Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிரைமீட்சி | nirai-mīṭci, n. <>id. +. Recovering the cattle seized by one's enemy; பகைவர் கவர்ந்த பசுநிரையை மீட்கை. |
| நிரைமீட்டல் | nirai-mīṭṭal, n. See நிரைமீட்சி. (பு. வெ. 2, 1, கொளு, உரை.) . |
| நிரையசை | nirai-y-acai, n. <>நிரை+. Metrical syllable made up either of two short vowels as veṟi, or of two short vowels followed by a consonant as niṟam, or of a short and a long vowel as cuṟā, or of a short and a long vowel followed by a consonant as viḷām; இணக்குறிலாலேனும் ஒற்றடுத்த இணைக்குறிலேனும் குறில் நெடிலாலேனும் ஒற்றடுத்த குறில்நெடிலாலேனும் ஆகிய செய்யுளசை. |
| நிரையம் | niraiyam, n. <>niraya. Hell; நரகம். நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம் (பதிற்றுப்.15). |
| நிரையாடல் | nirai-y-āṭal, n. <>நிரை +. Playing with stones on squares drawn on the ground; தரையிற் சதுரக்கோடுகீறிக் கற்களை வைத்து ஆடும் விளையாட்டுவகை. (J.) |
| நிரையொன்றாசிரியத்தளை | nirai-y-oṉṟāciriyattaḷai, n. <>id. +. Metrical connection in āciriyappā between ay two adjoining cīr where the last syllable of the preceding and the first syllable of the succeeding cīr are nirai; ஆசிரியப்பாவில் நிரையீற்றியற்சீர்முன் நிரை முதலியற்சீர் வந்து ஒன்றுந் தளை. (காரிகை, உறுப்.10.) |
| நிரோசாதம் | nirōcātam n. perh. nirōdhana. (šaiva.) See நிரோதி. மூன்று விரற் புகை நிரோசாதம் (தத்துவப்.140). . |
| நிரோட்டகம் | nirōṭṭakam, n. <>nitōṣṭhyaka. A kind of verse without labials or labio-dentals; இதழியைந்து பிறவா எழுத்துக்களால் ஆகிய செய்யுள். திருச்செந்தில் நிரோட்டகயமக வந்தாதி. |
| நிரோட்டம் | nirōṭṭam n. <>nir-ōṣṭhya. See நிரோட்டகம். . |
| நிரோட்டியம் | nirōṭṭiyam, n. <>id. See நிரோட்டகம். இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம் (மாறனலங். 274). . |
| நிரோட்டியவோட்டியம் | nirōṭṭiya-v-oṭṭiyam, n. <>நிரோட்டியம் +. A stanza in which the first half is nirōṭṭiyam and the second half ōṭṭiyam; செய்யுளின் முற்பாதி நிரோட்டியமும் பிற்பாதி ஓட்டியமுமாகப் பாடும் கவி. (மாறனலங். 276, உரை.) |
| நிரோதம் | nirōtam, n. <>ni-rōdha. 1. Impediment, hindrance தடை. 2. Restraint, control; |
| நிரோதனை | nirōtaṉai n. <>ni-rōdhanā. (Jaina.) Control over the passions; புலனடக்கம். வீர னிரோதனை யம்பிற் கொன்றான் (சீவக. 3080). |
| நிரோதி | nirōti, n. <>ni-rōdhin. (šaiva.) One of the 16 mystic centres in the body in which šakti manifests herself; சோடசகலையுள் ஒன்று. சந்திரன்மேல் நிரோதிநாதம் (செந். ix, 248). |
| நிரோதினி | nirōtiṉi, n. <>ni-rōdhini. See நிரோதி. (தத்துவப். 130, உரை.) . |
| நில் - தல் [நிற்றல்] | nil-, 3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உதல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29); 2. To stop, halt, tarry; 3. To be steadfast; to perservere, persist in a course of conduct; 4. To stay, abide, continue; 5. To cease; to be discontinued, stopped or suspended; 6. To be subdued; 7. To remain; to be left, as matter in a boil, as disease in the system; to be due, as a debt; 8. To wait, delay; |
| நிலக்கடம்பு | nila-k-kaṭampu, n. <>நிலம்+. A plant, s.sh., justicia accaulis; செடிவகை. (A.) |
| நிலக்கடலை | nila-k-kaṭalai, n. <>id. +. Ground-nut, Arachis hypogea; மணிலாக்கொட்டை. |
| நிலக்கணம் | nila-k-kaṇam, n. <>id. +. (Poet.) Metrical foot of three nirai (.) as karu-viḻaṅ-kaṉi, considered auspicious at the commencement of a poem; மூன்று நிரையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை பயக்குமென்று கருதப்படுவதுமான செய்யுட்கணம். நிலக்கணந் தானே மலர்த்திரு விளங்கும் (இலக்.வி.800, உரை). |
