Word |
English & Tamil Meaning |
---|---|
நவிழ் - த்தல் | naviḻ-, 11 v. tr. cf. நவி-. To extinguish; அவித்தல். (சது.) குழிகட்பேய்... சூழுநோக்கிச் சுடலை நவிழ்ந்து (பதினொ. காரை. மூத்த.2). |
நவிற்று - தல் | naviṟṟu-, 5 v.tr. <>நவில்-. 1. To say, speak, utter; சொல்லுதல். (யாழ். அக.) 2. To investigate; 3. To declare with authority; |
நவின்றோர்க்கினிமை | naviṉṟōrkkiṉi-mai, n. <>id. +. Sweet diction, one of ten nūl-aḻaku, q.v; பயில்வோர்க்கு இன்பந் தருவதாகிய ஒருவகை நூலழகு. (நன். 13.) |
நவிஷிந்தா | naviṣintā, n. <>U. nawī-sindah. Accountant, clerk ; குமாஸ்தா . (C.G.) |
நவீனகம் | navīṉakam, n. See நவீனம் . |
நவீனம் | navīṉam, n. <>navīna. 1. Newness, novelty ; புதுமை. (உரி. நி.) 2. Novel ; |
நவீஸ் | navīs,. n. <>U. nawīs. Writer, scribe ; காரியஸ்தன். (C.G.) |
நவு - தல் | navu-, 4 v. intr. (j.) 1. To become soft; to be soddened by boiling; to be weary, as the limbs by labour; நெகிழ்தல். 2. To rot, decay, as clothes,books, wood; |
நவுக்கர் | navukkar, n. <>U.naukar. Servant; வேலையாள். கிராமநவுக்கர். (C.G.) |
நவுட்டு - தல் | navuṭṭu-, 5 v. tr. See நவட்டு-. Loc. . |
நவுரி | navuri, n. [O.K navuri.] A kind of trumpet See நமரி. திண்டிம நவுரிகாளம் (குற்றா. தல. 14,15). |
நவை | navai, n. cf. நவு-. 1.Blemish, defect, fault, evil; குற்றம். அருநவையாற்றுதல் (நாலடி, 295). 2. Disgrace, meannes; 3. Punishment; |
நவை - த்தல் | navai-, 11 v. tr. <>நவை. To kill ; கொல்லுதல். சூர்நவை முருகன் சுற்றத் தன்ன (புறநா.23) . |
நவோத்திரிதம் | navōttiritam, n. <>navōd-dhrta. Butter; வெண்ணைய். (சங்.அக.) |
நழுக்கம் | naḻukkam, n. <>நழுங்கு-. (J.) 1. Shallowness, as of a dent, an impression, a furrow; உழவுபடைச்சால் முதலியவற்றில் ஆழமின்னை. 2.Bluntness, as of a point ; |
நழுக்கு - தல் | naḻukku-, 5 v. tr. Caus. of நழுங்கு-. 1.To torture, distress; வருத்துதல். நழுங்கு கோர நரகி லழுத்தினார் (குற்றா. தல. கவுற்சன.66). 2. To pound coarsely, as paddy; 3. To blunt, level; 4. To make a shallow furrow, dent or impression; 5. To evade; to slip away; To pass in loose motions, as stools; |
நழுங்கு - தல் | naḻuṅku-, 5 v. intr. (j.) 1.To become blunted, as a point; to be dull; மழுங்குதல். 2. To be ploughed with shallow furrows; to be written or engraven with a faint impression; 3. To slip; |
நழுநழு - த்தல் | naḻu-naḻu-, 11 v. intr. Redupl. of நழுவு-. To speak evasively; to shuffle; பிடிகொடாது பேசுதல். |
நழுப்பு - தல் | naḻuppu-, 5 v. tr. Caus. of நழுவு-. 1. To fascinate, மயங்கச்செய்தல். நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் (திருப்பு. 5). 2. To shrink from, shirk, as one's duty; |
நழுவமுது | naḻu-v-amutu, n. <>நழுவு-+. Rice-gruel; கூழ். (யாழ். அக.) |
நழுவல் | naḻuval, n. <>id. 1. Slipping, evading; பிடிகொடாது பேசுகை. 2. Skulking; 3. (Mus.) A defective note; |
நழுவன் | naḻuvaṉ, n. See நளவன். (யாழ். அக.) . |
நழுவி | naḻuvi, n. <>நழுவு-. One who shuffles or gives indirect answers; slippery person; பிடிகொடாதவ-ன்-ள். (J.) |
நழுவு - தல் | naḻuvu-, 5 v. intr. 1. To slip, as a garment; வழுவுதல். 2. To steal or skulk away, escape; 3. To evade, shift, shuffle, give an indirect answer; |