Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாதம் 1 | nātam, n. <>nāda. 1. Sound; சத்தம். (சூடா.) 2. Musical sound, blast of a trumpet or conch; 3. Song; 4. The nasal sound represented by a semi-circle and used as a mystic symbol; 5. A particular manifestation of šiva; 6. Ovum, germ cell, Ovulegerum; 7. Semen muliebre; |
| நாதம் 2 | nātam,. n. <>nātha. Condition of having a master or an interested person; தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது. Loc. |
| நாதமுனி | nāta-muṉi, n. <>nāthamuni. The first Vaiṣṇava ācārya who brought to light Tiruvāy-moḻi and other Prabandhas; திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களை முதன் முதற்கண்டு பிரபலப்படுத்திய ஸ்ரீவைஷ்ணவாசாரியத் தலைவர். (அஷ்டப். திருவரங்தந். காப்பு. 3.) |
| நாதரவி | nātaravi, n. Fat in the body; சரீரக்கொழுப்பு. (மூ. அ.) |
| நாதரூபதரை | nāta-rūpa-tarai, n. <>nāda-rūpa-dharā. Pārvatī; பார்வதி. புருடமோகினி நாத ரூபதரை (கூர்மபு. திரு. 22). |
| நாதரூபம் | nāta-rūpam, n. <>nāda +. Mode, form or state of the Supreme Being embodied in sound; சிவனது ஒலிவடிவு. |
| நாதவத்தம் | nātavattam, n. A small plant. See யானைநெருஞ்சி. (மலை.) |
| நாதவாகி | nāta-vāki, n. <>nāda + vāhin. See நாதக்குழல், 2. (C. E. M. 47.) . |
| நாதவிந்து | nāta-vintu, n. <>Nāda-bindu. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| நாதவியூகம் | nāta-yiyūkam, n. <>nāda +. (šaiva.) A category, one of nava-niyūkam, q.v.; நவவியூகத்துளொன்று. (சௌந்த. 1, உரை.) |
| நாதவுப்பு | nāta-v-uppu, n. perh. id. +. Salt from mines under the earth; பூமியில் உண்டாகும் உப்பு. |
| நாதன் | nātaṉ, n. <>nātha. 1. Master, lord, superior; தலைவன். (பிங்.) 2. King; 3. Husband; 4. Guru; 5. Sage, holy person; 6. The Supreme Being; 7. šiva. 8. Arhat; 9. Elder brother; |
| நாதஸ்வராவளி | nāta-svarāvaḷi, n. <>nāda+svarāvali. (Mus.) A musical mode; ஓர் இராகம். |
| நாதாக்கள் | nātākkaḷ, n. <>nātā nom. sing. of ātr. Saints, sages, eminent persons; ¢ஞானியர். நாதாக்கள் மூதாக்கள் நாட்களிலே. (W.) |
| நாதாக்கியை | nātākkiyai, n. <>nādākhyā. Pārvatī; பார்வதி. நாதாக்கியை பார்வதி மாமாயை (கூர்மபு. திரு. 20). |
| நாதாங்கி | nā-tāṅki, n. <>நா2 +. Hasp of a lock, staple; clincher of a chain; பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவுநிலையறுப்பு. |
| நாதாங்கிமொந்தன் | nātāṅki-montaṉ, n. <>நாதாங்கி +. A species of the montaṉ plantain, cultivated near Erode; ஈரோட்டுப் பக்கத்தில் வளரும் மொந்தன்வாழைவகை. Loc. |
| நாதாசயம் | nātācayam, n. <>nādā+ā-šaya. Ovary; சோணிதம் உண்டாகின்ற சிறுபை. (பைஷஜ.) |
| நாதாந்தம் | nātāntam, n. <>nādānta. (šaiva.) One of cōṭaca-kalā-pirācāta-yōkam, q.v.; சோடசகலாபிராசாதயோகத்தினுளொன்று. மிகு முச்சி நாதாந்தம் (தத்துவப். 140). (செந். ix, 248.) |
| நாதார் | nātār, n. <>U. nā + U. dār. Poor ryot; ஏழைக்குடி. (W.) |
| நாதார்கடன் | nātār-kaṭaṉ, n. <>நாதார் +. Amounts due by debtors who have become insolvents; irrecoverable debts; திரும்பப் பெறக்கூடாத கடன். (C. G.) |
| நாதார்பாக்கி | nātār-pākki, n. <>id. + U. bāqī. Arrears due from poor ryots; ஏழைக்குடிகளிடமிருந்து வரவேண்டிய நிலுவைக்கடன். (W.) |
| நாதான் | nātāṉ, n. <>nātha. Master, lord; தலைவன். நாதாணை நல்லானை நாரணனை (திவ். இயற். நான்மு. 64). |
| நாதி - த்தல் | nāti-, 11 v. <>nāda. intr. To emit sound; --tr. To sound; to play on a wind instrument; ஒலியெழுதல். நாதித் தணியசைய வாடிரூசல் (சிவப். பிரபந். வெங்கைக்க. 56). -- ஒலியெழுப்புதல். யாழை நாதித்தேன். |
| நாதி 1 | nāti, n. <>āti. 1. Relation; ஞாதியுறவினன். நாதியர்கள் கண்காணி கைக்கொள்ள (திருவிளை. பயகர. 41). 2. of. nātha. Protector; |
| நாதி 2 | nāti, n. of. சோமநாதி. A kind of asafoetida; பெருங்காய வகை. (W.) |
| நாதிக்காரன் | nāti-k-kāraṉ, n. <>நாதி2 +. See நாதி2, 1. Loc. . |
