Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலத்தேவர் | nila-t-tēvar, n. <>id. +. Brahmins, as gods on earth; (பூசுரர்) பிராமணர். மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும் (திவ்.திருவாய்.5, 1, 8). |
| நிலந்தட்டி | nilan-taṭṭi, n. <>id. +. 1. An instrument for levelling or smoothing a floor or road; நிலஞ்சமனாக்கும் பலகை. (J.) 2. A seafish; |
| நிலந்தடி | nilantaṭi, n. See நிலந்தட்டி, 1. Nā. . |
| நிலந்தரஞ்செய் - தல் | nilan-tara-cey-, v. tr. <>நிலம்+. To destroy utterly, as razing to the ground; முற்றும் அழித்தல். துயராயினவெல்லா நிலந்தரஞ் செய்யும் (திவ்.பெரியதி.1, 1, 9). |
| நிலந்தருதிருவிற்பாண்டியன் | nilantaru-tiruviṟ-pāṇṭiyan, n. <>id. +. Pāṇṭiyaṉ of the second sangam in whose court Tolkāppiyam was first approved and published; தொல்காப்பியம் அரங்கேறிய அவைக்கு உரியோனும் இடைச் சங்கக் காலத்தவனுமான பாண்டியன் (தொல்.பாயி.) |
| நிலந்தருதிருவினெடியோன் | nilantaru-tiruviṉeṭiyōn, n. <>id. +. See நிலந்தருதிருவிற்பாண்டியன். புகழ்சால் சிறப்பி னிலந்தரு திருவினெடியோன்போல (மதுரைக்.763). . |
| நிலந்தெளிதல் | nilan-teḷital, n. <>id. +. Day-breaking; பொழுதுவிடிகை. |
| நிலநட்டம் | nila-naṭṭam, n. <>id. +. Loss on land by allowing it to lie fallow; சாகுபதி செய்யாமையால் உண்டாம் நஷ்டம். Loc. |
| நிலநெல்லி | nila-nelli, n. <>id. +. (K.Tu. nelanelli.) A common herb, Phyllanthus maderaspatensis; நெல்லிவகை. |
| நிலப்பரப்பு | nila-p-parappu, n. <>id. +. 1. Measure of land; நிலைப்பரப்பு. (W.) 2. Spread or extent of the earth; |
| நிலப்பலா | nila-p-palā, n <>id. +. Common jack fruit; வேர்ப்பலா. (சங்.அக.) |
| நிலப்பனை | nila-p-paṉai, n. <>id. +. Moosly or weevil root, curculigo orchioides; செடிவகை. (பதார்த்த.403.) |
| நிலப்பாகல் | nila-p-pākal, n. <>id. +. Balsam-apple, climber, Momordica humilis; பாகல்வகை. (மலை.) |
| நிலப்பாகை | nila-p-pākai, n. See நிலப்பாகல். (சங்.அக.) . |
| நிலப்பாலை | nila-p-pālai, n. <>நிலம்+. Round leaved discous featherfoil, s.tr., cleistanthus collinus; சிறுமரவகை. (L.) |
| நிலப்பாவாடை | nila-p-pāvātai, n. <>id. +. Cloth spread on the ground to walk on, as in a procession; நடைபாவாடை. (W.) |
| நிலப்பாளை | nila-p-pāḷai, n. perh. id.+. An annual. See அம்மான்பச்சரிசி. (சங். அக.) |
| நிலப்பிரயோசனம் | nila-p-pirayōcaṉam, n. <>id. +. Produce of the soil, profit on land; நிலவிளைவு. (W.) |
| நிலப்பிளப்பு | nila-p-piḷappu, n. <>id. +. Crack in the earth; கமர். (சங்.அக.) |
| நிலப்பீர்க்கு | nila-p-pīrkku, n. Species of luffa; பீர்க்குவகை. |
| நிலப்புழு | nila-p-puḻu, n. <>id. +. See நிலப்பூச்சி. (W.) . |
| நிலப்புழுக்கம் | nila-p-puḻukkam, n. <>id. +. See நிலக்கொதிப்பு. (யாழ்.அக.) . |
| நிலப்பூ | nila-p-pū, n. <>id. +. Flowers of grasses and herbs; புற்புதர்களிலுண்டாகும் பூ. நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ (திவ். இயற். திருவிருத். 55). |
| நிலப்பூச்சி | nila-p-pūcci, n. <>id. +. Mobcricket, Gryllotalpa forealis; பூச்சிவகை. (W.) |
| நிலப்பூசனி | nila-p-pūcaṉi, n. <>id. +. Panicled bindweed, l.cl., Ipomaea digitata; செடிவகை. (L.) |
| நிலப்பெயர் | nila-p-peyar, n. <>id. +. Names of persons derived from their countries, as aruvāḻaṉ, cōḷiyan; நிலம்பற்றி ஒருவனுக்கிடும் பெயர். நிலப்பெயர் குடிப்பெயர் (தொல்.சொல்.167). |
| நிலப்பெயர்ச்சி | nila-p-peyarcci, n. <>id. +. Change of place; இடமாறுகை. (யாழ்.அக.) |
| நிலப்பொட்டு | nila-p-poṭṭu, n. <>id. +. 1. See நிலச்சாந்து, (சங். அக.) . 2. A kind of medicinal fungus; |
| நிலப்போங்கு | nila-p-pōṅku, n. <>id. +. Quality of soil; நிலத்தன்மை. (W.) |
| நிலம் | nilam. n. perh. நில்-. (T. nēla, K. nela, M. nilam.) 1. Ground, earth, land; தரை. நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் (குறள், 452). 2. Soil; 3. Field; 4. The earth; the world; 5. Inhabitants of the world; 6. Place, region; 7. Rank; 8. Source of musical sound, as lettcks. syllables and metrical feet; 9. Object of sense; 10. Storey or upper floor of a house; 11. See நிலக்கள்ளி. (மலை.) |
