Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலவுநாழிகை | nilavu-nāḻikai n. <>id.+. Time, as measured by the moon's shadow; சந்திர னிழலைக்கொண்டு கணிக்கும் நாழிகை. (யாழ். அக.) |
| நிலவுபடுதல் | nilavu-paṭutal n. <>id.+. Setting of the moon; சந்திராஸ்தமனம். (W.) |
| நிலவுபிறை | nilavu-piṟai n. <>id.+. A kind of head-ornament of women. See சந்திரப்பிரபை, 2. நெற்றிச் சுட்டியும் நிலவுபிறையும். Tinn. |
| நிலவுமரி | nila-v-umari n. <>நிலம்+. Seablite. See உமரிக்கீரை. (L.) |
| நிலவுலகம் | nila-v-ulakam n. <>id.+. The earth; பூமி. |
| நிலவூறல் | nila-v-ūṟal n. <>id.+. Dampness of soil; பூமிக்கசிவு. (யாழ். அக.) |
| நிலவெக்கை | nila-vekkai n. <>id.+. Earth's heat on account of hot sun; வெயில் காய்ந்ததால் நிலத்தில் உண்டாம் வெப்பம். |
| நிலவெடுப்பு | nila-v-eṭuppu n. <>id.+. Breaking new soil; முதலுழவு. (J.) |
| நிலவெழுத்து | nila-v-eḻuttu n. <>id.+. Letters written on the ground by schoolboys; தரையிற் பிள்ளைகளெழுதும் எழுத்து. (W.) |
| நிலவேம்பு | nila-vēmpu n. <>id.+. [T. nēlavēmu, K. nelabēvu, M. nilavēppu.] (M. M. 177.) 1. French chiratta, s.sh., Andrographis paniculata; செடிவகை. 2. chiretta, s.sh., Swertia chirata; |
| நிலவேர் | nila-vēr n. <>id.+. Earthworm; பூநாகம். (நாமதீப. 266.) |
| நிலா | nilā n. <>நிலாவு-. [M. nilā.] 1. Moonlight; சந்திரிகை. விசும்பி னகனிலாப் பாரிக்குந்திங்களும் (நாலடி, 151). 2. [T. nela.] Moon; 3. Light, splendour; |
| நிலாக்கல் | nilā-k-kal n. <>நிலா+. Moonstone. See சந்திரகாந்தம். நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும் (சூளா. இரத. 74). |
| நிலாக்கொழுந்து | nilā-k-koḻuntu n. <>id.+. The young moon; இளம்பிறை. (W.) |
| நிலாச்சாப்பாடு | nilā-c-cāppāṭu n. <>id.+. Moonlight picnic; நிலாவில் உண்ணும் உண்டி. |
| நிலாத்திரி | nilā-t-tiri n. <>id.+. Light displayed in fireworks; மத்தாப்பு. தடத்து நீர் நிலாத்திரி (கைவல். சந்.41). |
| நிலாப்பதிவு | nilā-p-pativu n. <>id.+. Dark fortnight; கிருஷ்ணபக்ஷம். (W.) |
| நிலாப்பூச்சி | nilā-p-pūcci n. <>id.+. A game like 'prisoner's base' in which one party of children is considered to be defeated if, as they stand in moonlight, they are touched by the opposing party; நிலவில் நிற்கும்போது எதிர்க்கட்சியினரால் தொடப்படின் தோல்வியுறுவதாகக் கருதப்படும் சிறுவர் விளையாட்டுவகை. |
| நிலாமண்டபம் | nilā-maṇṭapam n. <>id.+. See நிலாழுற்றம். மாடமிசை யோங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தோன் (அருட்பா, vi, தலைவிவருந்தல், 10) . |
| நிலாமண்டலம் | nilā-maṇṭalam n. <>id.+. Sphere of the moon; சந்திரமண்டலம். (யாழ். அக.) |
| நிலாமணக்கு | nilāmaṇakku n. perh. நிலம் + ஆமணக்கு. A plant; பூடுவகை. (சங். அக.) |
| நிலாமணி | nilā-maṇi n. <>நிலா+. Moonstone. See சந்திரகாந்தம். (W.) |
| நிலாமாடம் | nilā-māṭam n. <>id.+. See நிலாமுற்றம். முழுநிலா மாடத்து முடிமுத றழுவ (பெருஞ். உஞ்சைக். 54, 11) . |
| நிலாமுக்கி | nilā-mukki n. <>id.+ prob. முக்கு-. See நிலாமுகி. (நாமதீப. 245.) . |
| நிலாமுகி | nilā-muki n. <>id.+. Cakōra, the Greek partridge, Caccabis graeca, as feeding on moon-beams; சந்திரகிரணங்களை உணவாகக் கொண்டு வாழ்வதாகக் கருதப்படும் புள்வகை. (திவா.) |
| நிலாமுற்றம் | nilā-muṟṟam n. <>id.+. Terrace for enjoying the moonlight; நிலவின்பம் துய்க்கும் திறந்த மேன்மாடம். (திவா.) நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் (திவ். பெரியதி. 8, 2, 2). |
| நிலாவிரை | nilāvirai n. <>நிலம்+ஆவிரை. See நிலவாகை. (பதார்த்த. 1059) . |
| நிலாவிளையாட்டு | nilā-viḷaiyaṭṭu n. <>நிலா+. See நிலாப்பூச்சி. Loc. . |
| நிலாவு - தல் | nilāvu- 5 v. <>நிலவு-. intr. See நிலவு-, நிலாவாப் புலாற்றானம் (தேவா. 1224, 2).-tr. . 1. To meditate upon; 2. To resemble; |
| நிலுவை | niluvai n. <>நில்-. [T. niluva, M.nilavu.] 1. Standing, staying; தங்குகை. நோயு நிலுவை கொண்டது (திருப்பு.1111) 2. Balance, as of dues; arrears; |
