Word |
English & Tamil Meaning |
---|---|
நற்சீரகம் | naṟ-cīrakam n. <>id. +.1 Cumin, an annual ; சன்னச்சீரகம். (மூ. அ.) 2. Black cumin. |
நற்செங்கல் | naṟ-ceṅkal n. <>id. +. Ochre ; காவிக்கல். (சீவக.353, உரை) (யாழ்.அக.) |
நற்செய்தி | naṟ-ceyti n. <>id. +. Good tidings, happy event ; நல்லசமாசாரம். (W.) |
நற்சொல் | naṟ-col n. <>id. +. Word of good omen ; நன்னிமித்தமொழி. இருண்டமாலை யிடத்து நற்சொற் கேட்டது (பு.வெ.1, 4, கொளு, உரை). |
நற்பரங்குன்றி | naṟparaṅkuṉṟi n. Sea salt; கடலுப்பு. (சங். அக.) |
நற்பலம் | naṟpalam n. Woolly dyeing rosebay. See வெட்பாலை. (மலை.) |
நற்பாலை | naṟ-pālai n. <>நல்1 +. A tree ; பாலைமரவகை. (மாட்டுவா.47.) |
நற்பிரியம் | naṟ-piriyam n. <>id. +. 1. Intimacy ; மிக்க அன்பு. (யாழ். அக.) 2. A chickweed; |
நற்பு | naṟpu n. <>id. Goodness ; நன்மை. நற்புடைய நாடமிர்து (சிறுபஞ்.4). |
நற்புத்தி | naṟ-putti n. <>id. +. 1. Advice, good counsel ; புத்திமதி. அவனுக்கு நற்புத்தி சொன்னேன். 2. Right-mindedness ; |
நற்புதிற்பு | naṟpu-tiṟpu n. <>நற்பு +. The good and the bad of a thing, merits and defects ; நன்மைதீமை. Tinn. |
நற்புறம் | naṟ-puṟam n. <>நல்1+. Right side, as of a fabric ; சீட்டித்துணிகளிலும் கடிதங்களிலும் அச்சிட்ட வடிவம் செம்மையாகத்தோன்றும் பக்கம். Loc. |
நற்போர் | naṟ-pōr n. <>id. +. War in conformity with the traditional code of honour ; தருமநெறி தவறாத யுத்தம். நற்போ ரோடா வல்விற்றூணி நாற்றி (முல்லைப்.38). |
நற்றத்தம் | naṟṟattam n. A treatise on prosody by Naṟṟattaṉār; நற்றத்தனாரியற்றிய ஒரு யாப்பு நூல். (யாப்.வி.) |
நற்றத்தனார் | naṟṟattaṉār n. The author of Naṟṟattam, said to be one of the 12 disciples of Agastya; அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவருள் நற்றத்தம் என்று வழங்கும் யாப்பிலக்கணமியற்றியவர். (யாப்.வி.1, பக்.18.) |
நற்றம் | naṟṟam n.<>நற்று. Goodness, opp. to kuṟṟam; குணம். நாயினேன் செய்தகுற்ற நற்றமாகவே கொள் ஞாலநாதனே (திவ்.திருச்சந்.111). |
நற்றரி - த்தல் | naṟṟari v. intr. <>id. +தரி To be well established; to settle firmly; நன்றாக நிலைத்தல். பெரியதிருவடி கழுத்திலே நற்றரிக்கவிருத்தல் (திவ்.திருமாலை, 10, வ்யா.பக்.47) |
நற்றவம் | naṟṟavam n. <>id. + தவம். Penance with a view to salvation ; வீடு பெறுதற்குச் செய்யுந் தவம். நற்றவஞ்செய்வார்க்கிடம் (சீவக.77). |
நற்றவமூர்த்தி | naṟṟava-mūrtti n. <>நற்றவம், Buddha ; புத்தன். (திவா) |
நற்றாய் | naṟṟāy n. <>நன்-மை+தாய். One's own mother ; பெற்ற தாய். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி.22, 99). |
நற்றானம் | naṟṟāṉam n. <>id. +தானம் A metrical device by which the first three letters of the name of the hero of a poem are made its opening letters, considered auspicious ; தலைவனியற்பெயரின் முதன்மூன்றெழுத்துக்களும் பிரபந்தமுதலில்வரப் பாடுதலாகிய நன்மைவிளைக்குஞ் செய்யுட்டானம். (பிங்.) |
நற்றிணை | naṟṟiṇai n. <>id. +. A classical anthology in Tamil, treating of aka-p-poruḷ, compiled by Paṉṉāṭu-tanta-pāṇṭiyaṉ-māṟaṉ-vaḷuti, one of eṭṭu-t-tokai, q.v.; பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி தொகுப்பித்ததும் எட்டுத் தொகையுள் ஒன்றானதும் அகப்பொருளைட் பற்றியதுமான தொகைநூல். |
நற்றிறம் | naṟṟiṟam n. <>id. +. 1. Righteous course; நீதிநெறி. நற்றிறம் படராக்கொற்கை வேந்தே (சிலப். வழக். 66). 2. Vow; |
நற்று | naṟṟu n. <>நன்று. That which is good ; நன்மை. நற்றாங்கதி யடைவோமெனில் (திருவாச.34, 5). |
நற்றுடி | naṟṟuṭi n. (பிங்.) 1. Root ; வேர் 2. Mast-wood. |
நற்றுளி | naṟṟuḷi n. 1. Gum of the fig tree; அத்திப்பிசின். (யாழ். அக.) 2. Fig tree. |
நற்றோழி | naṟṟōḻi n. <>நன்-மை+தோழி. Good, faithful maid ; அருமைத்தோழி. பாடுகம்வா வாழிதோழி நற்றோழி பாடுற்று (கலித்.41). |
நற | naṟa n. <>நறா. See நறவு 1,2 கொழுநீர் நறப்பருகும் பெருநீர்மை யளிகுலமே (திருக்கோ. 123). . |
நறநறப்பு | naṟa-naṟappu n. Strained relationship, estrangement ; மனவேற்றுமை. Loc |