Word |
English & Tamil Meaning |
---|---|
நல்லியக்கோடன் | nalliyakkōṭaṉ, n. A liberal chief of ancient times, celebrated in Ciṟu-pāṇāṟṟu-p-paṭai; சிறுபாணாற்றுப்படையிற் புகழப்பட்ட சிற்றரசன். இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை யுடையை (புறநா.176) |
நல்லிருப்பு | nal-l-iruppu, n. <>நல்1 +. 1. Condition of being free from any household work; வேலைகளொன்றுஞ் செய்யாமற் சும்மாவிருக்கு மிருப்பு. Nā. 2. A life of ease and comfort; |
நல்லிளம்படியர் | nal-l-iḷam-paṭiyar, n. <>id.+. Beautiful, young women; அழகிய இள மாதர். நாகர்நல்லிளம்படியர் போல (சீவக.1098). |
நல்லினம் | nal-l-iṉam, n. <>id.+. 1. Good persons or society; நல்லோர் கூட்டம். நல்லினஞ் சேர்தல் (நாலடி). 2. Herd of cows, opp. to pulliṉam; |
நல்ல¦ரல் | nal-l-īral, n. <>id.+. Liver; கல்ல¦ரல். (W.) |
நல்லுயிர் | nal-l-uyir, n. <>id.+. Husband, as wife's soul; (மனைவிக்கு உயிர்போன்றவன்) கணவன். நல்லுயிர் நீங்கலும் (சீவக.332). |
நல்லுவாகை | nalluvākai, n. See நல்ல மந்தனம், 1. (L.) . |
நல்லுறவு | nal-l-uṟavu, n. <>நல்1 +. Near relation beyond the first degree; நெருங்கின உறவு. (W.) |
நல்லூழ் | nal-l-ūḻ, n. <>id.+. Good karma; புண்ணியம். அம்மைப் பிறப்பி னுஞற்றுநல்லூழி னடுத்து (தணிகைப்பு. களவு. 185). |
நல்லெண்ணம் | nal-l-eṇṇam, n. <>id.+. Good intention, good faith, bona fides; நற்சிந்தை. Colloq. |
நல்லெண்ணெய் | nal-l-eṇṇey, n. <>id.+. Sesame oil; எள்ளிலிருந்து ஆட்டியெடுக்கும் எண்ணெய். |
நல்லெருது | nal-l-erutu, n. <>id.+. An ancient tax on bull; பழைய காலத்தில் எருதுகளின் மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை. நல்லாவும் நல்லெருதும். (S.I.I.ii, 521). |
நல்லேர்கட்டுதல் | nal-l-ēr-kaṭṭutal, n. <>id.+. Commencement of seasonal ploughing at an auspicious hour; நன்முகூர்த்தத்தில் பருவத்திற்குரிய உழவைத் தொடங்குதல். |
நல்லேறு | nal-l-ēṟu, n. <>id.+. 1. Bull; இடபம். இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு (மலை படு. 330). 2. Buffalo-bull; |
நல்லொழுக்கம் | nal-l-oḻukkam, n. <>id. + . 1. Moral conduct; நன்னடக்கை. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138). 2. (Jaina.) Right conduct, one of irattiṉa-t-tirayam, q.v.; |
நல்லோர் | nallōr, n. <>நன்-மை. 1. The good; நல்லவர். 2. Women; |
நல்வசி | nal-vaci, n. <>நல்1 +. Trident; சூலம். (பிங்.) |
நல்வழி | nal-vaḻi, n. <>id.+. 1. Right path; நல்லொழுக்கம். ஏகுநல்வழி யல்வழி யென்மன மாகுமோ (கம்பரா. மிதிலைக். 147). 2. A didactic poem by Auvaiyār; |
நல்வாக்கு | nal-vākku, n. <>id. + . 1. Good, auspicious word; நன்னிமித்தமான வார்த்தை. 2. Word of entreaty; 3. Blessing; |
நல்வார்த்தை | nal-vārttai, n. <>id. + . 1. See நல்வாக்கு. . 2. Good news; |
நல்வாழ்வு | nal-vāḻvu, n. <>id. + . (W.) 1. Happy, prosperous life; சீருஞ் சிறப்புமாய் வாழ்கை. 2. Happy, married life; |
நல்விதி | nal-viti, n. <>id. + . Good destiny or fate; புண்ணியப்பயன். (W.) |
நல்வினை | nal-viṉai, n. <>id. + . 1. Good action, virtuous deed; அறச்செயல். நல்வினை மேற்சென்று செய்யப்படும் (குறள், 335). 2. Good karma, opp. to tī-viṉai; |
நல்வேளை | nal-vēḷai, n. <>id. + . See நல்லவேளை2. பசிகொடுக்கு நல்வேளை (பதார்த்த. 284). . |
நல - த்தல் | nala-, 12 v. <>நன்-மை. intr. To result in good; to take a favourable turn; நலமாதல். நலக்க வடியோமை யாண்டுகொண்டு (திருவாச.9, 6).---tr. cf. நய1-. To wish, desire; |