Word |
English & Tamil Meaning |
|---|---|
| படவாசகம் | paṭavācakam, n. <>paṭa-vāsa-ka. Perfumed powder ; வாசனைத்தூள். (யாழ்.அக.) |
| படவாள் | paṭavāḷ, n. Corr. of படைவாள். (W). |
| படவீடு | paṭa-vīṭu, n. <>படம்+. See படமாடம். . |
| படவு | paṭavu, n. (T. padava, K. padahu, M. paṭavu, Tu padavu.) Small boat ; சிற்றோடம். படவதேறி (திருவாச. 43, 3). |
| படவை | paṭavai, n. 1. A diffuse prostrate herb. See செருப்படை. (மலை.) . 2. Asarabacca, acrid herbaceous plant, Asarun europaeum; |
| படற்கள்ளி | paṭaṟ-kaḷḷi, n. prob. படல்+. Common prickly-pear. See சப்பாத்துக்கள்ளி, 1. (W.) . |
| படற்றி | paṭaṟṟi, n. (M. paṭaṟṟi.) A kind of plantain; வாழைவகை. Nā. |
| படன் | paṭaṉ, n. <>bhaṭa. 1. Warrior; படைவீரன். (யாழ். அக.) 2. Yama's messenger; 3. Degraded person; 4. Goblin; |
| படனம் | paṭaṉam, n. <>paṭhana. 1. Act of reading, reciting; படிக்கை. 2. Lesson learned by heart; |
| படா 1 | paṭā, n. Bedaly emetic nut . See பிடா. கார்க்கொள் படாக்கள் நின்று (திவ். நாய்ச். 9,2). . |
| படா 2 | paṭā, adj. <>U. barā. Large, great; பெரிய . |
| படாக்கொட்டில் | paṭā-k-koṭṭil, n. <>படாம்+. See படமாடம். படாக்கொட்டிலும் பண்டிபண்டாரமும் (பெருங். மகத. 23, 36). . |
| படாகா | paṭākā, n. <>U. paṭākhā. Firecracker, squib, gun-cap; பட்டாசு. LOc. |
| படாகி | paṭāki, n. <>U. barāī. 1. Pride, boasting; கர்வம். (W.) 2. Liar; |
| படாகை | paṭākai, n. <>paṭākā. 1.Flag, banner; கொடி. பாவை விளக்குப் பசும்பொற் படாகை (சிலப். 5, 154). 2. Division of a country: district: 3. A cluster of cottages at some distance from a village, erected for the convenience of carrying on agricultural operations; 4. Multitude, collection; |
| படாங்கு 1 | paṭāṅku, n. <>பட்டாங்கு. Jest; பாசாங்கு.(W.) |
| படாங்கு 2 | paṭāṅku, n. <>paṭa. Red cloth; சிவப்புநிறமுள்ள ஆடை. Loc. |
| படாச்சாரம் | paṭāccāram, n. An acid salt; சத்திச்சாரம். (சங்.அக.) |
| படாசு | paṭācu, n. <>U. paṭākhā. Firecracker; காகிதச்சுருட்டு வெடி. |
| படாடோபம் | paṭāṭōpam, n. <>phaṭāṭōpa. Ostentation; நடையுடைபாவனையாற் செய்யும் பகட்டு. |
| படாதுபடு - தல் | paṭātu-paṭu-, v. intr. <>படு1-+ஆ neg.+. To suffer extreme misery; மிகத்துன்புறுதல். அடாதது செய்வதன் படாதுபடுவான். |
| படாந்தரக்காரன் | paṭāntara-k-kāraṉ, n. <>படாந்தரம்+. A gross liar; முழுப்பொய்யன்.(W.) |
| படாந்தரம் | paṭāntaram, n. perh. படு1-+அந்தரம். 1. Gross lie; false story; fabrication; முழப்பொய். (சங்.அக.) 2. Colouring, exaggeration; 3. Absence of cause or reason; |
| படாந்தரம்போடு - தல் | paṭāntarampōṭu-, v. intr. <>படாந்தரம்+. To speak gross lies; முழப்பொய் கூறுதல். (W.) |
| படாந்தரமடி - த்தல் | paṭāntaram-aṭi-, v. intr. <>id.+. See படாந்தரம்போடு-. (W.) . |
| படாநிந்தை | paṭā-nintai, n. <>படு1-+ஆ neg.+. Baseless or unjust accusation; அடாப்பழி. |
| படாப்பஞ்சம் | paṭā-p-pacam, n. <>id.+id.+. That which is scarce or rare; கிடைத்தற்கருமையானது. அந்தப்பண்டம் படாப்பஞ்சமாயிருக்கிறது. Colloq. |
| படாப்பழி | paṭā-p-paḻi, n. <>id.+ id.+. See படாநிந்தை. . |
| படாபஞ்சனம் | paṭā-pacaṉam, n. <>id.+ id.+ bhajana. Destruction, extirpation; தீர்க்கநாசம். (W.) |
| படாபழி | paṭā-paḻi, n. See படாப்பழி. (யாழ். அக.) . |
| படாம் | paṭām, n. <>paṭa. 1. Cloth; சீலை. படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ (புறநா.141). 2. Curtaim, screen; 3. Large flag; 4. See படமாடம். சித்திரப்படாத்துப் புக்கான் (அரிச். பு. வேட்டஞ். 87). 5. Cloth adorning the face of an elephant; |
