttha. The nine sacred rivers of the Hindus viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Cintu, Kāvēri, kōtāvari, Cōṇai, Tuṅkapattirai; கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை என்ற ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள். கங்மைநதியாதி நவதீர்த்தக் கரை நாட்டுள் (சைவச.ஆசாரிய.2) |
நவதை | navatai, n. <>nava-tā. Newness, freshness; புதுமை. (யாழ். அக.) |
நவநாகம் | nava-nākam, n. <>navan+. The nine serpents of the nether world, comprising aṣṭa-mā-nākam and āticēṭaṉ; அஷ்டமா நாகமும் ஆதிசேடனும் ஆகிய ஒன்பது மகாநாகங்கள். (W.) |
நவநாகம் | navanākam, n. Bishop's weed. See ஓமம். (மலை.) |
நவநாணயம் | nava-nāṇayam, n. <>nava + nāṇaka. New practice, innovation; புதுவழக்கம். (யாழ். அக.) |
நவநாதசித்தர் | nava-nāta-cittar, n. <>navan +. The nine principal cittars, viz., Cattiyanātar, catōkanātar, ātinātar, Aṉātinātat, Vakuḷinātar, mataṅkanātar, maccēntiranātar, kaṭēntiranātar, kōrakkanātar; சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர் ஆகிய பிரதானசித்தர் ஒன்பதின்மர். நவநாத சித்தர்களு முன்னட்பினை விரும்புவார் (தாயு. மௌன. 7). |
நவநாயகர் | nava-nāyakar, n. <>id. + nāyaka. (Astrol.) The nine planetary lords who govern each year, viz., rājā, mantiri, cēṉātipati, caciyātipati, tāṉiyātipati, arkkātipati, mēkātipati, racātipati, nīracātipati; ஒவ்வொரு வருஷத்திற்கும் அமையும் ராஜா, மந்திரி, சேனாதிபதி, சசியாதிபதி, தானியாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி, ரசாதிபதி, நீரசாதிபதி ஆகிய தலைவரொன்பதின்மர். (பஞ்.¢) |
நவநிதி | nava-niti-, n. <>id.+. The nine treasures of kubera, viz., patumam, māpatumam, caṇkam, makaram, kaccapam, mukuntam, nantam, nīlam, karvam ; பதுமம், மாபதுமம், கங்கம், மகரம், கச்பம், முகுந்தம், நந்தம், நீலம் கர்வம் ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி. பிங்கலன்றா னருள்பெருகு நவநிதியும் (சேதுபு. துராசா. 20). (பிங்.) |