Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாபிசன் | nāpicaṉ, n. <>nābhi-ja. Brahmā, as born of Viṣṇu's navel ; [திருமாலின் உந்தியிற் பிறந்தோன்] பிரமன். (யாழ். அக.) |
| நாபிசன்மன் | nāpi-caṉmaṉ, n.<>nābhi-janman. See நாபிசன். (யாழ். அக.) . |
| நாபிசூத்திரம் | nāpi-cuttiram, n. <>id. + sūtra. Umbilical cord . See தொப்புட்கொடி. (W.) |
| நாபித்தானம் | nāpi-t-tāṉam, n. <>id. + sthāna. Region of the navel ; உந்திப்பிரதேசம் |
| நாபிதன் | nāpitaṉ, n.<>nāpita. 1.Son born of Niṭātaṉ and a Woman of Brahmin or Kṣatriya caste; அந்தணர் மாதையேனும் அரசர்மாதையேனும் நிடாதன் கூடிப் பெற்ற பிள்ளை. (சூத. சிவமான்.12,26.) 2 See நாவிதன். |
| நாபிநாடி | nāpi-nāṭi, n. <>nābhi-nādī. See தொப்புட்கொடி. (யாழ். அக.) . |
| நாபிநாளம் | nāpi-nāḷam, n. <>nābhi-nādi. See தொப்புட்கொடி. வாய்ந்தநீ ணாபிநாளம் வற்கலை மடியிற் றழ (இரகு. அயனுத. 6). |
| நாபிரம் | nāpiram, n.perh. nābhila. Semen; விந்து. (சங். அக.) |
| நாபீலம் | nāpīlam, n. <>nābhīla. (யாழ்.அக.) 1.Pudendum muliebre; கடிதடம். 2. The cavity of the navel; |
| நாம் 1 | nām, n. Fear, dread, terror ; அச்சம். (தொல். சொல். 365.) |
| நாம் 2 | nām, pron. 1. [K.nāvu.] We; தன்மைப்பன்மைச்சொல். (தொல். சொல். 164.) 2. You, used honorifically; |
| நாம்பல் | nāmpal, n. <>நாம்பு. 1.Emaciation, leanness ; இளைப்பு. (நாமதீப. 761.) 2. Emaciated creature ; |
| நாம்பன் | nāmpaṉ, n. <>நாம்பு. Steer, bull-calf; இளவெருது. (J.) |
| நாம்பு 1 - தல் | nāmpu-, 5 v. intr. [K. nāmbu.] To become meagre, thin or emaciated; இளைத்தல். (W.) |
| நாம்பு 2 | nāmpu, n. <>நாம்பு-. [K.nāmbu.] 1. Anything lean; மெலிந்தது. (W.) 2. Small climber; |
| நாமக்கட்டி | nāma-k-kaṭṭi, n. <>நாமம் 3 +. Pipe clay, used for the Vaiṣṇava mark ; திருமண்கட்டி. Colloq. |
| நாமக்கரடி | nāma-k-karaṭi, n.<>id. +. A species of bear ; கரடிவகை.Loc. |
| நாமக்கரும்பு | nāma-k-karumpu, n. <>id. +. A species of red sugar-cane with white streaks ; நாமம்போற் கீறுகளமையைப்பெற்ற கரும்பு.Loc. |
| நாமக்காரர் | nāma-k-kārar, n. <>id. + Vaiṣṇavas, as wearing the nāmam; [நாமந்தரித்தவர்] வைணவர். |
| நாமக்காறல் | nāma-k-kāral, n. prob. id. + Sea-fish, silvery, with golden stripes along the sides, attaining 5 in. in length, Equula daura; பக்கங்களிற் பொற்கோடுகள் கொண்டதும், வெண்ணிறமானதும். ஐந்து அங்குலம்வரை வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. |
| நாமக்கிரியை | nāmakkiriyai, n. See நாதநாமக்கிரியை. சாதாரி தேசி நாமக்கிரியை முதல் (திருப்பு.327). . |
| நாமக்குச்சரி | nāma-k-kuccari, n. <> நாமம் 3 + ghūrjarī. A saree . See நாமதாரி, 2. (யாழ்.அக.) |
| நாமக்குச்சலி | nāma-k-kuccail, n. <>id. +. A saree . See நாமதாரி, 2. (யாழ். அக.) |
| நாமக்குச்சிலி | nāma-k-kuccili, n. <>id. +. See நாமக்குச்சலி. (W.) . |
| நாமக்கூசா | nāma-k-kūcā, n. <>id. +. A goglet made of white clay ; நாமக்கட்டியால் செய்த கூசா. (W.) |
| நாமகரணம் | nāma-karaṇam, n. <>nāmakaraṇa. Ceremony of naming a child on the 11th day after birth, one of cōṭaca-camskāram, q.v.; சோடசசம்ஸ்காரத்துள் பிறந்தகுழந்தைக்குப் பதினொராநாளிற் பெயரிடுவதான சடங்கு. மாதவிமகட்கு நாமகரணம் பண்ணுவோமென்று (சிலப் 15,26 உரை). (திருவானைக். கோச்செங். 14) |
| நாமகள் | nā-makaḷ, n. <>நா2+. Sarasvatī, Goddess of learning, as residing in the tongue of Brahmā, [பிரமாவின் நாவில் வசிப்பவள் சரசுவதி. நாமகளோடு] பல்லாண்டிசைமின் (திருவாச.9, 1). |
| நாமகா | nāmakā, n. <>U.nāmakā. See நாமகார்த்தம். (W.) . |
| நாமகார்த்தம் | nāmakārttam, n. <>id. +. That which is only nominal . See பிநாமி. (W.) |
| நாமகீர்த்தனம் | nāma-kīrttaṉam, n. <>nāman + Singing God's names ; கடவுள் திருப்பெயர் ஓதுகை. |
| நாமச்சி | nāmacci, n. Snail; நத்தை.(யாழ்.அக.) |
