Word |
English & Tamil Meaning |
---|---|
நலம்பாடு | nalam-pāṭu, n. <>நலம்+படு-. Propriety, fitness; தகுதி. நலம்பாடில்லை நாணுடைத்து (மணி. 2, 36, பாடபேதம்). |
நலம்பாராட்டல் | nalam-pārāṭṭal, n. <>id. + . (Akap.) Praising the beauty of one's ladylove; தலைவியின் அழுகை வியந்துரைக்கும் அகத்துறை. நலந்துழி மகிழ்தலு நலம்பாராட்டலும் (நம்பியகப்.125). |
நலம்பாராட்டு - தல் | nalam-pārāṭṭu-, n. <>id. + . To dress, adorn; அலங்கரித்தல். நறுமலர்க் கோதைநின் னலம்பாராட்டுநர் (சிலப். 2, 62). |
நலம்பாராட்டு | nalam-pārāṭṭu, n. <>id. +. (Akap.) See நலம்பாராட்டல். நலம்பாராட்டாகிய பொருள்பொதிந்த உரையை (சிலப்.2, 81, உரை). . |
நலம்பிடி - த்தல் | nalam-piṭi-, n. <>id. + . See நலந்தட்டு-. Nā. . |
நலம்பொலம் | nalam-polam, n. <>id. + . Good and evil; நன்றுத்து. (W.) |
நலமடி - த்தல் | nalam-aṭi-, n. <>id. + . See நலந்தட்டு-. (J.) . |
நலமாலை | nalamālai, n. Fig resin; அத்திப் பிசின். (சங். அக.) |
நலமிளப்பம் | nalam-iḷappam, n. <>நலம்+. See நலம்பொலம். (W.) . |
நலமெடு - த்தல் | nalam-eṭu-, n. <>id. + . See நலந்தட்டு-. (W.) . |
நலவர் | nalavar, n. <>id. + . Good, virtuous persons; நல்லோர். நலவரு ணன்மை வரம்பாய் விடல் (நாலடி, 188). |
நலவல் | nalaval, n. cf. நவ்வல். See நாவல். (சங். அக.) . |
நலவு | nalavu, n. <>நலம். [O. K. nalavu.] 1. Goodness; நன்மை. (சங். அக.) 2. Pardon, apology; |
நலி - தல் | nali-, 4 v. [T. nali.] intr. 1. To waste, pine away; மெலிதல். 2. To perish; 3. To slide; to roll; to fall down; 4. To be pronounced in a middle tone; 5. To suffer; to be in distress; 6. To yield before a foe; to fail; To afflict, distress; |
நலி | nali, n. <>நலி1-. 1. Suffering, pain; நோவு. (W.) 2. Thinness, leanness; |
நலி - த்தல் | nali-, 11 v. tr. Caus. of நலி1-. To afflict, cause distress; துன்புறுத்துதல். (யாழ். அக.) |
நலிதல் | nalital, n. <>நலி1-. 1. Becoming thin; மெலிகை. (W.) 2. Sliding; 3. Circumflex accent; |
நலிபு | nalipu, n. <>id. A poetic name for the letter āytam; ஆய்தவெழுத்திற்குச் செய்யுளில் வழங்குமொரு பெயர். (தொல். பொ. 535, உரை.) |
நலிபுவண்ணம் | nalipu-vaṇṇam, n. <>நலிபு +. (Pros.) A rhythm effected by the frequent use of āytam; ஆய்தம் அடிக்கடி பயின்றுவருந் சந்தம். (தொல். பொ. 535.) |
நலிவு | nalivu, n. <>நலி1-. 1. Trouble, distress, affliction; துன்பம். வையகத்து நலிவுகண்டு (பு. வெ. 8, 34, கொளு). 2. Ruin, destruction; |
நலுங்கு | naluṅku, n. See நலங்கு. Tinn. . |
நவ்வல் | navval, n. Jaumoon plum. See நாவல். (நாமதீப.) |
நவ்வார் | navvār, n. <>நவ்வு-+ஆ neg. Enemies, foes; பகைவர். (கயாகரம்.) |
நவ்வி 1 | navvi, n. 1. Female deer, hind; பெண்மான். (தொல். பொ. 612.) 2. Young of a deer; 3. Youth, tender age; 4. Beauty, handsomeness; 5. The 13th nakṣatra, part of Corvus; |
நவ்வி 2 | navvi, n. <>nau. cf. Lat. navis, E. navy Boat, vessel, ship, dhoney; மரக்கலம். நவ்விதம் பாயொடு வேலியிற் றிரியும் பண்பின் (கம்பரா. படைத்த. 47). |