Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாதியன் | nātiyaṉ, n. <>nātha. Lord, master; தலைவன். எவ்வுயிர்க்கும் நாதியன் (தேவா. 508, 1). |
| நாதேயம் | nātēyam, n. <>nādēya. 1. Rattan cane palm. See வஞ்சிக்கொடி. (மூ. அ.) 2. Gulancha. 3. Sulphate of copper; 4. Rock-salt; |
| நாதேனி | nātēṉi, n. Indian houndsberry. See மணித்தக்காளி. (மலை.) |
| நாந்தகம் | nāntakam,. n. <>nandaka. 1. Sword to Viṣṇu; திருமாலின் வாள். நாந்தகஞ் சங்கு தண்டு (திவ். பெரியாழ். 4, 1, 2). 2. Sword; |
| நாந்தல் | nāntal, n. <>நாந்து-. [T. nānudu, K. nāndu.] 1. Cloudiness; மந்தாரம். Loc. 2. See நாந்தற்காலம். 3. Dampness; |
| நாந்தற்காலம் | nāntaṟ-kālam, n. <>நாந்தல் +. Damp, cloudy weather; மந்தாரமாயிருக்குங் காலம். |
| நாந்தி 1 | nānti, n. <>nāndī. 1. An invocatory verse, as in a drama; நாடகமுன்னுரை. 2. Prologue; 3. A šrāddha ceremony performed to propitiate a class of manes before celebrating any auspicious event; |
| நாந்தி 2 | nānti, n. Back; முதுகு. Loc. |
| நாந்திகந்தரு | nāntikantaru, n. Tree turmeric; மரமஞ்சள். (சங். அக.) |
| நாந்திசிராத்தம் | nānti-cirāttam, n. <>nāndī-šrāddha. See நாந்தி1, 3. . |
| நாந்திமுகம் | nānti-mukam, n. <>nāndī-mukha. See நாந்தி 3. நாந்திமுகமெனுஞ் சிராத்த மோம்பி (தணிகைப்பு.வள்ளி.161) . |
| நாந்து - தல் | nāntu-, 5 v. intr. [K.nāndu.] To become wet; நனைதல். (யாழ்.அக.) |
| நாந்தெனி | nānteṉi,. n. See நாந்தொனி. (யாழ். அக.) . |
| நாந்தொனி | nāntoṉi, n. A plant; பூடு வகை.(சங்.அக.) |
| நாநல்கூர் - தல் | nā-nalkūr-, v. intr. <>நா2 +. To be poor or sparing in words; to be silent; பேசாதிருத்தல். மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை (மணி.10, 34) |
| நாநீட்டு - தல் | nā-nīṭṭu-, v. intr. <>id. + To speak, tell, as wagging one's tongue; (நாவைநீட்டுதல்) பேசுதல். ஒதியி னெதுங்கி..நாநீட்டும் (மணி.5, 108) |
| நாப்பண் | nā-p-paṇ, n. <>id. 1 Middle centre; நடு.பன்மீ னாப்பட் டிங்கள் போலவம் (புறந-13). 2. Central flat of a chariot; 3. Bridge of a lute; |
| நாப்பாடம் | nā-p-pāṭam, n. <>id. +. Lip-learned lessons; நெட்டுருப்பண்ணிய வாய்ப்பாடம். நாப்பாடஞ்சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந் தீப்புலவற் சேரார் (நாலடி 312). |
| நாப்பிவிடு - தல் | nāppi-viṭu-, v. tr. <>நாப்பு-. See நாப்புக்காட்டு-. (W.) . |
| நாப்பு 1 | nāppu, n. <>நகைப்பு. Ridicule, mockery;mimicry; பரிகாசம். இந்திரனு மெனை நாப்புக் காட்டுவ-னே(இராமநா.உயத்.80). |
| நாப்பு 2 - தல் | nāppu-, 5 v. tr. <>நாப்பு. See நாப்புக்காட்டு-. (W.) . |
| நாப்புக்காட்டு - தல் | nāppu-k-kāṭṭu-, v. tr. <>id. +. 1. To imitate in derision, to mimic; அழகு காட்டுதல்.(திவ். திருப்பா.28, வ்யா.பக்.239.) 2. To deceive; |
| நாப்புற்று | nā-p-puṟṟu, n. <>நா2+. Excrescence or cancerous disease on the tongue; நாநோவு வகை. |
| நாப்பொடிதல் | nā-p-poṭital, n. <>id. +. Drying-up of the tongue; நாவுலர்கை. (யாழ். அக.) |
| நாபதி | nā-pati, n. <>id. + He whose grace is indispensable for speech; நாவுக்கு நிர் வாககன். நாரணனை நாபதியை (திவ். இயற். நான்மு. 67). |
| நாபம் | nāpam, n. <>vatsa-nābha. A strong poison prepared from the root of Indian aconite; விஷவகை. (W.) |
| நாபி 1 | nāpi, n. <>nābhi. 1. Navel; கொப்பூழ். (பிங்.) 2. Musk; |
| நாபி 2 | nāpi, n. <>vatsa-nābha. 1. Indian aconite. See வச்சநாபி. 2. Antidotes to aconite, being four in number, viz., antaṇa-nāpi; cattiriya-nāpi,vaiciya-nāpi, cūttira-nāpi; |
| நாபிக்கொடி 1 | nāpi-k-koṭi, n. <>நாபி1 +. Umbilical cord. See தொப்புட்கொடி. (இங். வை.) |
| நாபி க்கொடி 2 | nāpi-k-koṭi, n. Malabar glory-lily, m . cl. Gloriosa superba; கொடிவகை. |
