Word |
English & Tamil Meaning |
---|---|
நற்கருணைகொடு - த்தல் | naṟ-karuṇai-koṭu-, v. intr. <> நற்கருணை +. To administer the sacrament ; சபையார்க்குக் கிறிஸ்தவகுரு நற்கருணை பண்ணிவைத்தல். Chr. |
நற்கருணைபரிமாறு - தல் | naṟ-karuṇai-parimāṟu-, v. intr. <>id. +. See நற்கருணைகொடு-. Chr. . |
நற்கல் | naṟ-kal, n. <>நல்1+ . Stone-mortar ; ஆட்டுக்கல். (யாழ்.அக) |
நற்கலிதம் | naṟ-kalitam, n. <>id. +. (Arith.) See நற்சங்கலிதம். (W.) . |
நற்காட்சி | naṟ-kāṭci. n. <>id. +. (Jaina.) Right understanding, one of irattiṉa-t-tirayam, q.v.; இரத்தினத்திரயத்தொன்று. மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில் (சூளா. துற. 228). |
நற்காமம் | naṟ-kāmam, n. <>id.+. Reciprocated, mutual love; ஓத்தகாமம். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக் காகாவென்பது கருத்து (தொல். பொ. 265, உரை). |
நற்காலம் | naṟ-kālam, n. <>id. +. 1. See நல்லகாலம். . 2. (Jaina.) Period of upward course in the evolution of the world. |
நற்கீர்த்தி | naṟ-kīrtti, n. <>id. + Fame, good report, good name, opp. to tur-k-kīrtti; பெரும்புகழ். (W.) |
நற்கீரர் | naṟ-kīrar n. <>id +. See நக்கீரர். (சங்.அக.) . |
நற்கு | naṟku <>நன்கு. n. Good ; நன்மை. பண்டுகற்கறியாப் புலம்பெயர் புதுவிர் (மலைபடு. 392). adv. Well; |
நற்குடி | naṟ-kuṭi n <>நல் +. Good family ; நற்குலம். நற்குடி நாற்பத்தெண்ணாயிரத்து வந்த கூடல் கிழான் (சேக்கிழார்.பு.12). |
நற்குணம் | naṟ-kuṇam n. <>id. +. Good character, amiable disposition ; நல்லதன்மை. (W.) |
நற்குலம் | naṟ-kulam n. <>id. +. Good or respectable family ; உயர்ந்த குடி. நீடுசூத்திர நற்குலஞ்செய் தவத்தினால் (பெரியபு. இளையான்.1). |
நற்குறி | naṟ-kuṟi n. <>id. +. Good omen, favourable sign ; நல்லசகுனம். (W.) |
நற்கோள் | naṟ-kōḷ n. <>id. +. Benign planets, as Venus, Jupiter, the full moon, etc. ; குரு, சுக்கிரன், பூர்ணசந்திரன் முதலிய சுபகிரகங்கள். வியந்த நற்கோ ளுயர்ந்துழிநோக்கி (பெருங்.நரவாண.1, 124). |
நற்சகுனம் | naṟ-cakuṉam m. <>id. +. See நற்குறி. (W.) . |
நற்சங்கலிதம் | naṟ-caṅkalitam n. <>id. +. (Arith.) Arithmetical series of natural numbers, one of 14 caṅkalitam, q.v.; ஒன்று முதலாக முறையே எண்களை நிறுவும் கணக்குவகை. (W.) |
நற்சரக்கு | naṟ-carakku n. <>id. +. (W.) 1. Spices and other commodities of superior quality; சுகந்ததிரவிய முதலிய உயர்ந்த பண்டங்கள். Commodities in good condition ; |
நற்சலாபம் | nar-calāpam n. <>id. +. Lucrative pearl-fishery ; இலாபகரமான முத்துக் குளிப்பு. (W.) |
நற்சாங்கம் 1 | naṟ-cāṅkam n. <>id. + prob. சாங்கம்2. A kind of prepared arsenic ; சாலம்ப பாஷாணம். (சங்.அக.) |
நற்சாங்கம் 2 | naṟ-cāṅkam n. <>id. + sāṅka Good sign or mark ; நல்ல அடையாளம். (யாழ்.அக.) |
நற்சாட்சி | naṟ-cāṭci n. <>id. +. Mod. Recommendation ; சிபாரிசு Favourable testimony ; |
நற்சாட்சிப்பத்திரம் | naṟ-cāṭci-p-pattiram n. <>id. +. Certificate of character and ability, letter of recommendation; யோக்கியதை குறிக்குஞ் சீட்டு. Mod. |
நற்சாந்து | naṟ-cāntu n. <>id. +. (W.) Lime mortar, used in building, opp. to karucāntu; சுண்ணச்சாந்து. 2. Fine plaster, stucco; |
நற்சார்பு | naṟ-cārpu n. <>id. +. See நற்சார்வு. (W.) . |
நற்சார்வு | naṟ-cārvu n. <>id.+. Good company ; நல்லோர்கூட்டம். நற்சார்வு சார்ந்தார் மேல் (நாலடி, 178). 2. Safe refuge ; 3. Virtuous or religious inclination ; |
நற்சாரி | naṟcāṟi n. cf. nara-sāra. Salammoniac ; நவச்சாரம். (மூ.அ.) |
நற்சாளை | naṟ-cāḷai n. <>நல்1 +. A superior kind of oil-sardine or cāḷai; உயர்ந்த சாளைமீன் வகை. (W.) |
நற்சிலை | naṟ-cilai n. <>id. +. Black stone ; கருங்கல். (யாழ்.அக). |
நற்சீந்தில் | naṟ-cīntil n. <>id. +. Gulancha of a superior kind ; சீந்தில்வகை. (W.) |