Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலைநிறுத்து - தல் | nilai-niṟuttu-, v. tr. <>id.+. 1. To set up, establish; தாபித்தல். கீர்த்தி நிலைநிறுத்திக் கொண்டோம் (தனிப்பா.i, 216, 2). 2. To prove conclusively; |
| நிலைநீர் | nilai-nīr, n. <>id.+. 1.Still water, as in a tank; ஓட்டமற்றநீர். கூவ நீணிலைநீர்களும் பசையறக் குடித்தான் (திருவிளை, அன்னக்.7). 2. Ocean; |
| நிலைநீர்ப்பாட்டம் | nilai-nīr-p-pāṭṭam, n. <>நிலைநீர்+. Tax on tank-water used for irrigation, opp. to oḷukku-nīr-p-pāṭṭam; ஏரிப்பாய்ச் சல்வரி. (Insc.) |
| நிலைப்பட்டம் | nilai-p-paṭṭam, n. <>நிலை+. Absolute title, as to a property; permanent interest; சாசுவதவுரிமை. Loc. |
| நிலைப்படி | nilai-p-paṭi, n. <>id.+. Sill, threshold; கதவுநிலையின் அடிப்படி. வன்மீகன் சந்துரைத்துநின்ற நிலைப்படியாயிருந்தேனில்லை தீவினையே (தனிப்பா.). |
| நிலைப்படு - தல் | nilai-p-paṭu-, v. intr. <>id.+. 1.To become permanent, stationary; திரமாதல். 2. To be fixed, steady; to remain firm; 3. To become definite or certain; |
| நிலைப்படுத்து - தல் | nilai-p-paṭuttu-, v. tr. Caus. of நிலைப்படு-. See நிலைநிறுத்து-. . 2. To make firm or steady; 3. To make Certain; |
| நிலைப்படை | nilai-p-paṭai, n. <>நிலை+. Standing army stationed in the capital of a country; காவற்குத் தலைநகரிலேயே நிறுத்திவைக்கப்பட்ட சேனை. (Insc.) |
| நிலைப்பதம் | nilai-p-patam, n. <>id.+. See நிலைமொழி. (நன். 242, மயிலை) . |
| நிலைப்பரப்பு | nilai-p-parappu, n. <>id.+. A measure of land; ஒருவகை நிலவளவை. (J.) |
| நிலைப்பல்லி | nilai-p-palli, n. <>id.+. Lizard that chirps frequently from the same place; ஓரிடத்திலே பலகாலுஞ் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி. (ஈடு.4, 9, 3, ஜீ) |
| நிலைப்பாடு | nilai-p-pāṭu, n. <>id.+. (K. nilevēdu.] 1. Condition, state; நிலைமை. தம்மிறைக் கியன்ற நிலைப்பாடெல்லாம் நெஞ்சுணக் கேட்டு (பெருங்.வத்தவ.4, 32). 2. Firmness, permanence, durability; |
| நிலைப்பு | nilaippu, n. <>நிலை-. 1.Permanence, continuance, durability; ஸ்திரம். 2. Perseverance, persistence; |
| நிலைப்பூட்டு | nilai-p-pūṭṭu, n. <>நிலை+. A kind of lock fitted on a door; கதவில் தைக்கப்பட்ட பூட்டுவகை. Tinn. |
| நிலைப்பெறு - தல் | nilai-p-peṟu-, v. intr. <>id+. [K.nilevēṟu.] To be at rest; சலியாதிருத்தல். நிலைப்பெற்றென் னெஞ்சம் (திவ்.திருவாய்.3, 2, 10) |
| நிலைபரம் | nilai-param, n. <>id.+ bhara. See நிலைவரம் . |
| நிலைபிடி - த்தல் | nilai-piṭi-, v. intr. <>id. +. (W.) 1.To settle down, as by getting an office or residence for oneself; தொழில் முதலியனபேற்று நிலையாயிருத்தல். 2. To reach the goal; |
| நிலைபெறு 1 - தல் | nilai-peṟu-, v. intr. <>id.+. 1. To stay firmly; திரமாய்த்தங்குதல். வேற்றுமையுருபு நிலைபெறு வழியும் (தொல்.எழுத்.132) 2. To gain a resting place; to secure peace; 3. To endure; 4. To be fathomable; |
| நிலைபெறு 2 - த்தல் | nilai-peṟu-, v. tr. Caus. of நிலைபெறு-. 1. See நிலைநிறுத்து-. . 2. To maintain, protect; |
| நிலைபேறு | nilai-pēru-, n. <>நிலை+. 1.Permanence, stability; உறுதி. 2. Firm footing or situation; 3. Pillar or post; 4. Final bliss; 5. Honour, reputation; |
| நிலைபொலியூட்டு | nilai-poli-y-ūṭṭu, n. <>id.+. Interest secured permanently, as on a deposit; சாசுவதவட்டி. (I.M.P.Cg.1048.) |
| நிலைபோடு - தல் | nilai-pōṭu-, v. tr. <>நிலை+. To begin; தொடங்குதல். (யாழ்.அக) |
| நிலைமடக்கு | nilai-maṭakku, n. <>id. +. (Rhet.) A figure of speech; அணிவகை. (திவா.) |
| நிலைமண் | nilai-maṇ, n. <>id. +. Natural soil, opp. to koṭṭu-maṇ; இயற்கையான மண்.(J.) |
| நிலைமண்டிலம் | nilai-maṇṭilam, n. <>id. +. See நிலைமண்டிலவாசிரியப்ப. (இலக்.வி.734) . |
| நிலைமண்டிலவாசிரியப்பா | nilaimaṇṭila-v-āciriyappā, n. <>நிலைமண்டிலம்+. A kind of āciriyappā, in which all the lines have the same number of feet சீர்கள் தம்மில் அளவொத்த அடிகளையுடைய ஆசிரியம். (இலக்.வி.734, உரை) |
