Word |
English & Tamil Meaning |
---|---|
நழுவுசாதம் | naḻuvu-cātam, n. <>நழுவு-+. See நழுவமுது. (யாழ். அக.). . |
நள்(ளு) - தல் [நட்டல்] | naḷ-, 5 & 9 v. tr. cf. நளி2. 1. To approach, join, associate with; அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச்செங்.25). 2. To contract friendship, befriend; 3. To like, accept; |
நள் | naḷ, cf. id. n. 1. (K. naḷ.) Middle, centre; நடு. நள்ளிராவும் நண்பகலும் (திவ். திருவாய். 4,7,2). 2. [K.naḷ.] Midday; 3. Night; 4. The 22nd nakṣatra. Dense; |
நள்ளலர் | naḷḷalar, n. <>நள்-+அல் neg. + . See நள்ளார். நள்ளலர்க் கடந்த துப்பி னம்பிளை (கந்தபு. மூன்றநா. பானுகோப. யுத். 165). . |
நள்ளாதார் | naḷḷātār, n. <>id. + ஆ neg. + . See நள்ளார். தந்நள்ளாதா ரில்லத்து (நாலடி, 207). . |
நள்ளார் | naḷḷār, n. <>id. + id. + . Enemies, foes, பகைவர். (சூடா.) நள்ளார் பெரும்படை (கம்பரா. அதிகாயன். 219). |
நள்ளி 1 | naḷḷi, n. 1. [K. naḷḷi.] Crab; நண்டு. நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9,10,2). 2. Cancer in the Zodiac; 3. A liberal chief, one of seven kaṭaivaḷḷalkaḷ, q. v.; |
நள்ளி 2 | naḷḷi, n. Relationship ; உறவு. (சூடா.) |
நள்ளிடை | naḷ-ḷ-iṭai, n. <>நள் +. Middle place, central position; நடுவிடம். நள்ளிடைச் சிவபுர நணுகு மன்னதை (சீகாளத். பு சிலந்தி. 13). |
நள்ளிருணாறி | naḷḷiruṇāṟi, n. <>நள்ளிருள் +. Tuscan jasmine . See இருவாட்சி. நரந்தநாக நள்ளிருணாறி (குறிஞ்சிப். 94). |
நள்ளிருள் | naḷ-ḷ-ituḷ, n. <>நன் +. Intense darkness ; செறிந்தவிருள். நள்ளிருள்யாமத்து (சிலப். 15, 105). |
நள்ளு | naḷḷu, n. <>id. 1. Middle . See நள், 1. (W.) 2. Side ; |
நள்ளுநர் | naḷḷunar, n. <>நள்-+. Friends, associates, adherents; சினேகர் (திவா.) |
நள்ளெனல் | naḷ-ḷ-eṉal, n. Onom expr. signifying a kind of subdued noise; ஓர் ஓசைக் குறிப்பு. நள்ளென் மாலை மருதம் பண்ணி (புறநா. 149). |
நள | naḷa, n. <>Anala. The 50th year of the jupiter cycle ; வருஷம் அறுபதனுள் ஐம்பதாவதாண்டு |
நளத்தம் | naḷattam, n. <>nalada. Spikenard herb . See சடாமாஞ்சி. (மலை.) |
நளத்தி | naḷatti, n. A woman of the Naḷavar caste; நளவசாதிப்பெண். (யாழ்.அக) |
நளபாகம் | naḷa-pākam, n. <>nala +. 1. Excellent cooking, as that of Nala ; [நளன் செய்த சமையல் போன்றது] மேன்மையான சமையல். 2. Food cooked excellently; |
நளம் 1 | nalam, n. A caste in Jaffna; நளவசாதி. (J.) |
நளம் 2 | naḷam, n. prob. நளி-. Width breadth, extent; அகலம். (சது.) |
நளம் 3 | naḷam, n. <>nāla. Lotus. See தாமரை. (மலை.) |
நளம் 4 | naḷam, n. perh. nala. Name of a treatise on architecture, one of the 32 cirpanūl, q.v.; சிற்பநூல்களிலொன்று. (இருசமய. உலக வழக்கப். 5.) |
நளம்பள்ளு | naḷam-paḷḷu, n. <>நளம்1 +. The Naḷavar and the paḷḷar castes; நளவரும் பள்ளருமாகிய சாதிகள். (J.) |
நளவன் | naḷavaṉ, n. A person of the caste of toddy- drawers; கள்ளிறக்குஞ் சாதியான். (j.) |
நளவெண்பா | naḷa-veṇpā, n. <>நளன் +. A poem on Naḷa in veṇpā metre, by Pukaḻēnti-p-pulavar; நளசக்கரவர்த்தியைக் கதாநாயகனாகக் கொண்டு புகழேந்திப்புலவர் வெண்பாவால் இயற்றிய ஒரு நூல். |
நளன் | naḷaṉ, n. <>Nala. 1. A famous emperor of Niṣadha, heor of the Naiṭatam; நிடததேசத்தரசனும் நைடதத்தின் கதாநாயகனுமான சக்கரவர்த்தி 2. A monkey belonging to Rāmā's hosts, said to have built the Adam's Bridge for Rāma and his army to cross over to Ceylon; 3. Name of a liberal chief, one of seven inutalvaḷḷalkaḷ, q.v. |
நளி 1 - தல் | naḷi-, 4 v. intr. 1. To be close together, crowded; செறிதல். நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் (மலைபடு. 197). 2. To be vast in extent ; 3. To resemble; |