| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நாற்பண் | nāṟ-paṇ, n. <>id.+. The four kinds of melody-types in reference to the four tracts, viz., kuṟici, pālai, marutam, cevvaḻi; நான்குநிலத்துக்குரிய குறிஞ்சி, பாலை மருதம், செவ்வழி என்ற பண்கள். (பிங்.) | 
| நாற்பது | nāṟ-patu, n. <>id.+பத்து. [K. nālvattu, M. nāppatu.] The number 40; நாலு பத்துக்கொண்ட எண். | 
| நாற்பதுகாட்சி | nāṟpatu-kāṭci, n. A sub-division of the vaḷḷuva caste; வள்ளுவரில் ஒரு உள்வகுப்பு. | 
| நாற்பதுநாளொருசந்தி | nāṟpatu-nāḷoru-canti, n. <>நாற்பது+. Quadragesima, Lent; ஒருவேளை ஆகாரத்துடன் நாற்பதுநாள் கைக்கொள்ளும் விரதவகை R. C. (w.) | 
| நாற்பயன் | nāṟ-payaṉ n. <>நால்+. The four great objectives of life. See நாற்பொருள். (w.) | 
| நாற்பாட்டன் | nāṟ-pāṭṭaṉ, n. <>id.+. Great-grandfather's father; பாட்டனுக்குப் பாட்டன். | 
| நாற்பால் | nāṟ-pāl, n. <>id.+. The four castes; நான்கு வருணம். நாற்பாலுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் (புறநா.183). | 
| நாற்பால்மரம் | nāṟ-pāl-maram, n. <>id.+. The four kinds of trees which abound in sap, viz., āl, aracu, atti, itti; பால் மிகுதியாயுள்ள ஆல், அரசு, அத்தி, இத்தி யென்ற நால்வகைமரங்கள். (சிலப். 6, 76, உரை.) | 
| நாற்பான் | nāṟ-pāṉ,. n. See நாற்பது. (யாழ். அக.) . | 
| நாற்பொருள் | nāṟ-poruḷ, n. <>நால்+. The four objectives of life viz., aṟam, poruḷ, iṉpam, vīṭu; அறம், பொருள், இன்பம், விடு என்ற நான்கு உறுதிப்பொருள்கள். நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி. (நன். 4). | 
| நாற்பொன் | nāṟ-poṉ, n. <>id.+. The four kinds of gold viz., āṭakam, kiḷicciṟai, cātarūpam, cāmpūnatam; ஆடகம், கிளிச்சிறை, சாத ரூபம் சாம்பூநதம் என்ற நால்வகைப் பொன். (சூடா.) | 
| நாற்றங்கால் | nāṟṟaṅ-kāl, n. <>நாறு+. 1. Land used for raising seedlings, seed-bed, nursery; நாற்றுக்காக விதையிடுஞ் செய். (திருமந். 2877). 2. Cause, origin; | 
| நாற்றங்கேள் - தல் [நாற்றங்கேட்டல்] | nāṟṟaṅ-kēḷ, v. intr. <>நாற்றம்+. To smell or perceive smell; மணமறிதல். நாற்றங்கேட்டலுந் தின்ன நயப்பதோர் கூற்று (கம்பரா. தாடகை. 63). | 
| நாற்றடி | nāṟṟṭi, n. <>நாறு+. See நாற்றங்கால், 1. Nā. . | 
| நாற்றடிப்பாட்டம் | nāṟṟaṭi-p-pāṭṭam, n. <>நாற்றடி+. Lease given to raise seedlings; ஒருவர் நிலத்தில் மற்றவர் நாற்றுப்பாவுதற்குக் கொடுக்குங் குத்தகை. Nā. | 
| நாற்றந்தகரை | nāṟṟan-takarai, n. perh. நாற்றம்+. Negro coffee; பேயவரை. (J.) | 
| நாற்றம் | nāṟṟam, n. <>நாறு-. [K. Tu. nāta, M. nāṟṟam.] 1. Smell, scent, odour; மணம். நாற்ற நாட்டத் தறுகாற் பறவை (புறநா. 70). 2. Sense of smell, one of aim-pulaṉ, q. v.; 3. Offensive smell, stench; 4. Sweet flag; 5. Toddy; 6. Connection; 7. Origin, appearance; | 
| நாற்றம்வீசு - தல் | nāṟṟam-vīcu-, v. intr. <>நாற்றம்+. To emit a bad smell, as a carcass, தீயநாற்றமடித்தல். | 
| நாற்றமெடு - த்தல் | nāṟṟam-eṭu-, v. intr. <>id.+. See நாற்றம்விசு-. . | 
| நாற்றவுணவு | nāṟṟa-v-uṇavu, n. <>id.+. Oblation or burnt offering; அவியாகிய உணவு. நாற்ற வுணவின் (மதுரைக். 458). | 
| நாற்றி | nāṟṟi, n. <>நான்கு. Fourfold; நான்கு மடங்கு. கிளந்தவற்றின் . . . நாற்றியே (சீவக. 567). | 
| நாற்றிசை | nāṟṟicai, n. <>நால்+. The four cardinal points; நான்கு திக்குகள். நாற்றிசை முனிவரும் (திருவாச. 4, 3). | 
| நாற்று - தல் | nāṟṟu-, 5 v. tr. Caus. of நால்-. 1. To hang, suspend; தொங்கவிடுதல். முத்துத்தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1,49). 2. To hang a person; | 
| நாற்று | nāṟṟu, n. <>நாறு. Seedlings reared for transplantation; பிடுங்கிநடக்கூடிய பயிர். | 
| நாற்றுக்கட்டு | nāṟṟu-k-kaṭṭu, n. <>நாற்று+. A bundle of nāṟṟu-muṭi; நாற்றுமுடிகளின் தொகுதி. | 
| நாற்றுத்தேங்காய் | nāṟṟu-t-tēṅkāy, n. <>id.+. Seed coconut; தேங்காய் நெற்று. (J.) | 
| நாற்றுநடவு | nāṟṟu-naṭavu, n. <>id.+. Transplantation of seedlings; நாற்றுநடுகை. | 
