Word |
English & Tamil Meaning |
---|---|
நளி 2 | naḷi, n. <>நளி-. 1. Closeness, density; செறிவு. நளியென் கிளவி செறிவு மாகும் (தொல். சொல். 325). 2. Greatness, vastness; 3. Width, breadth, extent; 4. Crowd, multitude; 5. Conceit, vanity; 6. Coldness, frigidity; 7. White trianthema. 8. See நளினம்2, 2,3,4. அவன் எப்போதும் நளி பேசிக் கொண்டிருப்பான். Nā. |
நளி 3 | naḷi, n. cf. நள்ளி1. Scorpion ; தேள். (பிங்.) |
நளிப்பு | naḷippu, n. <>நளி-. Closeness, overcrowdedness; செறிவு. பழந்தூங்கு நளிப்பில் (அகநா. 18,15). |
நளிய | naḷiya, part. <>id. A particle of comparison ; ஓர் உவமவுருபு. (தொல்.பொ.291) |
நளிர் 1 - தல் | naḷir-, 4 v. intr. cf. நளி2. 1. To be cool; குளிர்தல். நளிர்ந்தசீல னயாசலன் (திவ்.பெரியாழ். 4,4,8). 2. To shake, tremble; |
நளிர் 2 | naḷir, n. <>நளிர்-. 1. Cold, frigidity, coolness; குளிர்ச்சி. (பிங்.) நளிரிளந் திங்கள் சூடுங் கோலமார் சடையினானே (தேவா. 231,4). 2. [M. naḷir.] Ague, shivering fits, malaria; 3. Enmity; 4. See நளி2, 1,2. (சூடா.) |
நளிர் 3 | naḷir, n. prob. நள்ளி1. cf. kulira. Lobster; நண்டு. (சூடா.) |
நளிர்சுரம் | naḷir-curam, n. <>நளிர்2 + . Fever and ague; குளிர்காய்ச்சல். Loc. |
நளிர்வி - த்தல் | naḷirvi-, 11 v. tr. Caus. of நளிர்-. To cause to tremble; நடுங்கச்செய்தல். நவையை நளிர்விப்பான்றன்னை (திவ். இயற். பெரிய திருவந். 43). |
நளிவிடம் | naḷi-viṭam, n. <>நளி3 +. See நளி3. (பிங்.) . |
நளிவு | naḷivu, n. <>நளி-. Attachment, holding fast; செறிவு. வளியா வறியாவுயிர் காவல் கொண்டு நளிவாய் (கலித். 103). |
நளினக்கதை | naḷiṉa-k-katai, n. <>நளினம்2 +.(யாழ். அக.) 1. Jest, joke, fun; விகடப்பேச்சு. 2. Coaxing, flattering talk; |
நளினக்காரன் | naḷiṉa-k-kāraṉ, n. <>id. +. (W.) 1. Wag, witty, humorous man; சாதுரியப்பேச்சுள்ளவன். 2. Jester, buffoon; 3. Mocker, Scoffer; |
நளினம் 1 | naḷiṉam, n. <> nalina. 1. Lotus See தாமரை. (சூடா.) நாளங்கொ ணளினப்பள்ளி (கம்பரா. சூர்ப்ப . 4). 2. Water; |
நளினம் 2 | naḷiṉam, n. prob. நளி. 1. cf. lalita. Pleasing, attractive speech; நயச்சொல். பயிலு மானவர்பேச னளினமே (சேதுபு. திருநா. 115). 2. Wit, pleasantry, jesting; 3. Irony, satirical language; 4. Buffoonery, mocking, scoffing, ridicule; |
நளினாட்சமாலை | naḷiṉāṭca-mālai, n. <>nalina+akṣamālā. Necklace of lotus seeds; தாமரைமணிமாலை. (நித்தியா. 6.) |
நளினி | naḷiṉi, n. <>nalina. 1. Lakṣmī, இலக்குமி. (உரி. நி.) 2. Lotus tank; 3. (Mus.) A musical mode; |
நளினீருகம் | naḷiṉīrukam, n. <>nalinī-ruha. Lotus-stalk; தாமரைத்தண்டு. (சங்.அக) |
நளினை | naliṉai, n. <>naḷinā. Lakṣmī; இலக்குமி. (W.) |
நளுக்கல் | naḷukkal, n. <>நழுக்கு-. Second pounding of paddy ; நெல்லின் இரண்டாங்குத்து. அடுக்கல் குத்தினாள், நளுக்கல் குத்துவாள். |
நளுக்கு - தல் | naḷukku-, 5 V. intr. cf. நடுக்கு-. To shake, tremble; நடுக்குதல். காலைமுதல் உடம்பு நளுக்கிக்கொண்டே யிருக்கிறது. See நழுக்கு-, 2. Nā. |
நளுங்கு | naḷuṅku, n. (யாழ். அக.) 1. Indian scaly ant-eater. See அழுங்கு,1. 2. Bivalve, mussel; |
நளுத்தை | naḷuttai, n. (Mus.) A kind of melody ; பண்வகை . (W.) |
நளுநொளு - த்தல் | naḷu-noḷu-, 11 v. intr. To be soft and mashy ; நொளநொளத்தல் . |
நளை | naḷai, n. Husk of cardamom seed ; ஏலத்தோல். (W.) |
நற்கணம் | naṟ-kaṇam, n. <>நல்1 +. The four kinds of metrical feet with which a poem may auspiciously begin ; செய்யுளின் தொடக்கத்தில் வருமாறு அமைத்தற்குரிய நிலம், நீர், மதி, இயமானன் என்ற நான்குகணம். (பிங்) |
நற்கதி | naṟ-kati, n. <>id. + gati. Bliss, salvation ; துறக்கமுதலிய நற்பதவி. இறுதியி னற்கதிசெல்லும் பெருவழி (மணி. 12, 59) |
நற்கருணை | naṟ-karuṇai, n. <>id. + karuṇā. Sacrament of the Eucharist . See இராப்போசனம். Chr. |