Word |
English & Tamil Meaning |
|---|---|
| படர்பயிர் | paṭar-payir n.<>id. +. climber, creeper, as a spreading plant ; படர்கின்றகொடி. படர்பயிர்க்குக் கொளுகொம்பாங் கொள்கையாலே (குற்றா.தல. மந்தமா.34) |
| படர்புண் | paṭar-puṇ, n.<>id. +. spreading ulcer புண்வகை. (இவ்.வை.302) |
| படர்மல்லிகை | paṭar-mallikai n.<>id. +. Large flowered jasmine See சாதிமல்லிகை (W.) . |
| படரடி | paṭar-aṭi, n.<>id. +. scattering; beating சிதறவடிக்கை(W.) |
| படரப்பன் | paṭarappaṉ, n. Emetic nut, m.tr., Randia gardneri; காரைவகை.(L.) |
| படரிலந்தை | paṭar-ilantai, n.<>படர்- +. a kind of jujube; படரக்கூடிய இலந்தைவகை. Loc. |
| படருருக்கி | paṭar-urukki, n.perh. id.+. A kind of dog-prick. See செந்நாயுருவி. . |
| படரை | paṭarai, n.perh. id. Tanner's senna. See ஆவிரை. (சங். அக.) . |
| படல் | paṭal, படு-. (M. paṭal.) 1.cf. paṭala. Small shutter of braided palm leaves or thorns; பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு. படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்கு. (திவ். பெரியதி, 4, 4, 3). 2.cf. paṭala. A kind of hurdle or wattled frame for sheltering cattle; sun-shade; a kind of tatty against sun, rain or wind, used in a shed, bazaar or hovel, or before a shop: 3.Frames of various designs adorned with flowers and fastened on to a temple-car, etc.; 4.A kind of ola umbrella; 5.Hole of a yard-arm or sailyard; 6.Sleep; உறக்கம். படலின் பாயல் (ஐங்குறு. 195) |
| படலம் | paṭalam n.<>paṭala. Mass, as of clouds;heap, drift, as of dust; stellar group; கூட்டம். உதிர்ந்த துடுபடலம் (கந்த ரலங். 12). chapter or section in a poem or treatise; canopy; The hollow, as of a crown; Film or cataract in the eye; Lamina, layer, scale, cuticle Region, world; Flaw, obscurity, dimness or opaque spot in a gem; Train,retinue; Tilka; |
| படலிகை 1 | paṭalikai n. prob. படர்-. circle, circular surface; வட்டவடிவு. (பிங்); Hand-bell; A large species of luffa; Weariness, fatigue |
| படலிகை 2 | paṭalikai n.<>patalika. cataract of the eye கண்ணோய்வகை படலிகை வயங்கிய நோக்கத்தார் (கந்தபு. மார்க்.68); Basket or tray for flowers; |
| படலிடம் | paṭal-iṭam, n.<>படல்+. Hut, as made of leaves ; குடிசை. (கல்லா.96) |
| படலியம் | paṭaliyam n. one of the equipments of a horse குதிரைப் பண்ணமைக்கும் கருவிகளுள் ஒன்ரு படலியம் பழுக்கமொடு (பெருங். இலாவாண.18, 14) |
| படலை 1 | paṭalai, n. <>படர்-. 1. Spreading, expanding; படர்கை. (பிங்.); 2. Expanse; 3. Broad-headed drum; 4. Leaves; 5. See படலைமாலை. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை (ஐங். 370). |
| படலை 2 | paṭalai, n. <>paṭala. 1. Mass, heap, file, drift; கூட்டம், மூடின திருட்படலை மூவுலகும் (கம்பரா. மாரீச.46). 2. String of small tinkling bells for a horse; 3. A bunch of fruits; 4. See படல். 1. படலைமூன்றில் (புறநா. 319). |
| படலைக்கண்ணி | paṭalai-k-kaṇṇi, n. <>படலை+. See படலைமாலை. பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (பெரும்பாண். 174). . |
| படலைமாலை | paṭalai-mālai, n. <>id. +. Garland of green leaves and flowers; பச்சிலையோடு மலர்கள் விரவித்தொடுத்த மாலை. முறிமிடை படலைமாலைப் பொன்னிழை மகளிர் (சீவக. 483). |
| படவம் | paṭavam, n. See படகம், 3. இடி யுறழ் முரசுஞ் சங்க படவமும் (பெருங். உஞ்சைக். 57, 58). . |
| படவன் | paṭavaṉ, n. <>படவு. Boatman ; படகோட்டி. படவர் மடமகளிர் (திருப்போ. சந். பிள்ளைத். முத்.4). |
| படவா | paṭavā n. <>U. bharwā 1. Rascal, base scoundrel; போக்கிரி. 2. Pimp; 3. Prostitute; |
