Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலவடலி | nila-vaṭali n. <>நிலம்+. Young palmyra tree ; சிறுபனை. (சங்.அக.) |
| நிலவடி | nila-v-ati n. <>id.+. 1. Threshing grain with the hand; கையினாலடிக்கும் கதிரடிப்பு. 2. Grain threshed by the hand on the threshing-floor; |
| நிலவடுப்பு | nila-v-atuppu n.<>id.+. A pit or hole dug in the ground, used as a fire-place; நிலத்தில் அமைக்கும் அடுப்புவகை. (W.) |
| நிலவம்மான்பச்சரிசி | nila-v-ammān-paccarici n. <>id.+. a kind of plant, Euphorbia indica; பூடுவகை. (A.) |
| நிலவர் | nilavar n. <>id. 1. Persons employed in sounding the depths of water, as in a river; நீரின் நிலையை முழுகியறிபவர். சமுத்திரத்தே நிலவராயிருக்குமவர்கள். முழுகி மண்கொள்ளுமாபோலே (திவ்.திருநெடுந். 18, 143). 2. Human beings; |
| நிலவரண் | nila-v-araṇ n.<>id.+. Natural defences consisting of arid expanse of earth, etc.; நீரும் நிழலுமில்லாத மருநிலமாகிய அரண்வகை. (குறல், 742, உரை.) |
| நிலவரம் | nila-varam n. <>நிலை3-+bhara. 1. [T. nilavaramu.] Permanence. See நிலைவரம், 1. பாக்கியங்க ணிலவரமென் றுன்னுகின்ற நெஞ்சன் (சிவரக. சிவதன்ம. 4). 2. [T. nilavaramu.] Condition. 3. Current price; |
| நிலவரி | nila-vari n. <>நிலம்+. Land-tax; அரசாங்கத்தினர்க்குச் செலுத்தும் பூமிவரி |
| நிலவருந்தி | nilavarunti n. <>நிலவு+அருந்து-. Greek partridge. See சகோரம்1. புது நிலவருந்தியும் (திருப்பு. 843). |
| நிலவலயம் | nila-valayam n. <>நிலம்+. Terrestrial globe, the earth; பூமண்டலம். நிலவலயந்தாங்கு நளன் (நளவெண். காப்பு). |
| நிலவறை | nila-v-aṟai n. <>id.+. Cellar, subterranean hall; பூமிக்குள் அமைந்த அறை. (பிங்) நிலவரை செயச்சிலர் விரைவார் (செவ்வந்திப்பு. உறையூரழித். 62). |
| நிலவாகை 1 | nila-vākai n. <>id.+. Tinnevelly senna, s. sh., Cassia angustifolia; செடிவகை. (மலை.) |
| நிலவாகை 2 | nila-vākai n. cf. நிலப்பாகை. See நிலப்பாகல். (மலை) . |
| நிலவாசி | nila-vāci n. <>id.+. Quality of the soil; நிலத்தன்மை |
| நிலவாடகை | nila-vāṭakai n. <>id.+. Ground-rent; மேலெழுப்புங் கட்டடத்துக்கன்றி நிலத்துக்குமாத்திரம் உரிய வாடகை. |
| நிலவாடை | nila-vāṭai n. <>id.+. See நிலவாசி. Loc. . |
| நிலவாரம் | nila-vāram n. <>id.+. Owner's share of the produce of land; மேல்வாரம். (W.) |
| நிலவாவிரை | nila-v-āvirai n. <>id.+. See நிலவாகை, 1. (மலை.) . |
| நிலவாழை | nila-vāḻai n. <>id.+. A plant; பூடுவகை. (சங். அக.) |
| நிலவிந்தை | nila-vintai n. <>id. A plant; பூடுவகை. (சங். அக.) |
| நிலவிரிசு | nila-viricu n. <>id.+. A kind of firework set on the ground; பூமியில் வைத்துக் கொளுத்தும் வாணவகை. Loc. |
| நிலவிலந்தை | nila-v-ilantai n. <>id.+. Jujube tree. See இலந்தை. (மூ. அ.) |
| நிலவிழுது | nila-viḻutu n. <>id.+. See நிலப்பனை. (மலை) . |
| நிலவிளா | nila-viḷā n. <>id.+. (L.) Wood-apple. See விளா Musk-deer plant. |
| நிலவிளாத்தி | nila-viḷātti n. <>id.+. See நிலவிளா, 1. (யாழ். அக.) . |
| நிலவிறிசு | nila-viṟicu n. See நிலவிரிசு (யாழ். அக.) . |
| நிலவீரம் | nila-vīram n. <>நிலம்+. See நிலவீரியம். Loc. . |
| நிலவீரியம் | nila-vīriyam n. <>id.+. A kind of medicinal earth; பூநீறு. (யாழ். அக.) |
| நிலவு - தல் | nilavu- 5 v. intr. 1. To be permanent, fixed; நிலைத்திருத்தல். யாரு நிலவார் நிலமிசை மேல் (நாலடி, 22); 2. To stay; 3. To exist, to be in use, in vogue or in circulation, as a word; to be extant, in force or practice, as a religion; 4. To emit rays; to shine; 5. To spread, extend, pervade; |
| நிலவு | nilavu n. <>நிலவு-. See நிலா. (பிங்.) நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து (நெடுநல். 95). . |
| நிலவுதயம் | nilavutayam n. <>நிலவு + உதயம். Moonrise; சந்திரோதயம். (W.) |
