Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலைக்குத்து - தல் | nilai-k-kuttu-, v. intr. <>id. +. To be fixed or rigid, as the eye at the dying stage; மரணத்தறுவாயில் விழி முதலியன அசைவின்றி நிற்றல். Colloq. |
| நிலைகலங்கு - தல் | nilai-kalaṅku-, v. intr. <>id.+. See நிலைகுலை-, 1. ஐந்துபுல னிலைகலங்குமிடத்து (பெரியபு. திருஞான.301) . |
| நிலைகுலை - தல் | nilai-kulai-, v. intr. <>id. +. 1. To be ruined in circumstances; நிலைமைதவறுதல். 2. To swerve from the path of virtue; 3. To be discouraged; to lose self-command; to be disconcerted, perplexed; 4. To lose hold; to be unstrung; 5. To be routed, as an army; |
| நிலைகுலை - த்தல் | nilai-kulai-, v. tr. Caus. of நிலைகுலை-. 1.To ruin; நிலைமையழித்தல்; 2. To seduce, ravish; 3. To cause to swerve from the path of virtue or to neglect religious observances; 4. To rout, as an army; 5. To intimidate, disconcert; |
| நிலைகேடு | nilai-kēṭu, n. <>நிலை+. [K. nilegēdu.] Straitened circumstances, loss of position; கெட்டுப்போன நிலைமை. |
| நிலைகொள்(ளு) - தல் | nilai-koḷ-, v. intr. <>id.+. [K.nilegōḷa.] 1.To be permanent to remain firm; உறுதியாதல். 2. To come into its natural state, as a diseased mind; 3. To be just deep enough to allow one to stand in; |
| நிலைகோலு - தல் | nilai-kōlu-, v. intr. <>id.+. (யாழ்.அக.) To array, as force; அணிவகுத்தல். 2. To seek shelter; |
| நிலைச்செண்டு | nilai-c-ceṇṭu, n. <>id.+. A kind of ball played standing on the ground; நிலத்தில் நின்றெறிந்து விளையாடும் பந்து. நிலச் செண்டும் பரிச்செண்டும் வீசி மிகமகிழ்வெய்தி (பெரியபு. சேரமான்.126) |
| நிலைச்செரு | nilai-c-ceru, n. <>id. +. Continuous engagement in war-operation; இடையறாப் போர். நிலைச்செருவினாற் றலையறுத்து (பதிற்றுப்.ஐந்தாம்.பதி) |
| நிலைசெல்(லு) - தல் | nilai-cel-, v. intr. <>id. +. See நிலைகொள்-. . |
| நிலைத்தண்ணீர் | nilai-t-taṇṇīr, n. <>id. +. Standing water, as in pools, tanks; நிலையாயுள்ள நீர். Colloq. |
| நிலைத்தானம் | nilai-t-tāṉam, n. <>id. +. Shrine; கோயில். கானும் பலபதியு மந்நிலைத் தானங்கள் (பெரியபு.திருநான.340) |
| நிலைத்திணை | nilai-t-tiṇai, n. <>id. +. The category of the immoveables, as the vegetable kingdom, opp. to iyaṅku-tiṇai; அசரம். இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு. (தொல்.எழுத்.46, உரை) |
| நிலைத்திருவமிர்து | nilai-t-tiru-v-amirtu, n. <>id. +. Permanent endowment for daily offerings in a temple; கோயிலில் தினசரி நிவேதனத்திற்கு விடப்பட்ட சாசுவத தருமம் (S.I.I.iii, 96.) |
| நிலைத்துறை | nilai-t-tuṟai, n. <>id. +. The usual bathing-ghat; வழக்கமா யிறங்கும் நிலையாழமுள்ள நீர்த்துறை. நிலைத்துறை வழீஇய மதனழிமாக்கள் (மலைபடு.280) |
| நிலைத்தேர் | nilai-t-tēr, n. <>id.+. Standing decorated car; அலங்காரஞ் செய்து நிறுத்தப்படும் இரதம். விளங்குறு நிலைத்தேர் செய்தார் (பிரபுலிங்.சூனிய.இருந்த.40) |
| நிலைத்தேர்மூடு | nilai-t-tēr-mūṭu, n. <>id.+. The place where a temple-car ordinarily stands; தேரை வழக்கமாய் நிறுத்தும் இடம். Loc. |
| நிலைதடுமாறு - தல் | nilai-taṭumāru-, n. <>id.+. See நிலைகுலை-. . |
| நிலைதவறு - தல் | nilai-tavaṟu v. intr. <>id.+. See நிலைகுலை-. . |
| நிலைதளம்பு - தல் | nilai-taḷampu-, v. intr. <>id. +. (W.) To be unstable; நிலையற்றிருத்தல். 2. To be unsettled, as a family, a government; 3. See நிலைகுலை-, 1,2. 4. To be neglected, as one's property or affairs; |
| நிலைதளர் - தல் | nilai-taḷar-, v. intr. <>id.+. See நிலைகுலை . |
| நிலைதிரி - தல் | nilai-tiri-, v. intr. <>id.+. To swerve from principle; முறைகெடுதல். யாது நிலைதிரியான். (ஏலாதி, 3) |
| நிலைநாட்டு - தல் | nilai-nāṭṭu-, v. tr. <>id.+. To establish; தாபித்தல். Colloq. |
| நிலைநில் - தல் | nilai-nil-, [நிலைநிற்றல்] v. intr. <>id.+. 1. To stand firm, as in one's principles; கொள்கைமுதலியவற்றில் உறுதியாயிருத்தல். 2. See நிலைபெறு-, 1. |
