Word |
English & Tamil Meaning |
---|---|
ஆதரிசம் | ātaricam n. <>ā-darša, cf.Pkt. Adarisa. Mirror; கண்ணாடி. |
ஆதரிசனம் | ātaricaṉam n. <>ā-daršana. See ஆதரிசம். (பிங்.) |
ஆதல் | ātal conj. <>ஆ-. Or; ஆவது எனப் பொருள்படுமிடைச்சொல். பொருந்துமோர் துலாத்தினாத லரைத்துலாம் பொன்னினாதல் . . . தகடுசெய்தே (கூர்மபு.தான.65). |
ஆதலால் | ātalāl adv. <> id. Therefore. திவ்.பெரியதி. (5, 8, 8.) |
ஆதவம் | ātavam n. <>ā-tapa. 1. Sunshine. See ஆதபம். ஆதபம். (பிங்.) 2. Light; |
ஆதவன் | ātavaṉ n. <> id. Sun. See ஆதபன். (பிங்.) |
ஆதளை | ātaḷai n. [K.ādalu.] 1. Castor plant. See ஆமணக்கு. ஆமணக்கு. (மூ.அ.) 2. Common physic-nut, m.sh., Jatropha curcas; |
ஆதன் 1 | ātaṉ n.prob. ஆ8. 1. Soul; ஆன்மா. (திவா.) 2. Ignorant person; 3. Blind man; 4. A proper name in general use in ancient times; |
ஆதன் 2 | ātaṉ n. cf. āpta. Arhat; அருகன். (சூடா.) |
ஆதன்மையால் | ātaṉmaiyāl adv. <>ஆதல்-மை. Therefore; ஆகையால். ஆதன்மையா லதுவேநம துய்விடம் (திவ்.பெரியதி. 2, 4, 9). |
ஆதனம் | ātaṉam n. <>āsana. 1. Posture. See ஆசனம். தலையினோ டாதனந் தட்ட (திவ்.திருவாய்.3, 5, 3). 2. Property; |
ஆதாபாதாவெனல் | ātā-pātā-v-eṉal n. <> U. ādhābādhā+. A form of respectful greeting and salutation among Muhammadans; மகமதியர்களுள் வரவேற்குங்காலத்தில் சொல்லும் உபசார வார்த்தை. Muham. |
ஆதாம் | ātām n. <> Heb. Adām. Name of the first man; முதல்மனிதன். Chr. |
ஆதாயஞ்செலவு | ātāya-celavu n. <>ādāya+. Income and expenditure; வரவுசெலவு. |
ஆதாயம் | ātāyam n. <>ā-dāya. 1. Profit, gain, income; இலாபம். வணிகருக் காதாய மீது நினைவு (குமரே.சத.9). 2. The 11th house from the ascendant; |
ஆதாரசிலை | ātāra-cilai, n. <>ā-dhāra+. The pedestal of stone on which a stone idol is fixed; சிலாவிக்கிரகத்தைத் தாங்கும் அடிக்கல். (W.) |
ஆதாரநிலை | ātāra-nilai n. <> id.+. Support, prop; பற்றுக்கோடு. (பிங்.) |
ஆதாரம் 1 | ātāram n. <>ā-dhāra. 1. Support, stay, prop; பற்றுக்கோடு. (சேதுபு.கந்த.86.) 2. Ground, basis; 3. Body, as the abode of the soul; 4. Document, voucher, title deed by which a right to property is established and maintained; |
ஆதாரம் 2 | ātāram n. <>ā-sāra. Rain; மழை. (W.) |
ஆதாரலக்கணை | ātāra-lakkaṇai n. <>ā-dhāra+lakṣanā. Metonymy, where by the name of the support is figuratively used for the thing supported; இடவாகுபெயர். (சி.சி.பாயி. குருவண.ஞானப்.) |
ஆதாளி | ātāḷi n. [M.atuḷi.] 1. Noise, bustle, roar; பேரொலி. வானோர் பேரியாதாளி யுறநடிக்குஞ் சிற்பொது (குற்றா.தல.திருக்குற்றா.24). 2. Agitation, perturbation, stir; 3. Boasting, bragging, bravado; |
ஆதாளிக்காரன் | ātāḷi-k-kāraṉ n. ஆதாளி+ Braggart, boaster, vaunter; இடம்பப் பேச்சுக்காரன். |
ஆதாளை | ātāḷai n. Dial. var. of ஆதளை. . |
ஆதானம் 1 | ātāṉam n. <>ā-dhāna. Depositing, placing, usually in compounds as அக்கினியாதானம், கர்ப்பாதானம்; வைக்கை. (சேதுபு. அகத்.38.) |
ஆதானம் 2 | ātāṉam n. <>ā-dāna. Taking, seizing; பற்றுகை. (மச்சபு. பிரமமு.11.) |
ஆதானும் | ātāṉum pron. <>யாதாயினும். Whatever, whichever; எதுவாயினும். ஆதானும் செய்ய (திவ்.இயற்.பெரியதிருவ.25). |
ஆதி 1 | āti n. <>ādi. 1. Beginning, commencement; தொடக்கம். (திருவாச.7, 1.) 2. That which has a beginning; 3. Source, cause; 4. Antiquity; 5. The Supreme Being, the first applied especially to Brahmā, Siva, Viṣṇu, Arhat and Buddha; 6. Independent sovereign, supreme ruler, emperor; 7. Sun; 8. Variety of time-measure. See ஆதிதாளம். 9. And others beginning from; |