Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலுவைக்காரன் | niluvai-k-kāraṉ n. <>நிலுவை+. 1. Debtor; கடன்காரன். (W.) 2. One who collects arrears; |
| நிலுவையஞ்சனா | niluvai-y-acaṉā n. <>id.+. Estimate of the probable out-turn of standing crops; விளைச்சல்மதிப்பு. (C. G.) |
| நிலுவையறுவிடு - தல் | niluvai-y-aṟuviṭu- v. intr. <>id.+. To recover arrears; பாக்கியை வசூலித்தல். (W.) |
| நிலை | nilai, n. <>நில்-. [T. nelavu, L. nele, M. nila.] 1. Standing, staying; நிற்கை. 2. Firmness, fixedness, stability permanence, durability; 3. Character; quality; temper; nature; 4. Condition, state, situation; 5. Profession, vocation, calling; 6. Place, seat, location; 7. Stopping place, station, stand, residence; 8. Earth; 9. See நிலைத்திணை. (நாமதீப. 373.) 10. Storey, floor, as of a building; siting room in a car; 11. Door frame; 12. Pillar; 13. Standard, as of a lamp; 14. Prescribed path; 15. Usage, custom; 16. Stages of religious life; 17. Family, tribe; 18. Inheritance, hereditary right; 19. A kind of song; 20. Time; 21. A unit of time; 22. A land measure for dry lands; 23. Depth of water allowing one to stand in, opp. to nīccu; 24. Attitude in archery, numbering four, viz., paicācam, maṇṭalam, ālītam, pirattiyālīṭam; 25. A pendant of a jewel; Cow-dung evacuated at a time; |
| நிலை - தல் | nillai-, prob. 4 v. intr. <>நிலை. To remain permanent to stay; நிலைத்து நிற்றல். உம்மை நிலையு மிறுதி யான (தொல்.எழுத்.189) |
| நிலை - த்தல் | nilai-, 11 v. intr. <>id. [K. nelasu.] 1.To obtain a footing; to be settled, lasting; ஸ்திரப்படுதல். 2. To delay, stay too long in a place; 3. To be just deep enough to allow a man to stand, as a river; |
| நிலைக்கட்டு - தல் | nilai-k-kaṭṭu-, v. tr. <>நிலை+. To establish, make permanent; நிலைக்கச்செய்தல். Loc. |
| நிலைக்கடகம் | nilai-k-kaṭakam, n. <>id.+. A large basket; பெருங்கூடை. (J.) |
| நிலைக்கண்ணாடி | nilai-k-kaṇṇāti, n. <>id. +. [K. niluguṇṇādi] A large fixed mirror; முகம் பார்க்கும்படி ஓரிடத்து நாட்டப்பட்ட பெரிய கண்ணாடி. கட்டிற் றவிசொடு நிலைக்கண்ணாடி (சீவக.558) |
| நிலைக்கதவம் | nilai-k-katavam, n. <>id.+. Door fixed on a frame; நிலையிலமைந்த கதவு. முழு நிலைக்கதவ மகற்றி முன்னின்று (பெருங்.மகத.13,71). |
| நிலைக்கல் | nilai-k-kal, n. <>id.+. Bezoar ஆட்டுரோசனை. (W.) 2. Stone base for door-frame; |
| நிலைக்களப்போலி | nilai-k-kaḷa-p-pōli, n. <>நிலைக்களம்+. A letter substituted for another; ஓரெழுத்து நின்ற இடத்தில் அதற்குப் போலியாய்வரும் எழுத்து. (யாழ்.அக) |
| நிலைக்களம் | nilai-k-kaḷam, n. <>நிலை+. Stand, standing place; தங்குமிடம். போர்யானை யாக்கு நிலைக்களம் (ஏலாதி, 12) |
| நிலைக்கால் | nilai-k-kāl n. <>id. +. Stand, leg, as of a sofa; கட்டில் முதலியவற்றின் கால். நிலைக்கா லமைந்த கட்டிலுள் (பெருங். மகத. 14,54). 2. See நிலை,11. (W.) |
| நிலைக்கிடாரம் | nilai-k-kiṭāram, n. <>id.+. A big vessel kept stationary; பெரிய பாத்திரவகை. |
| நிலைக்கிடை | nilai-k-kiṭai,. n. <>id. +. A sitting pose, in dancing; நாட்டியத்தில் உட்காரும் நிலை. நிலைக்கிடைகொண்டாள் (விறலிவிடு.413) |
| நிலைக்குடி | nilai-k-kuṭi, n. <>id. +. 1. Settled or ancient inhabitants; பழங்குடி. (யாழ்.அக.) 2. Permanent servants of a landlord engaged in agricultural operations; |
