Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாமசங்கிதை | nāma-caṅkitai, n. <>nāmasamhitā. A treatise on architecture ; ஒரு சிற்பநூல். (இருசமய. உலகவழக்கப்.2,3.) |
| நாமசங்கீர்த்தனம் | nāma-caṅkīrttaṉam, n. <>nāman +. See நாமகீர்த்தனம். . |
| நாமசேடம் | nāma-cēṭam, n. <>nāma-šēṣa. Death, as leaving only one's name behind ; [பெயர் மாத்திரம் மிஞ்சுகை] மரணம். (யாழ்.அக) |
| நாமஞ்சாத்து - தல் | nāma-cāttu-, v. <>நாமம்3 +.tr. 1.To give name to; பேரிடுதல். 2. To decieve; To wear the Vaiṣṇava tridental mark; |
| நாமஞ்சூடு - தல் | nāma-cūṭu-, v. tr. <>id. See நாமஞ்சாத்து-, 1. (W.) . |
| நாமஞ்செய் - தல் | nāma-cey-,. v. tr. <>id. +. 1. To give name to; பேரிடுதல். கொடியிடை தன்னையென் னாமஞ்செய்த நன்னாள் (மணி.7,35). 2. To recite the names of a deity; |
| நாமடந்தை | nā-maṭantai, n. <>நா2+. See நாமகள். நாமடந்தை யழுதாள் (கம்பரா. பிராட்டி களங்.5). . |
| நாமடிக்கொள்(ளு) - தல் | nā-maṭi-k-koḷ-, v. intr. <>id. + மடி-+. To double the tongue; நாவை மடித்தல். நாமடிக்கொண்ட உதட்டையும் (ஈடு, 4,8,7). |
| நாமத்தவளை | nāma-t-tavaḷai, n. <>நாமம்3 +. A kind of frog; தவளைவகை .Loc. |
| நாமத்தாலி | nāma-t-tāli, n. <>id. + A kind of tāli worn by the bride in the viḻakkiṭu-kaliyāṉam of Kārkāttu-vēḷāḷar; கார்காத்தவேளாளரது விளக்கிடுகலியாணத்தில் பெண்கழுத்திலணியும் தாலிவகை (G. Tn. D. I,241.) |
| நாமத்துத்தி | nāma-t-tutti, n. perh. id. +. A plant; பூடுவகை. (யாழ்.அக.) |
| நாமதாது | nāma-tātu, n.<>nāman+ . Verb derived from a noun, nominal verb; பெயரடியாகப் பிறந்தவினை. (பி.வி. 35, உரை) |
| நாமதாரணம் | nāma-tāraṇam, n. <>id. +. 1. Bearing a name; பெயர் தரிக்கை. 2. Wearing the Vaiṣṇava mark; |
| நாமதாரணை | nāma-tāraṇai, n. <>id. +. 1. A mode in the art of concentrated meditation, one of nava-tāraṇai, q.v.; நவதாரணையுள் ஒன்று. 2. Worship of the omnipresent God with a form and a name; |
| நாமதாரி | nāma-tāri, n.<>id. +. 1. A Vaiṣṇava, as wearing the nāmam; [திருமண் தரிப்போன்] வைணவன். 2. A striped saree of diverse colours, as resembling the tridental mark; 3. Female bamboo, m.tr., Bambusa vulgaris; |
| நாமதாரிக்கரும்பு 1 | nāmatāri-k-karumpu, n. <>நாமதாரி +. See நாமக்கரும்பு.Loc. . |
| நாமதாரிக்கரும்பு 2 | nāmatāri-k-karumpu n. A glossary in 808 stanzas of veṇpa metre by šivasubrahmaṇya Kavirāyar of Kalliṭaikkuṟicci; கல்லிடைக்குறிச்சிச் சிவசுப்பிரமணியகவிராயரால் 808 வெண்பாக்களில் இயற்றப்பட்ட நிகண்டு. |
| நாமதேயம் | nāma-tēyam, n. <>nāmadhēya. Name, appellation; பெயர். தசமுகன் பரவு நாமதேயம துடையார் (தேவா. 650, 8). |
| நாமநீர் | nāma-nīr, n. <>நாமம்2+ . Sea, as inspiring fear; [அச்சத்தைத் தருவது] கடல், நாமநீர்வைப்பில் (குறள்.149) |
| நாமப்பாறை | nāma-p-pāṟai, n. perh. நாமம் 3 +. Horse-mackerel, silvery with broad golden stripes, Caranx leptolepsis; அகன்ற பொற்கோடுள்ளதும் வெண்ணிறமுடையதுமான மீன்வகை . |
| நாமப்பொருத்தம் | nāma-p-poruttam, n. <>id. +. (Astrol.) Agreement in the names of the prospective bride and bridegroom; மணமக்கள் இருவரின் பெயர்களுக்குள்ள பொருத்தம் |
| நாமம் 1 | nāmam, n. A common herb with milk-white flowers. See தும்மை. (மலை.) |
| நாமம் 2 | nāmam, n. <>நாம்1. 1. Fear; அச்சம். நாமக்காலத்து (தொல். பொ. 146). 2. Fulness; |
| நாமம் 3 | nāmam, n. <>nāman. 1. Name, appellation ; பேர். இவைமூன்ற னாமங்கெட (குறள். 360). 2. Reputation, fame; 3. The Vaīṣṇava sectarian mark, worn on the person in 12 places, reciting the 12 names of Viṣṇu; 4. White clay, used for nāmam. 5. (Jaina.) The karma which determines one's kati, one of eṇ-kuṟṟam , q.v.; 6. The part of the scales enclosing the needle, as resembling a nāmam, |
