Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாணெறி - தல் | nāṇ-eṟi, v. tr. <>நாண்2 +. To twang the bowstring; நாணைத்தெறித்து ஒலியெழுப்புதல். நாணேறிந்து முறைமுறை தொடர்ந்து (கம்பரா. நாகபாச. 61). |
| நாணேற்று - தல் | nāṇ-ēṟṟu-, v. tr. <>id. +. To bend a bow and fasten its string; வில்லைவளைத்து நாணைக்கொளுவுதல். |
| நாணேறிடு - தல் | nāṇ-ēṟiṭu-, v. tr. <>id. +. See நாணேற்று-. . |
| நாணையம் | nāṇaiyam, n. See நாணயம்1. Colloq. . |
| நாத்தலைமடிவிளி | nā-t-talai-maṭi-viḷi, n. <>நா2 +. Whistle; கீழ்க்கை. நாத்தலைமடிவிளிக்கூத்தொடு குயிறர (சீவக. 120). |
| நாத்தழும்பிரு - த்தல் | nā-t-taḻumpiru-, v. intr. <>id. + தழும்பு +. See நாத்தழும்பேறு-. நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும் (புறநா. 200). . |
| நாத்தழும்பு - தல் | nā-t-taḻumpu-, v. intr. <>id. +. See நாத்தழும்பேறு-. நாத்தழும்ப வேத்தா தார் (சீவக. 1469). . |
| நாத்தழும்பெழு - தல் | na-t-taḻumpeḻu-, v. intr. <>id. + தழும்பு +. See நாத்தழும்பேறு-. நாத்தழும்பெழ நாரணாவென்றழைத்து (திவ். பெருமாள். 2, 3). . |
| நாத்தழும்பேறு - தல் | nā-t-taḻumpēṟu-, v. intr. <>id. + id. +. To acquire ease in utterance, as tongue by constant recitation; பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). |
| நாத்தனார் | nāttaṉār, n. <>நாத்தூண். of nanāndr. [K. nādini.] Husband's sister; கணவனுடன்பிறந்தாள். |
| நாத்தாங்கி | nā-t-tāṅki, n. <>நா2 +. 1. See நாதாங்கி. (W.) . 2. Five-tubercled spurge, s. tr., Euphorbia neriifolia; |
| நாத்தாங்கிப்பேசு - தல் | nā-t-tāṅki-p-pēcu-, v. intr. <>id. +. (யாழ். அக.) 1. To falter in speech, stammer; திக்கிப்பேசுதல். 2. To speak thoughtfully; |
| நாத்தி 1 | nātti, n. <>நாத்தூண். See நாத்தனார். Loc. . |
| நாத்தி 2 | nātti, n. <>nāsti. 1. Non-existence; இன்மை. யாரியற்றினு நாத்திசெய் தெங்கணும் (விநாயகபு. 73, 30). 2. (Jaina.) Absence, as of a characteristic; 3. Destruction; |
| நாத்தி 3 | nātti, n. Sloping roof; தாழ்வாரம். (யாழ். அக.) |
| நாத்திகம் | nāttikam, n. <>nāstika. 1. Atheism; கடவுளில்லை யெனும் மதம். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). 2. Blasphemy; |
| நாத்திகமதம் | nāttika-matam, n. <>id. +. See நாத்திகம், 1. (சங். அக.) . |
| நாத்திகவாதி | nāttika-vāti, n. <>id. +. See நாஸ்திகன். Colloq. . |
| நாத்திகன் | nāttikaṉ, n. <>nāstika. Atheist. See நாஸ்திகன். நாத்திகரென் றேயுளத்து ணாடு (சைவச. பொது. 468, உரை). |
| நாத்திரம் | nāttiram, n. perh.na+asthira. (யாழ். அக.) 1. Wonder; அதிசயம். 2. Fame; |
| நாத்து | nāttu, n. <>நாத்தூண். See நாத்தனார். Loc. . |
| நாத்தூண் | nāttūṇ, n. of. nanāndr. [M. nāttūṇ.] See நாத்தனார். நாத்தூ ணங்கையொடு ... அடிசி லாக்குதற்கு (சிலப். 16, 19). . |
| நாதக்குடம் | nāta-k-kuṭam, n. <>nāda +. Conch; சங்கு. (யாழ். அக.) |
| நாதக்குமிழ் | nāta-k-kumiḻ, n. <>id. +. Graafian vesicles, small cavities in which the ova are developed in the ovaries of mammals; விந்து தங்கும் உடலுறுப்பு. (C. E. M. 47.) |
| நாதக்குழல் | nāta-k-kuḻal, n. <>id. +. 1. Musical pipe; ஊதுகருவி. 2. Fallopian tubes, ducts which conduct the ova from the ovaries to the uterus; |
| நாதகிருத்தியர் | nāta-kiruttiyar, n. <>nātha +. Angels employed on gracious errands; நற்காரியங்கட்கு அனுப்பப்படும் தேவதூதர். R. C. |
| நாதகீதம் | nāta-kītam, n. <>nāda +. Instrumental and vocal music; வாத்தியங்களாலும் சாரீரத்தாலும் உண்டாம் சங்கீதம். |
| நாதகீதன் | nāta-kītaṉ, n. <>id. +. šiva; சிவபிரான். (சங். அக.) |
| நாதசாரம் | nāta-cāram, n. perh. id. A medicine; மருந்துவகை. (சங். அக.) |
| நாதசுரம் | nāta-curam, n. <>id. +. See நாகசுரம். Colloq. . |
| நாததத்துவம் | nāta-tattuvam, n. <>nāda +. (šaiva.) A category. See சிவதத்துவம். (சி. போ. பா. 2, 2, பக். 139, புதுப்.) |
| நாதநாமக்கிரியை | nātanāmakkiriyai, n. <>nāthanāmakriyā. (Mus.) A musical mode; இராகவகை. |
