Word |
English & Tamil Meaning |
---|---|
நவவியாகரணம் | nava-viyākaraṇam n. <>id.+. The nine ancient treatises on sanskrit grammar ; வடமொழியில் பண்டைக்காலத்து வழங்கிய ஒன்பது வியாகரண நூல்கள். நவவியாகரண பண்டிதர் அனுமார் என்பர். (W.) |
நவவியூகம் | nava-voiūkam n. <>id. +. The nine categories of things, viz., kālaviyūkam, kula-viyūkam, nāma-viyūkam, āṉa-viyūkan, citta-viyūkam, nāta-viyūkam, vintuviyūkam, kalā-viyūkam, civa-viyūkam ; கால வியூகம், குலவியூகம், நாமவியூகம், ஞானவியூகம், சித்த வியூகம், நாதவியூகம், விந்துவியூகம், கலாவியூகம், சிவவியூகம் என்ற ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள். (சௌந்த.1, உரை.) |
நவவிலாசசபை | nava-viḷāca-capai, n. <>id.+. An assembly of nine classes of pure souls, viz., atitūtar, cattuvakar, āṉātikkar, tūtar, nātakiruttiyar, pakticcuvālakar, pattirācaṉar, palavattar, pirātamikar ; அதிதூதர், சத்துவகர், ஞானாதிக்கர், தூதர், நாதகிருத்தியர், பக்திச்சுவாலகர், பத்திராசனர், பலவத்தர், பிராதமிகர் என்ற ஒன்பதுவகைச் சுத்தான்மாக்கள் கூடிய தேவசபை. (யாழ்.அக.) |
நவவீரர் | nava-vīrar n. <>id.+. The nine heroes in the retinue of skanda, viz., Vīravāku, vīrakēcari, vīramakēntiraṉ , vIramakēccuraṉ , vīrapurantaraṉ , vīramārttāṇṭaṉ , vīrarāṭcatāṉ , vīrāntakaṉ, vīratīraṉ ; வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேச்சுரன், வீரபுரந்தரன், வீர மார்த்தாண்டன், வீரராட்சதன், வீராந்தகன், வீரதீரன் என்ற பெயருடையவரும் முருகக்கடவுட்குத் துணைவருமான வீரர் ஒன்பதின்மர். (கந்தபு.) |
நவக்ஷாரம் | navakṣāram n. See நவச்சாரம். (W.) . |
நவக்ஷாரவுப்பு | navakṣāra-v-uppu n. <>நவக்ஷாரம்+. Carbonate of ammonia ; நவக்ஷாரத்திலிருந்து எடுக்கப்பட்ட உப்பு. (M. L.) |
நவக்ஷாரஜயநீர் | navakṣāra-jaya-nīr n. <>id.+. Solution of ammonia, Liquor ammoniac ; நவச்சாரத்தின் செய்நீர். (M. L.) |
நவாக்கரி | navākkari n. <>navan+akṣarī A sacred mantra of nine letters ; ஒன்பது எழுத்துக்களுள்ள மந்திரவகை. நவாக்கரி சக்கர நானுரை செய்யின் (திருமந்.1319). |
நவாங்கிசம் | navāṅkicam n. See நவாம்சம் . |
நவாட்டுச்சருக்கரை | navāṭṭu-c-carukkrai n. <>நவாது+. Fine, white cane-sugar ; புராச்சருக்கரை. Loc. |
நவாடா | navāṭā n.prob.nau +T.vāda. Boat, dhoney ; தோணி (W.) |
நவாது | navāṭu n. <>T. navātu A kind of white sugar ; வெண்மையான சர்க்கரைவகை. Loc. |
நவாதுச்சர்க்கரை | navātu-c-carkkarai n. <>நவாது+. See நவாது Loc. . |
நவாபு | navāpu n. <>U. nawāb. See நவாப் . |
நவாமிசம் | navāmicam n.<>navan+. (Astol.) Division of a sign of the zodiac into nine equal parts ; இராசியை ஒன்பதாகப் பகிர்கை. (சோதிட.சிந்.123.) |
நவி - த்தல் | navi 11 v. tr. See நவிழ் (சூடா.) . |
நவி | navi n. <>நவி See நவியம்1. ஏறிபத்தர் நூக்குநவியும் (திருவாரூ. 465). . |
நவியம் 1 | naviyam n. <>id. Axe ; பரசாயுதம். வடிநலில் நவியம்பாய்தலின் (புறநா. 23). |
நவியம் 2 | naviyam n. <>navya. (யாழ். அக.) Newness, novelty ; புதுமை That which is new ; |
நவிர் | navir n. 1. [K. navir.] Man's hair; ஆண்மயிர். (திவா.) 2. (Mus,) A melody-type of the marutam class, one of four marutayāḷttiṟam, q.v.; 3. Sword ; 4. See நவிரம் 9. அனங்கன் பேரால் நவிருடைமா மயலுழந்து (பாரத. அருச்சுனன்றீ. 31) 5. Indian coral tree 6. Blade of grass; |
நவிரம் | naviram n. 1. Man's tuft of hair; ஆண்மயிர். (திவா.) 2. Crown of the head; 3. Head; 4. [K. navil.] Peacock; 5. Mountain 6. A mountain belonging to Naṉṉaṉ the hero of Malaipaṭukaṭām; 7. See நவிர் 2. (அக. நி.) 8. Sword; 9. Inferiority, baseness; |
நவிரல் | naviral n. A kind of tree ; மரவகை. நாரின் முருங்கை நவிரல் (அகநா.1). |
நவில்(லு) - தல் | navil-, 3 v. tr. 1. To say, tell, declare, pronounce; சொல்லுதல். நாவினா னவில்பவர் (தேவா. 36,11). (சூடா.) 2. To learn, study, read; 3. To utter, sound loudly; 4. To sing; 5. To perform, as a dance; 6. To practise; 7. To bear; 8. To desire; 9. To indicate, intend; 10. To exceed; |