| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நாற்றுப்பாக்கு | nāṟṟu-p-pākku, n. <>id.+. Superior areca-nuts, used as seeds; விதைக்குரிய பாக்கு. (J.) | 
| நாற்றுப்பாத்தி | nāṟṟu-p-pātti, n. <>id.+. Seed-bed, nursery; நாற்று உண்டாக்கும் செய். | 
| நாற்றுப்பாவு - தல் | nāṟṟu-p-pāvu-, v. intr. <>id.+. 1. To sow seeds; வித்தூன்றுதல். 2. To transplant seedlings; | 
| நாற்றுப்பிடி | nāṟṟu-p-piṭi, n. <>id.+. See நாற்றுமுடி. . | 
| நாற்றுமரம் | nāṟṟu-maram, n. <>id.+. Tree grown from a seedling; நாற்றுவிட்டுப் பிறகு எடுத்து நட்டுவளர்க்கும் மரம். (J.) | 
| நாற்றுமுடி | nāṟṟu-muṭi, n. <>id.+. A small bundle of seedling for transplantation; ஒருசேரக்கட்டிய நாற்றின்முடிப்பு. (ஏரெழு. 31.) | 
| நாற்றுவிடு - தல் | nāṟṟu-viṭu-, v. tr. <>id.+. To grow seedlings; நாற்று உண்டாக்க விதை விதைத்தல். | 
| நாறல் | nāṟal, n. <>நாறு-. 1. Stinking, being offensive in smell; நாறுகை. 2. Stench, bad smell; 3. Stinking object; | 
| நாறல்வாயன் | nāṟal-vāyaṉ, n. <>நாறல்+. 1. Person whose mouth smells foul; ¢வாய்நாற்ற முடையவன். 2. Miser; 3. Dirty, loathsome person; | 
| நாறற்பாக்கு | nāṟaṟ-pākku, n. <>id.+. Areca-nut soaked in water till its husk begins to putrefy; சுவையுண்டாகத் தோலை அழுகும்படி செய்த பாக்குவகை. (யாழ். அக.) | 
| நாறனா | nāṟaṉā, n. Sola pith. See நெட்டி. (மூ. அ.) | 
| நாறி 1 | nāṟī n. <>nārī cf. kumārī. Aloe. See கற்றாழை. (மலை.) | 
| நாறி 2 | nāri, n. cf. நாரி. See நன்னாரி. (சங். அக.) . | 
| நாறு - தல் | nāṟu-, v. [K. M. nāṟu.] intr. 1. To emit a sweet smell, to give forth perfume; மணத்தல். நாறு பூம்பொழி னாரையூர் (தேவா. 215, 1). 2. To stink; 3. To appear, arise; 4. To come into being; to be born; 5. To sprout, shoot forth; To smell; | 
| நாறு | nāṟu, n. <>நாறு-. [T. M. nāṟu, K. nāṟē.] 1. See நாற்று. நாறிது பதமெனப் பறித்து (சீவக. 45). . 2. Shoot, sprout; | 
| நாறுகட்டி | nāṟu-kaṭṭi, n. <>id.+. Asafoetida; பெருங்காயம். (யாழ். அக.) | 
| நாறுகரந்தை | nāṟu-karantai, n. <>id.+. Indian globe thistle. See கொட்டைக்கரந்தை (குறிஞ்சிப்.76, உரை.) | 
| நாறுநறுவிலி | nāṟu-naṟuvili, n. <>id.+. Clove-leaved black plum, 1. tr., Eugenia jambolana caryophyllifolia; கொட்டைநாகவகை. | 
| நான் | nāṉ, pron. [T. nā, K. nān, M. āṉ.] I; தன்மையொருமைப் பெயர். | 
| நான்காம்வேதம் | nāṉkām-vētam, n. <>நான்கு+. The Atharva Vēda, as the fourth; [வேதத்துள் நான்காவது] அதர்வேதம். | 
| நான்கு | nāṉku, n. <>நால். [M. nāṅku.] The number four; முன்றுக்குமேல் ஒன்றுகொண்ட எண். அறம்புகழ்¢ கேண்மை பெருமையிந் நான்கும் (நாலடி, 82). | 
| நான்கெல்கைமால் | nāṉkelkai-māl, n. <>நான்கு+எல்லை+U.māl. 1. Limits or boundaries of a piece of land; நிலவெல்லை. 2. Jurisdiction, as pertaining to boundaries; | 
| நான்மணிக்கடிகை | nāṉ-maṇi-k-kaṭikai, n. <>நால்+. An ancient didactic work Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku, q. v.; பதினெண்கிழ்க்கணக்கினுள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்பற்றி நு£றுசெய்யுட்களில் விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட நீதிநூல். | 
| நான்மணிமாலை | nāṉ-maṇi-mālai, n. <>id.+. A poem of 40 stanzas in antāti-t-totai; அந்தாதிக்தொடையாகப் பாடப்பட்டதும் வெண்பா, கலித்துறை, அகவல் விருத்தம் என்பன மாறி மாறி. இயைந்து வரும் நாற்பது செய்யுள்கொண்டதுமான பிரபந்தவகை. (பன்னிருபா. 255.) | 
| நான்மருப்பியானை | nāṉ-maruppi-yāṉai, n. <>id.+. மருப்பு+. The four-tusked elephant of Indra; [நாற்கொம்புடைய யானை] ஜராவதம். | 
| நான்மருப்பியானையூர்தி | nāṉ-maruppi-yāṉai-y-ūrti, n. <>நான்மருப்பியானை+. Indra, as riding airāvatam; [ஜராவதத்தை வாகனமாக உடையவன்] இந்திரன். (சூடா.) | 
| நான்மலத்தார் | nāṉ-malattār, n. <>நால்+. (šaiva.) Piraḷayākalar having four malas, viz., āṇavam, kaṉmam, cuttamāyai, tirōtāyi; ஆணவம் கன்மம். சுத்தமாயை, திரோதாயி என்னும் நான்கு மலமுடைய பிரளயாகலர். (தத்துவப். 21, உரை.) | 
